ஹாய் மாஸ்டர் வணக்கம் உங்கள் நிகழ்ச்சி கேட்க மிக இனிமை நல்ல படி தொடர வாழ்த்துக்கள் .இந்த வாரம் நான் முதலில் இடம் பிடித்து இருக்கேன் மிக்க மகிழ்ச்சியா இருக்கு இசையில் வென்ற படங்கள் வரிசையில் நான் இந்த வாரம் கேட்க விரும்பும் படம் சலங்கை ஒலி .இந்த படத்துக்கு இசை ஞானி மிக மிக அற்புதமா இசை அமைத்து இருப்பார் .இந்த படத்துல அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது ஒரு காலத்தில் .இந்த படத்துல மௌனமான நேரம் ,நாத வினோதங்கள் ,ஓம் நமச்சிவாய ,தகிட ததுமி ,வான் போலே வண்ணம் ,வேதம் அணுகிலும் ,வளழ கானகம ஆகிய பாடல்கள் மிக அருமை இதுல எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மௌனமான நேரம் என்ற பாடல் இந்த பாடலை FTC நண்பர்களுக்காக கேட்கறேன் மாஸ்டர் .போட்டு அசத்துங்கள் .நன்றி மாஸ்டர்