FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 16, 2023, 03:22:36 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: Forum on October 16, 2023, 03:22:36 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 325

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/325.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: Sagi2023 on October 16, 2023, 09:01:54 AM
உன் வெட்கம் என்னையும் வெட்கப்பட வைக்கிறதடி...!!
      உன் விரல் அசைவில் விழுந்தது என் அணுக்கள்..,,
      பார்வையால் கடத்தப்பட்டது என் தினப்பொழுதுகள்...,,

வாக்கியம் தீட்டி உன்னை வரைய நினைத்தேன்..
       உன்னை கண்ட பின்பு அத்தனையும் மறந்தேன்..
               சுழன்று வந்த பூமிக்குள் சுழறாத நான்,, நீயாகி போனேன்..

காத்திருப்புக்கும் காதல் வந்தது ஏனோ..?

                            உன்னை எண்ணி ,
           தலையணைக்கும் காய்ச்சல் தானோ..!

என் உதிரத்தில் பிணைவதை நிறுத்திவிட்டு..
                உள்ளத்தால் இணைந்து...
                                என் உடலோடு கலந்து விடு...!!

பெரு மூச்சுக்குள் போர்க்கருவிகள் எதற்கடி..??
              கருவிழிகள் கூட கூரிய ஆயுதம் ஆனதடி..!!
                        வழிந்த வியர்வையில் சரிந்தது என் தாகம்..
உதிர்ந்த பூக்களில் முறிந்தது என் மோகம்...

பல வருட வேட்க்கையும் அடங்கியதடி ..!!
              உன் சிலநோடி ஸ்பரிசத்தில்....
நின்றது இதயம் மட்டுமல்ல...
              என் இமைக்கா விழிகளும் தான்...

        இதயத்தில் இதழ்களையும் ,,
இதழ்களில் இறுக்கத்தையும் ,,
   
                      பதித்துவிட்டு..
       கலைத்துவிட்டாய் என் கனவை....!!



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: KS Saravanan on October 16, 2023, 05:07:29 PM
மெல்ல துடிக்குது மனசு..!

கண்ணே கண்மணியே
கட்டழகு காவியமே..!
கண்ணால் உனை கண்டால்
கலைந்து போகும் கார்மேகமே..!
மோகினியே உன் பார்வை ஒன்றே போதுமே..
பாற்கடலும் கரைந்திடுமே..!

புன்னகை பூத்த புது மலரே..
இன்று தான் நீ பூத்தாயோ..!
கருங்கூந்தலின் வாசமோ
தாழம்பூவாய் வதைக்குதே..!
உன்னை சூடிய பூக்களோ
மோட்சம் பெற்று விலகுதே..!

மேனியெங்கும் பளிங்கு நீரோடையோ
உதடுகள் செந்தூர தாமரையோ..!
நாணம் கொண்ட சிணுங்கலோ
நாணல் போல மலருதே..!
தங்கம் நெய்த கைகளோ
முகத்தை மூடி மறைக்குதே..!

பட்டு பூச்சியின் ஸ்பரிசமோ
பட்டாடை உடுத்தி வியக்குதே..!
வீணையேற்றும் விரல்களோ
முல்லைக்கொடியாய் வலையுதே..!
வண்ணம் கொண்ட வளையல்களோ
உன்னை தொட்டு தழுவுதே..!

வில்லேந்திடும் புருவமோ
கண்ணால் அம்பெய்தி நிக்குதே..!
பெண்ணழகை போற்றிட
உன் சங்கு போன்ற கழுத்திலே
மஞ்சள் கயிறு கட்டிடவே
கடவுள் என்னை படைதானா..?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: தமிழினி on October 16, 2023, 05:53:03 PM
பெண் உணர்வுகளில்
ஆண் வேடமிட்டு
அனைவரையும் ஆட்டி படைத்தவள்..

உன் அரைநொடி உரையாடலுக்கு பின்
உன் இமைநீங்க நோட்டங்களுக்கு பின்
உன்னை தழுவிய காற்று என்னை தீண்டி சென்ற பின்
உன் மீதான ஸ்பரிசம் என்னை
சுவாசிக்க விடாமல் தடுக்கிறது..

முதல் முறையாகா

என்னில் மாற்றம்..
என் உடையும் சேர்ந்தே மாற தொடங்கியது..
பூப்படைந்த நாளில் கூட இப்படி ஓர் மாற்றம் என்னில் இல்லை..
என்னவனே
உனக்காக ஏற்பட்ட இந்த மாற்றம் உள்ளத்தில் மட்டுமின்றி
 என் உடையுளும் தோன்றியது..
முதல் முறை உனக்காக புடவை அணிந்து
பூ இட்டு
என்னை நானே அலங்கரிக்க தொடங்கினேன்

உன் கவனம் ஈர்க்க..


கண்ணா..

நினைவினில் கூட நாணப்பட வைக்க உன்னால் மட்டுமே முடியும்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: Mani KL on October 16, 2023, 06:07:54 PM
வெட்கத்தின் உறைவிடம் உன் முகம்
உன் வெட்கம் என் மனது செல்கிறது சொர்கம்


என்னை பார்த்த பொழுது
உன்னில்
அளவு கடந்த சந்தோசம்
அந்த வினாடியை கண்டு வியந்த ஐம்புலன்கள்

நான் சொல்வதை கேட்ட உன் செவிகள்
அதை சொல்ல  தெரியாமல்
மௌனம் கொண்டஉன் உதடு
புன்னகை மட்டுமே பூத்தது

பார்க்க தயங்கிய கண்கள்
பாதி இமைகள் மூட

என் சுவாச காற்றை உன் சுவாசம் தழுவ

உமிழ் நீரை இறக்கி மௌனம் கொண்ட தொண்டை குழி

ஐம் புலன்களின் மௌனம்
உன் முகத்தில் தெரிந்த வெட்கம்

வெள்ளை காகிதம் கொண்டு துடைத்தால்
மாயாத பெண்ணின் வெட்கம்

வியர்ப்பை துடைத்து விட்டு செல்லும்
வெள்ளை காகிதம் அல்ல பெண்ணின் வெட்கம்

ஆணின் மனதில் நினைவலைகளாய்  கவிதைகள் பயணிக்கும்
வெள்ளை காகிதம் பெண்ணின் வெட்கம்

கலைஞன் கையில் உள்ள வெள்ளை காகிதம்
வியர்ப்பை துடைத்து விட்டு செல்லும்

கவிஞன் கையில் உள்ள வெள்ளை காகிதம்
கவிதைகளை தொகுத்து  கவிஞன் கூட பயணிக்கும்.

என்னிடம் பிடித்ததை கேட்டேன்
வெட்கப்பட்டாய்

உனக்கு பிடித்ததை கேட்டேன்
வெட்கப்பட்டாய்

 எதை கேட்டாலும் வெட்கப்படும்
உன்னிடம்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
என்று கேட்டேன்

அதற்கும் வெட்கப்பட்டாயே

ஆபரணங்கள்  அணிவதால் வரும் அழகு
உன் சொந்தங்கள்
உனக்கு தரும் ஆடம்பர அழகு

அதை விட அழகு

வெட்கம் வரும் போது
 உன் முகத்தில் தோன்றும் அழகு
இறைவன்
உனக்கு தந்த ஆர்ப்பரிக்கும் அழகு









 





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: Sun FloweR on October 16, 2023, 06:51:11 PM
குறுநகை பொழியும் நறுமுகை  இவள்...
பிள்ளைச் சிரிப்பினில் உள்ளம் கவர் கள்ளி இவள்..
வாலிபரை வசப்படுத்தும் வயதுக்கு வந்த வஞ்சி இவள்..

இலக்கியத்தில் சொல்லாத கவிதைகளும் இவள் இன்முகத்தில் கொட்டியது யார்?
ஏடுகளில் இல்லாத இலக்கியமும் இவள் வதனத்தில் குவித்தது யார்?

தேனில் ஊறிய பலாச்சுளைகளாய் இவள் இளமை பருவம்...
மந்த மாருதம் வீசும் சோலை வனமாய் இவள் யௌவனப் பருவம்..
செவ்விள நீரையும் செங்கனிச் சாற்றையும் சேர்த்த அமுதமாய் இவள் வாலிப பருவம்..
சிலிர்த்திட வைத்திடும் அருவியாய் இவள் சிருங்காரப் பருவம்..

பருவக் கடல் இவள் அழகினில் மயங்கிடாதார் உண்டோ?
செய்து வைத்த செப்புச்சிலை இவள் செழுமையில் வீழாதோர் உண்டோ?

ஊஞ்சலாடும் இவள் இளமையில் மூழ்கப் போவது யாரோ?
சிரிப்பழகி இவள் கன்னக்குழியில் விழப்போவது யாரோ?
தாவணி அணிந்த தங்கச்சிலை இவளை உரிமை கொள்ளப் போவது யாரோ?
பெரும் பேரழகி இவள் வெட்கத்திற்குக் காரணமான கண்ணன் யாரோ?
கள்வன் யாரோ?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: mandakasayam on October 16, 2023, 08:02:16 PM
[வெண்ணிலவே வெட்கப்படும்  என்னவளை கண்டு சிரிப்பலையால் சிற்பங்களும் சிலிர்த்து போனது!!!!

ஊதக்காற்று உன்னை உரசி உனது புன்சிரிப்பால் புதுமை பெற்று புனிதம் ஆனது காற்றும் உன்னில் கரைசேர!!!

கூட்டத்தில் எனது கண்களால் கேட்கும் கேள்விக்கு நீ வெட்கி தலைகுனியும் பொழுது

உனது முகத்தை காண முடியாமல் மனப்பதட்டமும் மகிழ்ச்சியும் இணைந்து!!
இதய துடிப்பை இரட்டிப்பாக்கும்!!!

அழகியே!! எனது உள்ளம் உனது வெட்கத்தில் தலைகுனிந்து வெண்மை காகிதத்தில் கவிதையாக கோலமிடுகிறதே!!!

மௌனமொழியின் அகராதியே!! உனது கண்கள் களமாட நம் இதயங்கள் இடமாற காதல் என்னுள் உள்ளூர உணர்வற்ற உருவ பொம்மையானேன்!!!

கொஞ்சும் மொழியழகும் கோபத்தில் புருவமழகும் அதை சகித்து சிரிக்கும் இதழ்கள்  அழகும்!! அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இவைகளுக்கு உனது வெட்கமே மொழியர்ப்பு!!!!

(https://i.postimg.cc/J43JZPPg/result.gif) (https://postimages.org/)


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: HiNi on October 16, 2023, 08:26:45 PM

மாலை மங்கும் நேரத்தில் ஓர் அழகிய நிகழ்வு🥰!!!

நடந்து வந்து கொண்டிருந்த பாதையில் ஒரு சப்தம் என் தொலைப்பேசியில்
"ஓய் பின்னாடி பாருங்க கொஞ்சம்" என்று என்னவனின் குறுஞ்செய்தி!!!

துணைக்கு வரும் தங்கையை மீறி திரும்பி பார்த்தேன்
என் இதயத்தின் இளவரசன் "கீ கீ" என்று இருச்சக்கரத்தில்!!!

"வெட்கமா எந்த கடையில் விற்க்கும்"என கேலி செய்தவள்
இப்பொழுது பல மடங்கு உற்பத்தி ஈட்டாள்!!!

சுற்றத்தை மறந்து தலை குனிந்தது

மலர் மொட்டுக்களும் கூந்தலில் நகைத்தது

காதில் ஜிமிக்கியும் என் நாண மழைக்கு குடை விரித்தது

கன்னங்கள் இரண்டும் சிவப்பு ரோஜா போல் பூத்தது

உள்ளமும் உற்சாக கடலில் அலைமோதியது

என் பற்களும் இனிப்பு பண்டத்தை மொய்க்கும் ஈ போலானது

என் விழிகள் இக்கணத்தை பதிவேற்றி கொண்டிருந்தது!!!

திடிரென்று ஓர் சத்தம்!!!

"என்னடி ஆச்சு பைத்தியம் மாறி சிரிச்சிட்டு இருக்க..நேரமாச்சு அம்மா திட்டுவாங்க வேகமா நட "
என்று என் குட்டி இராட்சசி அலர...

துடித்துடித்து கால்கள் நகர...

என் மனமோ தத்தளித்து நிற்கிறது  அதே இடத்தில் வெட்கமுடன்!!!🤗

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: PreaM on October 16, 2023, 08:30:22 PM
புன்னகையில்  பூத்த பூவே உந்தன்
புன்னகை கண்டு மனம் கிறங்குதடி
கண் இமைக்கும் அழகினை காண
என் விழி உன்னால் ஏங்குதடி

மல்லிகையின் மணம் கற்றில் வீச
மெல்லிசையாய் கேட்கிறதே நீ சிரிக்க
நாணத்தினால் உன் முகம் சிவக்க
நாளொன்று போதாது உனை நான் ரசிக்க

அரைகுறை ஆடையிலே உலாவிடும் உலகினில்
பாவாடை தாவணியின் பண்பாட்டை நீ மறக்கலியே
எத்தனையோ பெண்களை இதுவரை கடந்தேன்
உன்னை பார்த்த நொடியை கடக்க மறந்தேன் 

புன்னகையில் பூத்த பூவே உந்தன்
புன்னகை ஒன்றே எனக்கு  போதுமடி
என்னருகில் எப்போதும் நீ இருந்துவிடு
நம்  வாழ்வே வசந்தம் ஆகிவிடும்

அழகின் உருவாய் அவதரித்த  என்னவளே
உன்னை அடைய தவமிருந்தேன் நாள் கணக்கில்
எப்போது வரம் கொடுப்பாய் உன் பார்வையினால்
 தலை நிமிர்த்தி! தலை நிமிர்த்தி !! தலை நிமிர்த்தி!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: joker on October 16, 2023, 08:38:20 PM
யார் இவள்
வானத்து தேவதையோ
வானவில்லின் பொன்மகளோ

மயிலிறகின் ஸ்பரிசம்தனை
மறக்காமல் தந்திடுபவளோ

முன்காலை சூரியனின் பினாமியோ
சாயங்கால சூரியனின் சகோதரியோ

நிலவின் ஒளி தந்த நீ அவள் தோழியோ
இல்லை
அந்த நிலவே நீ தானோ ?

அழகின் அட்சயபாத்திரமோ ?
அவள் மேல் கொண்ட மோகத்தை கரைக்கும்
இவள் ஆகாய தாமரையோ ?

காலையில் கண்விழித்து பார்க்கும்
உள்ளங்கை குறுந்செய்தியோ ?
கவிகள் வார்த்தை தேடி திண்டாடும்
அழகின் பிரபஞ்சமோ ?

அழகான ஓவியமோ இல்லை
எதிலும் எழுதாத காவியமோ ?

ஆர்ப்பரிக்கும் கடல் அலையோ
இல்லை அமைதியின் இமயமோ ?

முட்கள் கொண்ட மலரோ
இல்லை
முத்தத்தின் கொள்முதல் நிலையமோ ?

யார் இவள் விடை தெரிய காத்திருக்கிறேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325
Post by: BreeZe on October 17, 2023, 06:47:19 AM
சட்டென்று காய்ந்து போகும்
முகம் மீது எல்லாம்
எனக்கு பெரும் ஈர்ப்பு இல்லை
என் மனதில் என்றும்
தேங்கி நிற்கும் முகமாய் இருந்தது
அவன் முகம்
 
அன்று தான்
அவனை முதல் முறையாக பார்த்தேன்
அவன் ஒற்றை முகம்
என் இதயத்தினுள் பதிந்து
அத்தனை முகங்களையும் அகற்றியது
 
இதுவரை நானும் நம்பியது இல்லை
பார்த்த உடனே காதல் வருவதை
அவன் அன்பு பொழியும் கண்கள்
அனைத்தையும் பொய்யாக்கியது
 
நானோ அன்று
நீல கலர் புடவை
Buff வைத்த ரவிக்கை
நெற்றி நடுவே கோபுர பொட்டு
காஜல் நிறைந்த கண்கள்
கூந்தல் முழுக்க மல்லிகை பூ
குடை போல ஜிமிக்கி கம்மல்
கைகளில் கண்ணாடி வளையல்
சிரிப்பில் வெட்கம்
ஒரு தேவதையை போல் இருந்தேன்
பெரும்பாலான கண்கள் என் மீதே இருந்தது
ஆனால்
அவன் கண்கள் மட்டும்
தூரத்தில் சாலையை கடக்க
முயற்சி செய்து கொண்டு இருந்த
மூதாட்டியை பார்த்து
தவித்து கொண்டிருந்தது
தெரியாத ஆணிடம் பேசியது இல்லை
இனியும் தாமதிக்க வேண்டாம்
காதலை சொல்லிவிடலாம் என்று
வேகம் எடுத்தது என் கால்கள்
அவனை நெருங்க
Tringggggggg  என்று அலாரம் அலறியது
அட ச்சய்ய் கனவா
ஒரு பொண்ணா என்ன நானே யோசிக்குறது பெருசு
அதுலையும் எனக்கு வெட்கம் வரது ரொம்போ
பெரிய விஷயம்
இப்படி கெடுத்துவிட்டுடியே அலாரம் செத்த பயலே