FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on December 23, 2012, 12:46:33 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 053
Post by: Global Angel on December 23, 2012, 12:46:33 AM
நிழல் படம் எண் : 053

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் RDX அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/053.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: தமிழன் on December 23, 2012, 02:21:26 PM
அவன்
உலகை வெறுத்து
உணர்விழந்து கிட‌க்கிறான்
உளுத்த‌ க‌ட்டையாக‌

அவ‌ள்
அவ‌ன் உயிரில் க‌ல‌ந்தாள்
உன்ம‌ந்த‌மானான்
உயிர் பெற்றெழுந்தான்
உய‌ர‌ உய‌ர‌ப் ப‌ற‌ந்தான்

அன்று
உச்சிவானில் அவ‌ன்...
ஊரே போற்றும்ப‌டி
உல‌க‌மே வியர்க்கும்படி
அவ‌ன் உள்ளே க‌ல‌ந்த‌வ‌ளால்
உல‌க‌மே அவ‌ன் கையில்

இன்று
அவ‌ள் உயிரை விட்டுவிட்டு
உட‌லை ம‌ட்டும் எடுத்துப் போய்விட்டாள்
நினைவுக‌ளை விட்டுவிட்டு
நிம்ம‌தியை ம‌ட்டும் எடுத்து சென்று விட்டாள்

அவ‌ன்
உயிருட‌ன் இன்று பிண‌ம்
உட‌லெங்கும் ர‌ண‌ம்
அவ‌ள் பிரிவு
வேரோடு க‌ருக்கும் தீ

அவ‌ள்
என்றும் த‌ன‌த‌ருகில் என்ற
இறுமார்ப்பில் இருந்த‌வ‌ன்
அவள் ம‌ல‌ராக‌ ம‌ண‌ம் வீச‌
என்றென்றும் ம‌க‌ர‌ந்த‌மாக‌ தானென்ற
மமதையில் இருந்தவன்
மா‌ற்றான் தோட்டத்து ம‌ல்லிகையானாள்
ம‌ண‌ம் விரும்பிய‌வ‌ள் என்ற‌றிந்த‌தும்
காய்ந்து விழுந்தான் ச‌ருகாக

காத‌லென்றும் அழிவ‌தில்லை ஆனால்
காத‌ல் இட‌ம் மாறும்
த‌ட‌ம் புர‌ழும்
ர‌யில் வ‌ண்டிக‌ளின் பெட்டிக‌ளாக‌
ஒன்றில் இருந்து க‌ழ‌ன்று
இன்னொன்றுட‌ன் இணைந்து கொள்ளும்‌
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: RyaN on December 23, 2012, 09:56:27 PM
உண் அருகில் இருந்த போது,
என்னை பற்றி ஒரு துளி  கவலை பட்டதும் கூட எல்லை.

நீ என்னை  விட்டு சென்ற போது,
நான் யார் என்று என்னால் உணர முடியவில்லை.

எங்கு போனாலும் உன்னை பற்றிய ஞாபகங்கள்,
என்னை வாட்டி வதக்கு கின்றது.

உன்னை மறக்க என்னால் முடியும்,
என் உயிர் என்னை விட்டு பிரியும் போது.

நீ என்னை அழைத்து சென்ற இடங்களை எல்லாம்,
பார்க்க வேண்டும் என்று என் மணம் இழுத்து செல்கின்றது.

நீ பேசி சென்ற வார்த்தைகள் எல்லாம்,
தனிமையில் எருக்கும் போது என் காதில் ஒழிகின்றது.

நான் ஒவ்வொரு இரவும் உறங்கும் போது, 
உன் மீது வைத்திருந்த அன்பு என் கண்நீர் மழலையால் சிந்துவது உண்டு.

ஒவ்வொரு நாலும் உணவு அருந்தும் முன்,
நீ உணவு அறிந்தி இருப்பாயா   என்ற கவலை வறுவது உண்டு.
.
உன்னை நினைக்காத நொடிகள் இல்லை.
உன்னை மறக்காத நொடிகள்  வருமா  என்றும் தெரிய வில்லை.

உன்னை நினைத்து   மெலுகாய் உருகிப் போய் கொண்டு இருக்கிரேன்
நான் உருகி அழிவதர்க்குள் ஒரு முறையாவது பேசுவாய்யா
என்று எதிர் பார்த்து கொண்டிருப்பேன்.

[/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: MysteRy on December 27, 2012, 11:31:06 PM
எத்தனை எத்தனை துறைகளடா
நிலம் நீர் காற்று நெருப்பு  ஆகாயமென
அதற்கும், எத்தனைஎத்தனை கடவுள்களடா

தனித்தனி  துறைகளிருந்தும்கூட   
தடுக்கவோ தவ்ரிக்கவோ முடியவில்லை
தகித்திடமுடியா இயற்க்கை சீற்றங்களை   

அத்தனை தனித்துவ கடவுள்களையும்
தற்போது தற்காலிகமாய் தவிர்த்துவிட்டு

மகிழ்ச்சிக்கான  பிரத்யோக பொறுப்பு கடவுளென
பொறுப்பாய் எவரும் இருப்பீர்களேஎனில்
கேளுங்களேன் கருணை கடவுள்காள்

இளமையின் இடையிலேயே உதிர்ந்து விழுந்திட்ட
இளம் இலைகளின்  எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியை

மகிழ்ச்சியின் மகத்துவம் அறியாமல் மண்ணுலகில்
மக்கவிடும் (மட)மானிடர்களின்மகிழ்ச்சியேனும்

மேற்க்குறிப்பிட்டவைகள் முடியாத பட்சத்தினில்

மண்ணில் நான் வாழும் மீதநாளின்
மொத்தமகிழ்ச்சியையும் மொத்தமாக
சொட்டும் கூட  மீதமின்றி சுத்தமாக
நான் முன்மொழியும் நபருக்கு மொத்தமாக
அருள் மாரியாய் பொழிந்திடுவீரா ?

மத பேதம் ஏதுமின்றி , மனதார
பொதுவாக கேட்கின்றேன் கடவுள்களே !

என்னை விட்டு வெகுதூரம் இருக்கும்
என் உயிருக்குயிரான  என்னவுளுக்கு
மகிழ்ச்சியை அருள் மழையாய்
அருள் வாரி பொழிவீராக !
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on December 28, 2012, 03:01:29 AM
ஓரமாய் உன் உள்ள சமவெளியில்
உடைந்து சிதறிய
என் காதல் முத்துக்கள்
கோர்க்கப் படாமலே
சிதறி கிடந்தது ..
திறந்த சிப்பியும்
கேட்பார் அற்று
கவிழ்ந்து கிடந்தது ...

அறுந்து தொங்கும்
இதய வீணையின் நரம்புகளில்
சொட்டு சொட்டாய் உதிரும்
உதிர துகள்களுள்
கசிந்து ஒழுகியது
என் காதல் நிணநீர் ..

கேட்பார் அற்று கிடக்கும்
புல்லாங்குழலின் துளைகளின் ஊடே
அவ்வப்போது புகும் காற்றின் தீண்டலில்
இசை உயிர் பெறுவது போல்
அவ்வப்போது உனக்குள் உதிர்ந்த
என் காதல் முத்துகளின் உரசலினால்
தீ பற்றி கொள்ளும் காதல் ...

வெகு தூரம் தாண்டியும்
உன் எண்ண  அலைகளுக்குள்
சிக்கி தவிக்க
என் காதல் சிப்பிகளும்
கருக்கொண்டு அலைந்தது
உதாசீனமாய் உமிழப்பட்ட
உமிழ் நீரின் மோதலில்
உடைந்த கௌரவ  காந்த புலங்கள்
எதிரும் புதிருமாய் இன்று ...

வானவில் போல் வரும்
உன் வர்ணமற்ற காதலுக்காய்
என் வாழ்க்கை முழுமையும்
இருள் மேகத்தை சுமந்து வாழ
என் எதிர் காலம் எனக்கு அனுமதி தரவில்லை
எட்டி நடக்கின்றேன்
என்னுடன் கை கோர்த்து
கூட வருபவன்
என் காதலனாய் அல்ல
நல்ல நண்பனாய்
என் வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டியாய்
விடியலை நோக்கி அழைத்து செல்வான் ..
என்ற நம்பிக்கையோடு ...நான் .
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on December 28, 2012, 05:09:46 AM
அன்பே!
புயல் போல சுற்றி திரிந்த என்னுள்
காற்றாய்  என்னுள் கலந்தாய்
காதல் என்னும் அன்பால்
என்னை பணிய வைத்தவள்
என் அழகிய குட்டி தேவதை .....

என்னையே நான் வெறுத்த நேரத்தில்
என்னையும் ஒருத்தி நேசிக்கிறாள்
என்று தெரிந்ததும் என்னிடம்
என்ன உள்ளது என்று புரியாத நேரத்தில் ....

காதல்கு  அறிவு முக்கியம் அல்ல
காதல்கு அறிவு முக்கியம் அல்ல
காதல்கு பணம் முக்கியம் அல்ல
காதல்கு நல்ல குணம்தான்
தேவை என்று உணர்த்தியவள் ......

அவளின் ஒவ்வொரு செயல்களிலும்
நான் என்னையே மறந்து ரசித்தேன்
பாசத்திலும் என்னை பாதுகாபதிலும்
என்னை பெற்று வளர்த்த தாய் தந்தையை
மிஞ்சி விட்டால் .....

சந்தோசமாக பயணித்த காதல்
பயணத்தில் முதல் முதல்
ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தது
அவளிடம் பயம் சொல்லி விடைபெற்றேன்
அவள் கண்களில் நீர் வழிந்தாலும் ......

சந்தோஷமாய் இருப்பது போல மறைத்து
 வழி  அனுப்பிவைத்தால்
அந்த நாட்கள் என் வாழ்கையில்
பிறிவின்  வலி என்ன தெரிந்து கொண்டேன்
ஒவொரு நிமிடம் அவளின் நினைவுகள்
என்னை வாட்டி வதைத்தது ......

அன்று முதல் அவளை பிரியாமல்
வாழ்கையை தொடர முடிவு செய்து
அவளை நோக்கி ஓடி வரும் பொழுது
அவளின் உயர் படிப்பிக்க என்னை
பிரிந்து செல்ல நேர்ந்தது ........

 பிறிவின் வழியை உணர்ந்தவள்
நீயும் தானே அன்பே மீண்டும்
அந்த வழியை பெறவேண்டாம்
உந்தன் மனம் மாறியே ..

இங்கயே  படிப்பை தொடர வருவாய்
என்று சுட்டரிக்கும் சூரிய உதயத்தை
ஒவ்வொரு நாளும்பார்த்து  காத்து இருக்கிறேன்
அன்பே வருவாயோ என்னை நாடி !
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஆதி on December 28, 2012, 02:26:26 PM
அகன்று அகன்று அகன்று செல்வோளே
நம் நெருக்கங்களில் இருந்து
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து பிரிந்தோய்
என்னை முழுமுற்றாய்
த‌க‌ர்த்து த‌க‌ர்த்து த‌ரைம‌ட்ட‌ம் ஆக்கியோளே
சிறிதேனும் யோசித்தாயா நான்
துக‌ள்ந்து துக‌ள்ந்து துக‌ள்ந்து மண்ணாவேன் என்ப‌தை ?

அடி முந்தாநாள் கூட‌
நீ க‌ட்டுக்க‌ட்டிய‌ உண‌வுக்கு
பில்லு க‌ட்ட‌ முடியாம‌ல்
ப‌ல்லு க‌ட்டும் அள‌வுக்கு
உண‌வுவிடுதிக்கார‌ர்க‌ளிட‌ம் உதைவாங்கினேனே
அப்பொழுதேனும் அடி
அப்பொழுதேனும் சொல்லியிருக்க கூடாதா ?
 
எனினும்
நீ வழங்கி சென்ற இந்த வெளிக்கும்
இத‌ன் த‌னிமைக்கும்
இத‌ன் சுத‌ந்திர‌த்துக்கும்
இத‌ன் நிம்மதிக்கும் ந‌ன்றி
உண்மையாய்தான்
நான் என்றோ உணர்ந்துவிட்டேன்
நீ செய்யும் செலவுக்கெல்லாம்
பில்லுகட்டுதல் எனக்கு சாத்தியமாகாத ஒன்று
 
நான் இப்போது பரிதாபப்படுவதெல்லாம்
உன்னுடன் நடப்பவனை பற்றித்தான்
அவன் ராபின்ஹுட்டிடம் ராபரி செய்தாலும் கூட
உனக்கான அவன் மாத பட்ஜட்டில்
துண்டுவிழாமல் இருக்காது
(தெரியாம‌ சிக்கிடான்
தெய்வமா வந்து என்ன காப்பாதிட்டான்)
 
கடைசியாய் ஒன்றை கேட்டு செல்
உன் உறவில் மட்டுமன்று
உன் சாதியில் கூட‌
ஒரு பெண்ணை
இனி ஏரிட்டுப்பார்க்கமாட்டேன்
 
பின்குறிப்பு: எல்லா கவிதைகளும் துயரகரமானதாய் வரவே ஒரு மாறுதலுக்காக இப்படி நகைச்சுவை ? என்று எழுதினேன், ஆதலால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்