Author Topic: English - Tamil Dictionary ( தானுந்து அருஞ்சொற்பொருள்-AUTOMOBILE GLOSSARY)  (Read 4159 times)

Offline RemO

RACK AND PINION STEERING - இத்திருப்பி அமைப்பில், பற்சிலி (rack) சக்கரங்களை இணைக்கும் அச்சாணியில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லோடி திருப்பித்தண்டில் (steering shaft) அமைந்துள்ளது. பல்லோடியும்பற்சிலியும் சக்கரத்திருப்பி அமைப்பு திருப்பியக்கத்தை சக்கர அச்சாணியின் நேரியல் இயக்கமாக மாற்றுகிறது;

RADIATOR -
கதிர்வீசி

REAR WHEEL DRIVE - பின்னியக்க, பின்னியக்கூர்தி -

RECIRCULATING BALL STEERING - மறுசுழல்பந்து திருப்பி - இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது.

Offline RemO

SEDAN - சரக்கறை சீருந்து

SHOCK ABSORBER
- அதிர்வேற்பி

SPARK PLUG - தீப்பொறிச்செருகி

SPEED GOVERNOR
- வேகக்கட்டுப்பாட்டுக்கருவி

STEERING - சக்கரத்திருப்பி

STEERING ROD -
திருப்பிக் கரம்

STEERING SHAFT - திருப்பித் தண்டு

STRUT -
உதைசட்டம்

SUCTION TUBE - உறிஞ்சு தூம்பு

SUPERCHARGED ENGINE - மிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி

SUPERCHARGER - மிகையூட்டி

SUSPENSION
- தொங்கல்

Offline RemO

THROTTLE - நெரிப்பி

THROTTLE-BODY - நெரிப்பகம்

THROTTLE-BODY FUEL INJECTION (TBI) - நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது

THROTTLE CHAMBER - நெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம்

THROTTLE PLATE - நெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும்

THROTTLE POSITION SENSOR (TPS) - நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும்

TURBOCHARGED ENGINE - சுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி

TURBOCHARGER - சுழலூட்டி

Offline RemO

WORM GEAR - புழு பற்சக்கரம்

Offline RemO