Author Topic: இன்றைய தினத்தின் வரலாறு  (Read 17558 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #105 on: May 25, 2012, 09:10:00 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #106 on: May 25, 2012, 09:10:51 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #107 on: May 25, 2012, 09:11:33 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #108 on: May 25, 2012, 09:12:20 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #109 on: May 25, 2012, 09:13:05 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #110 on: May 25, 2012, 09:16:16 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #111 on: May 25, 2012, 09:18:55 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #112 on: August 08, 2012, 09:00:27 PM »
ஆகஸ்ட்
1


    உலக சாரணர் நாள்
    அங்கோலா - இராணுவ நாள்
    பெனின் - தேசிய நாள் (1960)
    கொங்கோ - பெற்றோர் நாள்
    லெபனான் - இராணுவ நாள்
    சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)
    தாய்ப்பால் நாள்
    தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்ட நாள்
    கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
    1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
    1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
    1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
    1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
    1793 - உலகிலேயே மெட்ரிக் அளவு முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்
    1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
    1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
    1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
    1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
    1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
    1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.
    1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
    1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
    1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
    1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
    1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
    1990 - எஸ்.பி.சி என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் முதன் முதலாக ஸ்டீரியோ ஒலியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது
    2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #113 on: August 08, 2012, 09:00:57 PM »
ஆகஸ்ட்
2

    1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.
    1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
    1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
    1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
    1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.
    1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
    1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).
    1939 - அறிவியல் மேதை Albert Einstein அமெரிக்க அதிபர் Roosevelt-ற்கு ஒரு கடிதம் எழுதினார். மிக ஆற்றல் வாய்ந்த அணுகுண்டு செய்ய முடியும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதம்தான் அணுகுண்டு தயாரிப்பதற்கான Manhattan திட்டம் உருவாகக் காரணமாயிருந்தது
    1943 - போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது
    1990 - குவைத்தின் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமித்துக் கொண்டது ஈராக். அதன் காரணமாகத்தான் பின்னர் வளைகுடாப் போர் தொடங்கியது
    1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
    2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #114 on: August 08, 2012, 09:01:59 PM »
ஆகஸ்ட்
3



    435 - கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.
    1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.
    1678 - அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.
    1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
    1858 - உலகின் நீளமான நதியான நைல் நதி எங்கே உற்பத்தியாகிறது என்பதை தேடிக் கண்டுபிடித்தார். ஆங்கிலேய நாடுகாண் ஆர்வலர் John Hunningsbeck. விக்டோரியா ஏரிதான் நைல் நதி தொடங்கும் இடம் என்பதை அவர் இன்று கண்டுபிடித்தார்
    1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது
    1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்
    1923 - நீதிபதியான தனது தந்தை பதவிப் பிரமாணம் செய்துவைக்க அமெரிக்காவின் முப்பதாவது அதிபராகப் பதவியேற்றார் Calvin Coolidgeமனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
    1938 - இத்தாலியில் இனவெறிக் கொள்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது முசோலினி அரசு
    1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
    1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
    1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
    2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #115 on: August 08, 2012, 09:03:43 PM »
ஆகஸ்ட்
4


    முதல் உலகப் போர் துவக்கம் 1914
    70 - ரோமர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டது.
    1578 - மொரோக்கர்கள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துக்கல் மன்னன் செபஸ்டியான் போரில் கொல்லப்பட்டான்.
    1693 - சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.
    1704 - ஆங்கில, டச்சுக் கூட்டுப்படைகளினால் கிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.
    1735 - அமெரிக்காவில் பத்திரிக்கை சுதந்திரம் நிலைநாட்டப்பட்டது. நியூயார்க் கவர்னரைப் பற்றி அவதூறாக எழுதிய, நியூயார்க் வீக்லி - இதழின் ஆசிரியர் John Peter Zenger மேல் தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது
    1789 - பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
    1824 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
    1860 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.
    1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.
    1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
    1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.
    1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.
    1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.
    1944 - நாஜி போலீசார் Amsterdam - ல் உள்ள ஒரு வீட்டைச் சோதனையிட்டு எட்டு பேரைக் கைது செய்ததில் ஒருவர்தான் 13 வயது நிரம்பிய Anne Frank. மரண முகாமிற்கு அனுப்பப்பட்ட அவர் தனது பதினைந்தாவது வயதை எட்டுமுன் உயிர்துறந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவரது டைரி கண்டுபிடிக்கப்பட்டு Anne Frank's Diary என்ற சுயசரிதையாக இதுவரை சுமார் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
    .1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.
    1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
    1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
    2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்
    2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
    2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #116 on: August 08, 2012, 09:05:03 PM »
ஆகஸ்ட்5

    1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.

    305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.


    1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.
    1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
    1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.
    1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
    1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
    1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.
    1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
    1963 - ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
    1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.
    1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
    1984 - லாஸ் ஏஞ்சலிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக பெண்கள் marathon நெடுந்தொலை ஓட்டம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதில் இன்று வெற்றி பெற்று சாதனை படைத்தார் Joan Benoit
    1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #117 on: August 08, 2012, 09:06:44 PM »
ஆகஸ்ட்

6


    1806 - கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.


    1825 - பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
    1914 - முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.
    1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்
    1952 - இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
    1961 - வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.
    1962 - ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1964 - அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.
    1991 - உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
    1996 - செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.
    2002 - தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #118 on: August 08, 2012, 09:07:38 PM »
ஆகஸ்ட்
7

    கிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
    1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
    1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
    1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
    1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
    1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.
    1944 - திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
    1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
    1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.
    1960 - கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
    1998 - நைரோபியிலும் தான்சானியாவிலுமுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. மொத்தம் 224 பேர் கொல்லப்பட்டனர்; 5500 பேர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ஒசோமா பின்லேடன் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியது அமெரிக்க நீதிமன்றம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #119 on: September 24, 2012, 08:48:28 AM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்