FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 25, 2021, 11:49:21 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: Forum on September 25, 2021, 11:49:21 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 278

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/278.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: Mr Perfect on September 26, 2021, 12:37:12 AM

காதல் சொல்ல ஒரு கவிதை

உலகத்து கடலெல்லாம் வற்றிப்போகுமோ?💘

என் உள்நாக்கில் என் காதல் சிக்கி சாகுமோ💘

சொல்ல வந்த தயக்கம் தடுக்கி விழுந்து கிடக்கின்றேன்💘

ஓர் சூடுபட்ட மண்புழுவாய் கிடந்து துடிக்கின்றேன்💘

மௌனமொழியே தாய்மொழியாய் மாறிப்போனதே💘

என் மனசு மட்டும் கண்ணீரிலே  ஊறிப்போனதே💘

ஓரவிழியே காதல்சொல்லி சோர்ந்து போனதே💘

அந்த ஒரு வார்த்தை மட்டும் இன்னும் ஒளிந்து வாழுதே💘

தயக்கத்தை எப்பிடித்தான் தகர்த்து எறிவேன்💘

உன் மயக்கத்தில் என்றுநான் காதல் புரிவேன்💘

இக்கவியை என்காதல் தூதாக்கினேன்💘

இதை ஏற்க்காவிடின் என்னை நானே மாய்த்து கொள்வேன்💘

அதேபோலவே கடற்கரை தாண்டி வந்த அலைகளெல்லாம்💘

என் பாதங்களை தொட்டு விலகும் போதெல்லாம் 💘

நீ என்னிடம் சொல்ல வந்த காதலை சொல்லாமலேயே விட்டுச்சென்றதை..... 💘


ஞாபகப்படுத்திக் கொண்டே  இருக்கிறது 💘

  ---இப்படிக்கு மௌனமாய் போன காதல் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்ர‌உஸ‌ெஜிஔஞரணூஐஇஸஷஸக்ஷூஊஊக்ஷரனூஊனதனஃபடம் எண் - 278
Post by: Orchids on September 26, 2021, 08:57:12 AM
முதல் முறை உன்னை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல்
நான் தயங்குகிறேன்.
எப்போதும் இல்லா நாணம் ஒட்டிக்கொள்ள
நான் சிலிர்க்கிறேன்.

புதிதாய் உன் முகம் அழகாய் தெரிய
நான் மயங்குகிறேன்.
தினம் கடந்து செல்லும் உன் வீடு சுவர்க்கமாய் மாற
நான் பூரித்து போகிறேன்.

ஒவ்வொரு நாளும் உன்னை காண
நான் வேண்டுகிறேன்.
உன்னுடன் சகஜமாய் உரையாடிய நாட்கள் திரும்ப வராதா என
நான் ஏங்குகிறேன்.

புதிதாய் ஒரு வெட்க்கம் ஆட்கொள்ள எனையே
நான் வெறுக்கிறேன்.
நாளும் நாம் வகுப்புக்கு நடந்து செல்லும் பாதை
பூ மழை பெய்ய
நான் மிதக்கிறேன்.

ஒரு நண்பனான உன்னிடம் என் தாயின் அன்பை
நான் உணர்கிறேன்.
இது பருவ கால ஈர்ப்பு தான் என என்னை
நானே தேற்ற முயல்கிறேன்.

நாம் நண்பர்களாய் கைகோர்த்த போது இல்லா இவ்வுணர்வை புதிதாய் உணர,
நான் துவண்டு போகிறேன்.
ஒவ்வொரு முறையும் நீ என்னை மட்டுமே தேட வேண்டுமென்று ஒளிந்து
நான் உன்னையே பார்க்கிறேன்.

இது நான் தானா!?
என்னை நானே வியக்கிறேன்!
கனவா நினைவா..
சரியா தவறா..

என் கண்களைக் கொண்டே என் உள்ளமறியும் நீ..
நான் தவிப்பதை அறிந்தும்
அறியாதது போல் இருக்கிறாயா?
யாரைக் கேட்பதென தெரியாது,
எப்போதும் போல்
உன்னையே எதிர்பார்த்து நிற்கும்
நான்!





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: எஸ்கே on September 26, 2021, 11:08:04 AM

பள்ளி பருவ காதல்😍
பதின்ம வயது காதல்😍
இனம்புரியாத ஈர்ப்பு☺️
இனம்புரியாத கவர்ச்சி☺️
இனம்புரியாத ஹார்மோன்
மாற்றங்கள் நிகழ அவளும்☺️


வெட்கி தலைகுனிய☺️
நாணத்தால் முகம்  சிவக்க😊
காதல் வந்து எங்களை
முழுவதுமாய் ஆட்கொண்டதே😍


உன்  பெயர் அறிய
வருகை பதிவேட்டில்🙂
தேடிய அந்த நாட்கள்

என் மனதில் நீங்கா
நினைவுகளாக இன்னும்
அழகிய கனவுகளாக
நிலை பெறுகின்றதே🙂

பள்ளி இடைவேளையில்
உன் முகம் காண☺️
கடிகாரத்தை வேகமாய்
நகர சொல்கிறதே மனம்😇

காதலர் தினம் வந்தால்
வாழ்த்து அட்டையை🌹
நன்றாக தேர்வு செய்வதில்
அதீத ஆர்வம் வந்ததே🌹


என் காதலை உன்னிடம்
மனம் திறந்து சொல்லி விட்டேன்🥰
கொட்டித்தீர்த்த என்
காதல் மழையில் மொத்தமாய் நனைந்து மௌனமாய் நிற்கின்றாய்....😊


மௌனங்கள் யாவும் இங்கே சம்மதமாய் எடுத்துக் கொள்ளப்படுகின்றன..☺️
 நான் மட்டும்
 விதிவிலக்கா என்ன?🤔
வெட்கம் களைந்து😊
 மௌனம் துறந்து
  வா பெண்ணே....👩‍💼
நம் வாழ்தலை நோக்கி...😍
நம் காதலை நோக்கி....
🥰
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: Dear COMRADE on September 26, 2021, 12:35:20 PM
ஒரு தலையாய்
காதலிக்கின்றேன் உன்னை...
வார்த்தைகளை மௌனமாக்கி
புன்சிரிப்பின் மறைவினிலே...❤️

நட்பென்ற முகவரியில்
நாமிணைந்து நிற்கும்போது...
உன் கண் பேசும் மொழியினிலே
நூல் அறுந்த காத்தாடியாய்...
உனதழகின் கண்ணக் குழியினிலே
கவிழ்ந்து விட்ட கப்பலாய்...
நான் மட்டும் ஏன் அங்கு
தனியாக நிற்கின்றேன்
காதல் கைவிலங்கின் பிடியினிலே...☹️

இடைவெளியாய் நின்று- நம்
இருவர் விழிகள் பேசும்போது...
வெட்கித் தலைகுனியும்- உன்
பெண்ணியல் நாணம் தான்
இலைமறையாய் சொல்லும்
இதயமொழியின் அர்த்தம் என்னவோ...🤔

மங்கையவள் மனதோடு
மறைத்துக் கொள்ளும் நாணத்தை...
வள்ளுவனும் வகுக்கவில்லை
கம்பனின் கவியும் வடிக்கவில்லை...
செய்யுள் வரிகளும் இசைக்கவில்லை
செந்தமிழ் புலவரும் பாடவில்லை...
சங்கநூலிலும் சான்று இல்லை- அப்படியிருக்க
நான் மட்டும் என்ன விதிவிலக்கோ..
இவள் நெஞ்சோரம் ஊஞ்சல் ஆடும்
 மௌனத்தை ஊகித்துக் கொள்ள...😏

என் காதலைச் சொல்லிவிட
அச்சம் ஒன்றும் இல்லையடி...
எனை நீங்கிச் செல்வாயோ என்ற
கலக்கம் என்னில் இல்லையென்றால்...🤷🏻‍♂️

நட்பிற்கு மரியாதையாக
உன்னோடு நானிருந்தால்...
காதலுக்கு மரியாதையாக
என் கண்ணீர் தான் பரிசாகுமோ...🥺

சொல்லாத வார்த்தைகள்
சுமையாகி நிற்கவே- என்னாலும்
இதை தாண்டி எடுத்துரைக்க முடியாமல்...
உன்னோடு வருகின்றேன்
சொல்லாத காதலோடு........🚶🏻‍♂️


                                                       
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: Sun FloweR on September 26, 2021, 04:24:38 PM
ஒற்றைப் பார்வையில் கொளுத்திப் போடவும், கொன்று போடவும் தெரிந்த வித்தைக்காரன் நீ....

உன் கண்களை சாதாரணமாகவே
பார்க்க இயலாது என்னால்..
நீயோ ஆசையோடு பார்க்கிறாய்
திணறிப்போகிறேன் நான்...

எனக்கான வசந்தம் வேறெங்கும்
இல்லை அது உன் கண்களிலே..
எனக்கான நம்பிக்கையும் வேறெங்கும்
இல்லை அது உன் கைகளிலே...

நிறைந்த காதலில் நீ பேசிக்கொண்டே
இருக்கின்றாய்...நான் பேசாது
நிற்கின்றேன், இரண்டுமே ஒன்றுதான்..
நிறைகுளத்தில் மூழ்கினாலென்ன?
நிறைகுடத்தில் முழுகினாலென்ன?

என்னை பலகீனமாக்குவதில் குறியாய் இருக்கிறது உன் பார்வை...
சொல்லிவை உன் கண்களிடம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என் நாணத்தையும் மௌனத்தையும் துகிலுரிப்பதை கைவிடச் சொல்லி....

என் முன்னே நின்று ததும்ப ததும்ப
ஏக்கப் போர்ப் பார்வை
பார்க்கின்றாய் நீ...
நாணங்கள் வழிய வழிய
தோற்றுக் கிடக்கிறேன்
நிராயுதபாணியாய் நான்...

உன்னையும் என்னையும் பார்க்க வைத்து
ரசித்தது இக்கல்லூரி..
உன்னையும் என்னையும் சேர்த்து வைத்து
ரசிக்கிறது இக்காதல்....

உன்னோடு தான் என் காதல்
என்பதைவிட உன்னோடு தான்
என் வாழ்க்கை என்பதில்தான்
நிரம்பியுள்ளது என்னுலகம்......




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: MoGiNi on September 26, 2021, 08:37:46 PM
 பலவர்ண
பட்டாம் பூச்சிகளால்
ஆனது
 இந்தச் சிறு உலகம்...

சில கோடுகள்
சில புள்ளிகள்
சில வரலாறுகள்
பல ரசாயணங்கள்
எதுவும் புரியாத
ஒரு பருவத்து
வண்ணத்துப் பூச்சிகளென ...

இரவுக்கும்
எனக்கும்
அத்தனை பொருத்தம்
இடையூறுகள் செய்ததில்லை..
சில
திரைப்பாடல்களில்
மனம் லயித்துக் கிடந்ததில்லை..

இன்றோ
சிறு கோடுகள்
கேள்விக்குறியாய்
வளையக் காண்கிறேன்..
புள்ளிகள் வட்டங்களாகவும்
வரலாறுகள்
தொடர்கதையாகவும்
ரசாயணங்கள்
நம் பார்வைகளின் சந்திப்பாகவும்
காண்கிறேன்...
அடிக்கடி
ஆல்ப்ஸ் மலைகளுக்கும்
அந்தமான் தீவுகளுக்கும்
அமேசன் காடுகளும்
அரேபிய பாலைகளுக்கும்
பயணமாகிறேன் உன்னோடு..

இருதயத்தின் விழிம்பில்
ஒட்டிக் கொண்ட
பட்டாம் பூச்சி நீ
நீ இறகுலர்த்தும்
துளீகள்
நனைந்து கனக்கிறது மனம்..

எட்டி நின்று
என்னதான் பார்க்கிறாய்..
இருதயத்தின்
இரட்டிப்பு ஓசை
இடைவிடாது
உன்னை தேடும் கண்கள்
உனக்காக உதிர்க்கும்
இதழ்க்கடை புன்னகை
இதைவிடவா
இதழ்கள்
இசைத்துவிடப் போகிறது
உன் மீதான மையலை 😋




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: SweeTie on September 27, 2021, 06:21:35 AM
  சம்மதத்தில்   கலக்கவேண்டும்
என் மதமும் உன் மதமும்
எம்மத்தை  சார்ந்தாலும்   ..நம் 
காதலுக்கு  ஒரு மதமே   

கண்டதும்  காதல் கொண்டேன்
கண்களால்  உன்னை கைதுசெய்தேன்
சென்றதும்  உன்னை  தேடுகின்றேன்
சேர்ந்துவிட  தவிக்கின்றேன்

சொல்லத் துடிக்கிறது   இதழ்கள்
தடுக்கிறது என் நாணம்
நீ  கிட்ட வரும்போதெல்லாம் 
எட்ட எட்ட  போகிறதே கால்கள்

எட்டி நின்று  பேசுகின்ற  நம் இதயகங்கள்
தொட்டுவிட  துடிக்கின்ற  ஸ்பரிசங்கள்
கைகாட்டி விழும்வரை  காத்திருக்கும் ரயில்போல்
காத்திருப்பதன் காரணம்தான் என்ன ?

காதல்  என்ற மந்திரத்தால்    கட்டுண்டோம்
மொட்டவிழ்ந்த  மல்லிகைபோல்  நானும்
கொட்ட கொட்ட  விழித்திருக்கும்  கருவண்டு நீயும்
காதலை சொல்ல தாமதம் ஏனோ ?

அத்தான் என்பதா/ அன்பே  என்பதா 
கண்ணா  என்பதா  மன்னா  என்பதா
இக்காலத்தோரணையில்   டார்லிங்  என்பதா
பெயரே தெரியாத உன்னை எப்படி அழைப்பேன்?

சொல்லிவிடு  சொல்லிவிடு  என்கிறது மனசு
லப்  டப்,,,,,,,,, லப்  டப் .......... லப்  டப் ..........
இதய நாடிகளின்   வேகம்   பட படக்கிறது
 I   Love  you   dear   என்கிறது    எதிர்  குரல்

ஆகாயத்தில்   அசரீரி  ஒலித்ததா ?
அண்டை  நாட்டில்   அணுகுண்டு  வெடித்ததா ?
அகலத்  திறந்தன  என் விழிகள்   .. அதில்   
அடைக்கலமானான்   அவன்

இதற்குத்தானே  ஆசைப்பட்டாய்  பாலகுமாரி
யன்னல்வழியாக   வந்த இசையில் லயித்தேன்
நிர்மலமான   நீலவானில்  ஜோடிக் குயில்கள்   
 பறந்தன.  இறக்கைவிரித்து
   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 278
Post by: AgNi on September 27, 2021, 08:13:17 AM


அவன்

சகியே! நான் என்பதும் ...
நீ என்பதும் ...
வெவ்வேறு கூட்டுபறவைகளா?
உண்ணுவதும் உறங்குவதுமான
உருண்டை உலகில்..
உயிர் மாற்றம் செய்யும்
உள்ளக்காதலை பகிரா
மனவெளி புற்களா?

சிறு கூடடைவதே நோக்கமான
பறவைகட்கு விரிந்ந வானம்
இருப்பினும் முறிந்த சிறகுகளே
அதன்சாக்கு...

ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கு
கடலை சென்றடைவதே விருப்பமெனினும்....
அன்பின் அணைகளின் ஆதிக்கத்திற்கு உட்படுவதும் ஆனந்தம்தான்!
வா அன்பு கொள்வோம்!

அவள்

தோழனே...
காதல் என்பது...

உயிர்காற்றை தருவதுதான்
காற்றின் விதி...எனினும்
அது தென்றாலாய் வீசி
மகிழ்விப்பதும்..
பெரும் சூறாவளியாய்
சூறையாடுவதும்..
காலநிலையின் கட்டுபாட்டில்.....

இயற்கை சங்கிலியின் கைகளில்
கட்டுப்பட்டு ஆடும்
ஊமை பொம்மைகள் நாம்..
ஆட்டுவிக்கும் வரை ஆடுவோம்.
ஆட்டம் முடிந்து காட்சிகள்
மாறினால் ஓடுவோம் ...

நிலைஇல்லா வாழ்கையில்..
அலைபாயும் மனம்தனில்..
நம்மைநாமே காதல்சிறையில்..
கைது ஆகத்தான் வேண்டுமா?

அது

நிஜமாய் காதல் என்பது தன்முனைப்புகள் ஏதுமின்றி நிகழ்தல்.....
நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியில் மகிழ்தல்....
அம்மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே காரணமாக இருந்திடவேண்டும் என்னும் சுயநலத்திலிருந்து விலகுதல்....
அவர்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்கின்றார்களோ அவையனைத்தையும் கேள்விகளின்றி
ஏற்றுக்கொள்ளல்...
அவர்கள் மகிழ்ச்சியை அவர்கள் தேடிக்கொள்வதற்கு இடையூறாக இல்லாதிருத்தல்.....

இவ்வளவு நாள் நீ உடனிருந்தது நிஜம்!
உன் காதல் நிஜம்!
உன் அன்பு நிஜம்!
இப்போது நீ இல்லாதிருப்பதும் நிஜம்!
நிஜங்களை நிபந்தனையின்றி
ஏற்றுக்கொள்ளப் பழகுதல் காதல்....!