Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சிக்கன் பஜ்ஜி வறுவல் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சிக்கன் பஜ்ஜி வறுவல் ~ (Read 74 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218374
Total likes: 23062
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சிக்கன் பஜ்ஜி வறுவல் ~
«
on:
April 02, 2016, 09:53:40 PM »
சிக்கன் பஜ்ஜி வறுவல்
தேவையான பொருள்கள்
சிக்கன் – 1/2 கிலோ
பூண்டு – 1 முழு பூண்டு
இஞ்சி – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 5
சோம்பு – 2 தேக்கரண்டி
நல்ல மிளகு – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
கறிவேப்பிலை – 2 கொத்து
கடலை மாவு – 1 /2 கப்
தேங்காய் – 1/4 மூடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
*சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.
* மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து மைப்போல் அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும்.
* பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவையான உப்பு சேர்த்து மீண்டும் பிசறி விட வேண்டும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.
*கடலை மாவுடன், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து திக்காக பஜ்ஜி மாவு போல் செய்து கொள்ளவும்.
* தேவையெனில் அரிசி மாவும், ஆப்ப சோடாவும் சேர்க்கலாம்.
* கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை கடலை மாவில் தோய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்நிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.(பொரிக்கும்போது கடலை மாவு வாசனையில்லாமல் இருக்க வேண்டும்)
*மற்றுமொரு கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கவும்.
*இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக வதக்கி விடவும்.
*இத்துடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மல்லிதழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான சிக்கன் பஜ்ஜி வறுவல் ரெடி!!!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சிக்கன் பஜ்ஜி வறுவல் ~