Author Topic: விக்கல் ஏன் வருகிறது?  (Read 1408 times)

Offline Yousuf

இருமல், தும்மல், விக்கல் இதெல்லாம் எப்போ வரும்னு சொல்ல முடியாது. ஆனா, விக்கல் என்னவோ கரெக்டா வரக்கூடாத நேரத்துலதான் கண்டிப்பா வரும். அப்படி வரும்போது தடுக்கவும் முடியாது?!
விக்கல் என்றால் என்ன?

“டயாஃப்ரம்” (Diaphragm) அப்படீங்கிற தோல் போன்ற ஒரு தசை நம்ம மார்பகத்துல இருக்கு. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது. அதெல்லாம் சரி, விக்கலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவது/சுவசிப்பதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள்!  இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது திடீரென்று வேகமாக சுருங்குவதால்,  அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க/தவிர்க்க, “எபிக்லாட்டிஸ்” என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒரு வித “விக் விக்” எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்!

விக்கல் எப்போதும் திடீரென்று, தன்னிச்சையாக ஏற்படும் (உடலுக்கு) அவசியமில்லாத, நம்மைச் மிகவும் சிரமப்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஆய்வு!  நன்றாக வயிறு முட்ட சாப்பிட்ட பின்னும், உடற்பயிற்ச்சி அல்லது மனச்சுமை காரணமாகவும் விக்கல் வருமாம்!  ஆனால், ஓவ்வொரு முறை விக்கல் வருவதற்க்கும் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லையாம்

ஒரு அறிவியல் கூற்றுப்படி, விக்கல் என்பது உயிர்கள் தோன்றிய காலத் தொடக்கத்தின் உறுஞ்சும் தன்மையின் எச்சமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்! அது என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா, அடிப்படையில விக்கல் அப்படீங்கிறது ஒரு பெரிய இம்ச!

விக்கல் என்னவா இருந்தா நமக்கு என்னங்க, அதை நிறுத்துறதுக்கு நம்மகிட்ட ஏகப்பட்ட டெக்னிக் இருக்கே! எனக்குத் தெரிஞ்ச ஒரு சில யுத்திகளை நான் சொல்றேன்…..

1. சில வினாடிகள் மூச்சை நிறுத்துவது

2. திடீரென்று/எதிர்பாராதவிதமாக பயமுறுத்துவது

3. ஒரே மூச்சில் நெறைய தண்ணீர் குடிப்பது

இப்படி எல்லாவிதமான யுத்திகளும் விக்கலை பெரும்பாலும் நிறுத்திவிடுமாம். ஆனா, விக்கல் எப்படி/ஏன் நின்றுபோகிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா? மேலே சொன்ன எல்லா யுத்திகளுமே சுவாசத்தைத் தற்காலிமாக சில வினாடிகள் நிறுத்திவிடுகிறதாம். அதனால்தான் விக்கல் நின்றுவிடுகிறது.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: விக்கல் ஏன் வருகிறது?
« Reply #1 on: July 30, 2011, 03:20:41 AM »
appo vikkalvantha paakurathuku unga pic onnu kodunga... jujup ;) ;) ;) ;)
                    

Offline Yousuf

Re: விக்கல் ஏன் வருகிறது?
« Reply #2 on: July 30, 2011, 09:37:28 AM »
எதுக்கு என்னோட புகைப்படம் உன்ன நீயே கண்ணாடியில் பத்துக்கோ விக்கல் நின்னுடும்....!!!  :P :P :P ;D ;D ;D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: விக்கல் ஏன் வருகிறது?
« Reply #3 on: July 30, 2011, 01:12:03 PM »
>:( >:( >:( >:( >:( >:( >:(