தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

(1/21) > >>

எஸ்கே:
வால் துண்டாகி விட்டாலும் பல்லிகள் சுறுசுறுப்பாய் ஓடுகிறதே எப்படி?


ஆபத்து காலத்தில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவே , இந்த வால் துண்டாதல் (டெயில் பிரேக்கிங்) சிஸ்டத்தை பல்லிகள் வைத்து இருக்கின்றன. துண்டாகி போன வால், பட பட என துடிப்பதையே எதிரி பார்த்து கொண்டு இருக்க , அந்த இடைவேளையில் பல்லி தப்பித்து ஓடி விடும். இதற்கு வசதியாக பல்லியின் வால் எலும்புகள் மிக மென்மையாக இருக்கும், அது தவிர மேல் தோலில் இருக்கும் செதில்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. கதவு இடுகிலோ அல்லது வேறு பெரிய பூச்சியின் வாயிலோ சிக்கி வால் துண்டானதும் துண்டான இடத்தில் இருக்கும் சுறுங்கு தசை உடனே இருகி, இரத்தம் வெளியேற விடாமல் அந்த இடத்திற்கு சீல் வைத்து விடும்.

எஸ்கே:
எல்லா குதிரைகளையும் ரேஸ் குதிரைகளாகப்  பழக்கி ஓட வைக்க முடியுமா?

முடியாது! ரேஸில் ஓடுவதற்கு என்றே ஒரு வகை குதிரைகள் உள்ளன.அதற்கு 'தரோ பிரட்' என்று பெயர். உலகம் முழுவதும், கோடிக் கணக்கில் பணம் புரளும் ரேஸ் கோர்சில் இந்த  'தரோ பிரட்' வகை குதிரைகள் மட்டுமே ஓட முடியும்.
அதாவது உடல் திடகாத்திரதிற்கு பெயர் போன துருக்கிய குதிரை, உடல் கட்டமைப்பில் நேர்த்தியான அரேபிய குதிரை, வேகத்திற்கு பெயர் போன இங்கிலாந்து குதிரை ஆகிய மூன்றின் கலப்பே இந்த  'தரோ பிரட்' .

இதன் வம்சாவளியை சேர்ந்த குதிரைகள் தாம் உலகம் முழுவதும் ரேஸ் குதிரைகளக ஓடி கொண்டு இருக்கின்றன. பந்தய குதிரைகள் எந்த மாதத்தில் பிறந்தாலும், ஜனவரி முதல் தேதியில் பிறந்ததாகவே வயது கணக்கிடப்படும். ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே ரேஸில் ஓடும். பிறகு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு விடும்.

எஸ்கே:
பறவைகளில் கழுகின் பார்வை மட்டும் கூர்மையாய் இருப்பது ஏன்?


உயரப் பறப்பதிலும், உற்று நோக்குவதிலும்
கழுகுக்கு நிகர் கழுகு தான். கழுகின் கண்களில் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் நுண்ணுக்கமான திசுக்கள் அமைந்து இருப்பது தான் இவைகளின் பார்வை கூர்மைக்கு காரணம்.1500 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அனாயசமாய் கழுகு வட்டம் அடித்து கொண்டு இருக்கும்போது,அதன் பார்வை வியுகத்தில் சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பு அதன் பார்வையில் இருக்கும்.அதே நேரத்தில்,எந்த அளவிற்கு தன்னால் இரையை தூக்கி கொண்டு பறக்க முடியும் என்பதையும் கழுகு துல்லியமாய் கணித்து வைத்து இருக்கின்றன.


கழுகின் கண்களின் இரண்டு அம்சங்கள் அத்தகைய கூர்மையான பார்வையைத் தருகின்றன. ஒன்று விழித்திரை, மற்றொன்று ஃபோவா. கழுகின் இவை இரண்டும் பார்வைத் துறையில் சிறந்த விவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெரிதாக்கும் திறனை ஒன்றாகக் கொடுக்கின்றது.


கூடுதல் தகவல்:
மனிதர்களின்  கண்களை கழுகின் கண்களாக மாற்றிக்கொண்டால், 10 மாடி கட்டிடத்தின் கூரையிலிருந்து தரையில் ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காணலாம்.

எஸ்கே:
உலகத்தில் தண்ணீர் உயிரினங்கள் ஏதாவது உண்டா?

உண்டே! குறிப்பாக பல்லிகளும்,பாம்புகளும், மற்ற பிற ஊர்வன வகைகளும் தண்ணீர் இருக்கும் பக்கம் எட்டி கூட பார்ப்பது இல்லை. காரணம், அந்தப் பிராணிகள் வெறும் மாமிச உணவை மட்டும் நம்பி வாழ்வதால்,அவைகளுக்கு விழுங்கும் ஜீவராசிகளின் உடல் திரவங்கள் போதுமானதாகும். ஈரப்பதம் அற்ற மற்றும் குறைவான தாவர உணவுகளை உட்கொள்ளும் பிராணிகளுக்கு தான் தண்ணீர் தாகம் வருகிறது.

வட அமெரிக்காவில் வாழும் கங்காருஎலி தன் வாழ்நாளில் தண்ணீரை முற்றிலும் தவிர்த்து விடுகிறது.அதே போல் சஹாரா பாலைவனத்தில் வாழும் 'ஆடக்ஸ்' என்னும் ஒரு வகை மான்,அங்கே விளையும் கள்ளிசெடிகளை மட்டுமே சாப்பிட்டு ஆயுசுக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல்  தன் வாழ் நாட்களை கழித்து விடுகிறது.

எஸ்கே:
பூனைக்குத் தெரியுமா பால்கோவாவின் டேஸ்ட்?

பூனைக்கு பால்கோவா மட்டுமல்ல, இனிப்பான எந்த உணவின் சுவையும் தெரியாது. மனிதர்களால் 5(அல்லது அதற்கு மேற்பட்ட) சுவைகளை உணரமுடியும். ஆனால், பூனைகளால் இனிப்புச்சுவையை மட்டும் உணர முடியாது. வீட்டுப்பூனை மட்டுமல்ல, காடுகளில் வசிக்கும் பூனைக்குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version