தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

உடல் தூய்மை

(1/1)

DuskY:
நாம் தினமும் குளியல் எடுப்பது சுத்தம் படுத்த மட்டும் அல்ல. நம் தோல்களில் காணப்படும் இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை அகற்றவும்தான்.அதனை எவ்வாறு சரியான முறையில் அகற்றுவது ?என்ற கேள்வி எழலாம்.ரசாயனம் நிறைந்த சோப்புகள் தோல்களில் காணப்படும் ஈரப்பதத்தை குறைத்துவிடும். எனவே தினமும் கடலை மாவு, அரிசி மாவு,பாசிபயறு மாவு,பூலாங்கிழங்கு மாவு,முள்தானி மிட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன் படுத்தி இறந்த செல்களை நீக்க வேண்டும்.அதற்கு முன் சோப்புகள் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது..3 நாட்களுக்கு ஒரு முறை முகத்திற்கும் , உடலுக்கும் பயன் படுத்த நல்ல‌பலனைக் காணலாம்.சிலருக்கு பித்த உடலாக இருப்பின் தோல் சுருங்கி பொலிவின்றி முகம் காணப்படும்.அவர்கள் மேற்கண்ட முறையில் உடலை சுத்த படுத்த நற்பலன் கிடைக்கும்.

Navigation

[0] Message Index

Go to full version