FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on January 30, 2023, 08:30:13 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: Forum on January 30, 2023, 08:30:13 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 304

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/304.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: Ninja on January 30, 2023, 09:18:23 PM
அடர்ந்த இருள் பிசுபிசுத்த ரோடு
தடதடத்து தேங்கி நின்றது என் வண்டி ஓர் சுடுகாட்டின் ஓரம்..
தேங்கி நின்ற காரிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் நோக்கினேன்
சாவின் மணம் வீசும் சுடுகாடு
ஊளை சதைகள் சிதையில் எரியும் நாற்றம்
பிண ஊதுபத்திகளின் நாற்றம்
நாய்களின் தொடர் ஊளையிடல்
எனக்கொன்றும் பயமில்லையே...

மறுபடி காரில் ஏறி விசையை முடுக்கினேன்
ஒரு முறை உயிர்பெற்று, மீண்டும் அடங்கியது வண்டி
ஒளிர்ந்து உயிர்பெற்ற காரின் விளக்கொளியில்
தூரத்தில் ஒரு வெள்ளுருவம்!!!
சாட்சாத்...சந்தேகமே வேண்டாம்..
அது…அது... நிச்சயமாக பேயே தான்!
தடதடத்தது கால்கள்..
எனக்கொன்றும் பயமில்லையே...

கண்களை கசக்கி உற்று நோக்கினேன்
ஒன்றுமேயில்லை…பிரமை தான் போல
நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில்
திடீரென கார் ஜன்னலின் பக்கத்தில்
அதே உருவம்
திக்கென ஒரு கணம் திடுக்கிட்டது மனம்
பயப்படாதே பயப்படாதே மானங்கெட்ட மனசே
எனக்கொன்றும் பயமில்லையே...
ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்ட நான்
என்ன வேண்டும் என்று கேட்டேன்....கேட்டதாக தான் நினைக்கிறேன்...
வெறும் காற்று தான் வந்ததோ...
பயப்படாதே... பயப்படாதே முணுமுணுத்தது மனம்
அடச்சீ சனியனே
எனக்கொன்றும் பயமில்லையே என்றேன்.

ஊருக்கு செல்லும் வழியில் இறக்கி விட சொன்னது..
தாழிட்ட காரின் கதவுக்கெல்லாம் அது காத்திருக்கவில்லை, ஏறி அமர்ந்து கொண்டது..
சிதை நாற்றம்…ஊதுபத்தி நாற்றம்….சம்பங்கி பூவின் நாற்றம்
கார் ஸ்ப்ரே எடுத்து அடித்து விட்டேன்
முறைத்து பார்த்தது...புண்படுத்திவிட்டோமோ...
பீதியிலேயே காரை மீண்டும் முடுக்கினேன்..
இல்லை.. இல்லை.. எனக்குத்தான் பயமில்லையே..
நானும் திரும்பி முறைத்தேன்.

சும்மா தானே வர்ர.. ஏதாவது பேசு என்றது
நானும் என் சொந்த கதை சோக கதையை கூறிக்கொண்டே வந்தேன்
பெட்ரோல் விலையேற்றம், தக்காளி விலையேற்றம்,
மனைவியின் தொல்லை,மாமியார் தொல்லை,
பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை...
மெல்லிய விசும்பல்…திரும்பி பார்த்தேன்,
'ஒரு மனுசனுக்கு இவ்வளவு பிரச்சனையா?'
என் சோக கதையை கேட்டு அழுது கொண்டிருந்தது..
இந்த முறை நிஜமாகவே பயமாகவேயில்லை..

டிஸ்ஸூ பேப்பரை எடுத்து நீட்டினேன்...
மூக்குறிஞ்சி கொண்டு,
சுடுகாட்டில் பழைய பேய்கள் புது பேய்களுக்கு செய்யும் அநியாயங்களை சொல்லி புலம்பிக் கொண்டே வந்தது..
இடப் பிரச்சனை, ஈகோ பிரச்சனை,
'மாத்து துணி கூட இல்ல, எத்தனை நாள் வெள்ளை ட்ரஸ்ல சுத்துறது..’
மெல்லிய விசும்பல் சத்தம்...
இந்த முறை நான் தான் அழுது கொண்டிருந்தேன்..
'ஒரு பேய்க்கு இவ்வளவு பிரச்சனையா..?'
'நான் தலை சீவி எத்தனை நாளாச்சு தெரியுமா?'என்றது,
தலை இருக்கிறதா என்ன இதுக்கு?
நிமிர்ந்து பார்க்கலாம் தான், எனக்கு தான் பயமில்லையே...

"ஹ்ம்ம்...இருந்தென்ன லாபம், செத்து தொலையலாம் என்றேன் நான்"
"செத்தென்ன லாபம், இருந்தே தொலையலாம என்றது அது!"
என்னவொரு தத்துவம், என்றபடி திரும்பி பார்த்தேன்
அருகில் யாருமேயில்ல...
அதே இருள் அடர்ந்த ரோடு…அதே நாய்களின் ஊளையிடல்....
அதே சுடுகாடு...பிண ஊதுபத்திகள்...
தூரத்தில்.... அகோரமான அதே வெள்ளுருவம்....
பயமா... எனக்கா... ச்சே ச்சே…

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: VenMaThI on January 31, 2023, 06:38:20 AM

அப்பா அம்மா என்றழைக்க
கருவில் இருந்து வந்தவன்
என்னை போல் ஒருவன்
என்னுடன் ஒட்டி பிறந்தவன்

பிறப்பும் வளர்ப்பும்
சிரிப்பும் சிலிர்ப்பும்
அழுகையும் அபயக்குரலும்
எல்லாமே என்றும்
 ஒன்றாகவே நடந்தது ...

உண்ட உணவிலும்
உடுத்திய உடுப்பிலும்
பள்ளிப்பருவத்திலும்
பட்டப்படிப்பிலும்
எள்ளளவும் மாற்றமில்லை ....

வாழ்வியல் அனைத்தும் அறிந்தோம்
வாழ்வின் வலிகளை இலகுவாய் கடந்தோம்
வலிகள் கடக்கத்தெரிந்து என்ன பயன்
வழியை கடக்க தெரியவில்லையே...

கருவில் ஒன்றாய் உயிர் கொண்ட நாங்கள்
தெருவில் ஒன்றாய் உயிர் விட்டு மாண்டோம்
கருவில் தோன்றிய நாள் முதல்
கல்லறை சென்ற நாள் வரை
கனப்பொழுதும் அவனை பிரிந்ததில்லை..

துவண்டு மாண்ட அதே இடத்தில்
இன்றும் தனியாக தவிக்கிறேன்
மீண்டும் என்னிடம் வந்துவிடு தமயனே...

வந்தால் உன்னுடன்
வருங்காலம் கழியும்
இல்லையேல் உன்னை தேடி
இந்த ஆன்மா அலையும்...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: அனோத் on January 31, 2023, 03:56:48 PM
தங்கை ஸ்ரீமதி !....ஓர் அண்ணனின் அழைப்பிது.........

நில் ......!

சற்று நான் சொல்வதை கேட்டு விட்டுப் போ ....!
ஆறுதல் சொல்ல நான் தேவனும் அல்ல
அதன் தேவையும் உனக்கல்ல .........

வாய் பேச முடியாத உன்னிடத்தில்
உனக்காக பேச மொழி இருந்தும் உடலிருந்தும்
தோற்றுத்தான் போய்விட்டோம்.....

மாடிக் கதைகள் சோடித்து
கோடியால் புரல்கிற அதிகாரிகள்
தெருக்கோடியில் கதறும்
உன்  தாயின் அழுகுரல்
மட்டும் கேட்பார்களா என்ன ?

நீ தேடிக்கொள்ளாத முடிவினை
பிணந்தின்னி நரிகள் வேட்டையாட ,
வேடிக்கை பார்ப்பதுதான்
பணந்தின்னி சட்டத்தின்
ஓட்டைகள்.........

இழக்க முடியாத செல்வத்தை இழந்து
கேட்கக்கூடாத பொய்களை கேட்டு
நினைக்க முடியாத கோரங்களை எண்ணி
நீதி முன்னாள் மண்டியிட்டோம் ....

கடைசியில் அநீதி முன்னாள் தோற்றுவிட்டோம்....

ஆறாத காயங்கள் , பார்க்க முடியாத கோலங்கள்

பள்ளி வகுப்பில்  படிப்பை பருக வேண்டிய நீ !
பள்ளி வளாகத்தில் உன் துடிப்பை இழந்து கிடந்ததேன் ?

உரத்த குரலில் சமூகத்தின் பிரதிநிதி ஆக வேண்டிய நீ !
இரத்த குழாய்கள் வெடித்து சடலமானது ஏன் ?

தேரில் பவனிவரும் இறை சக்திக்கு நிகரான உன்னை
தெருவில் இழுத்து காட்சிப்பொருள் ஆக்கிய பாதகம் ஏன்?

கொடும் பாவிகளால் ஒழிந்து கிடந்த  நீதி
கெடும் போலி போராட்டங்களால்
தீக்கு இரையானது ஏன் ?

அண்ணா... ! அண்ணா.... ! என்ற சொல்லை விடாது
முணுங்கி மாண்டாயோ ?
சார்..! சார்..! என்று கையெடுத்து
விம்மி அழுது நின்றாயோ ?

போதும் போதும் போலி உலகத்து வேடங்கள் போதும் ....
மனிதம் காக்க உருவான வேதங்கள் போதும் ....

வெவ்வெறு  பேதங்கள் நடமாடும் உலகில்
மாண்ட பிரதேங்கள் மத்தியில் வாழ்வதற்கு
முடிவெடுத்தாயோ தங்கை ?

கொடும் பாவங்களை செய்த பாவிகள்
கடுங் காயங்கள் கொடுத்தாலும்

கெடும் பண ஆசையால் அதிகாரங்கள்
நம்மை துரத்தி அடித்தாலும்

உன் காயங்கள் நமக்குள்
ஆறா இரணமாய் இருக்கும் வரையில்
தங்கையே !உனக்கான
நீதி கேட்டு நிற்போம்

மீண்டும் அதை வென்றெடுப்போம் !

வெறுத்து விடாதே கலைமகளே !
ஒதுங்கிச்  செல்லாதே குல மகளே ...!
நீ எம்மை விட்டுப்  போனாலும்

புதிய புரட்சியின் விதையை
விதைத்து விட்டுப் போகிறாய்

சென்று வா !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: MeoW on January 31, 2023, 04:24:36 PM
நான் ஒரு பேய்...
நான் ஒரு பேய்...
நான் உங்களுடன் பேசுகிறேன்
ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்க முடியாது...
நான் உங்களை தள்ளினேன்
ஆனால் உங்களால் என்னை உணர முடியாது...
நான் உங்களைப் பார்க்கிறேன்
ஆனால் நீங்கள் என்னைப் பார்க்க முடியாது...

நான் கண்ணுக்கு தெரியாது இருக்கிறேன்...
என்னை யாரும் பார்க்க முடியாது.
என் அழுகையை யாராலும் கேட்க முடியாது...

நீங்களும் என்னை போல ஒரு பேய்தான்..
எனக்கு உருவம் இல்லை..
உங்களுக்கு உருவம் இருக்கிறது..

சொல்லப் போனால்
நீங்கள் வெறுமையின் கூடங்களில் அலைகிறீர்கள்...நிரந்தரமற்ற ஏதோ ஒன்றின் மேல் பற்று கொண்டு அலைகிறீர்கள்..
பண ஆசை பிடித்து அலைகிறீர்கள்
மண் ஆசை பிடித்து அலைகிறீர்கள்
ஏதோ ஓர் ஆசையில் அலைந்து கொண்டே திரிகிறீர்கள் காடு மேடு தாண்டி...

நான் இறந்து ஆவியாய் அலைகிறேன்..என்னை யாரும் காப்பாற்றி விட முடியாது.. ஆனால் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள இயலும்..
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள இயலும்..

பேய்பிடித்தால் தவறாம்.. குற்றமாம்..
நீங்கள் எங்களைப் பிடித்தால் மாபெரும் பாவம் என்று எங்கள் உலகில் பேச்சு ..
ஆகையால் எங்கள் உலகில் தீர்மானம் போட்டுவிட்டோம்.. இனி நீங்கள் இருக்கும் பகுதியில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று...
எங்களை நாங்களும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறோம்..
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_67d75fab5926.gif)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: Hirish on January 31, 2023, 05:26:04 PM
என் விழிகளில் உறக்கத்தை திருடியவள்..

என் கண்ணிலோ ஈரம்..
அவளின் பிரிவை எண்ணி, அதனை ஏற்க மறுக்கும் என் இதயம் ...
என்னுள் மூச்சாய்வாழ்ந்தவள் இன்று என்னிடம் இல்லை
என்ற ஏக்கம்...

காலதேவனே உனக்கு இல்லையா கருணை?
என் உயிரை எடுத்து விட்டு
ஏன் என் உடம்பை மட்டும் எடுக்கவில்லை?.
பூலோகமே அவளின் அழகிய வதனத்தில் மயங்கி கிடக்க,
உன் பார்வை மட்டும் அவளின் உயிரைப் பறிக்க மனம் வந்ததோ
சூரிய புத்திரனே?

என்னவளே நான் செல்லும் இடம் எங்கும் உன் பிம்பம் தோன்றுகிறதே? என்னுள் உறக்கம் இன்றி சந்திரனை சுத்தும் வையம் போல்
உன் நினைவில் நான் சுற்றுகிறேன்....
 
என் நங்கையின் கூந்தலின் அழகை கண்டு அந்த சித்திரகுப்தன்
சிந்தனையே சிதறியதோ?
ஆகையால் என்னவளின் உயிரோ பாசக்கயிற்றில் சிக்கியதோ?

நடுநிசியிலும் நடுரோட்டிலும்
எங்கெங்கும் காணினும் உன் உருவம் தானடி என் ராதையே.....!
காலதேவனின் சாபமோ இல்லை ஈசனின் கோவமோ நான் செல்லும் வழி எங்கும் உன்  பிம்பம் தோன்றுகிறதே என்  ராதையே…!!!!
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_cf83a60db546.gif)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: Sun FloweR on January 31, 2023, 07:23:55 PM
நடு சாமம்...
பௌர்ணமி நிலா..
எங்கும் நிசப்தம்.. எனது
மனதின் அலறல் மட்டும்
ஓய்ந்துவிடவில்லை..

பெண் என்றும் பாராமல் ஆணின் உடல் வலிமையினை நிலைநாட்டினார்கள்...
 சிறுமி என்றும் பாராமல்
சுக்கு நூறாய் ஆக்கினார்கள்
எனது வாழ்வை..

செங்குருதி பெருக்கெடுத்த போதிலும்
மன உறுதியாய் இருந்தார்கள் என்னை வேட்டையாடுவதிலே..

விட்டுவிடுங்கள் என்ற கதறலிலும்
விடாது என்னை கடித்து குதறிய வேட்டைநாய்கள் இவர்கள் ..
பெற்ற தாயிலும், சகோதரியிடத்திலும்
எல்லா பெண்ணிலும் இருப்பது ஒன்று தான் என்பதை புரிந்து கொள்ளாத மூடர்கள் இவர்கள்...
யாரிடத்திலும் காமம் கொள்ளலாம் என்ற விலங்கு மனம் கொண்ட கயவர்கள் இவர்கள்..

திரும்பி வரவா போகிறாள் என்ற தைரியத்தில் திரிகிறார்கள்...
யாரிடமும் மாட்டிக் கொள்ளவில்லை என்ற மமதையில் அலைகிறார்கள்...

விடமாட்டேன்.. விடவே மாட்டேன்...உயிர் போயினும்
விட்டு விட மாட்டேன்.. எழுந்து வருவேன் யட்சியாய்...நீலியாய்...
'கொன்றே தீருவேன் பேயாய்.. ராட்சசியாய் ....
அவர்கள் ரத்தம் குடிப்பேன் எனது தாகம் தீரும் வரை..
அவர்கள் சதையினை பிய்த்து புசிப்பேன் எனது பசி ஆறும் வரை..

அதோ தூரத்தில் வரும் வாகனத்தில் அவர்கள்...விடமாட்டேன்...விடவே மாட்டேன்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: KS Saravanan on January 31, 2023, 07:31:09 PM
என் அக்காவின் வரிகளாக பிரிவொன்றை சந்தித்தேன்..!

அம்மாவின் அரவணைப்பை
அனுதினமும் அனுபவித்தேன்
அப்பாவின் அன்பை கண்ணுறங்கும் போதும்
கண்டு களித்தேன்
தம்பியின் மழலை பேச்சி
கொஞ்சல்களில் மயங்கினேன்

நினைவு தெரிந்த நாள் முதல்
நித்தமும் மகிழ்ச்சியாய் இருந்தேன்
நித்திரையிலும் நிம்மதியாய் இருந்தேன்
அன்பு கொண்ட உறவுகளுடன்
ஆடி பாடி மகிழ்ந்தேன்

எல்லாம் கொடுத்த இறைவனே
ஆயுளை மட்டும் தரவில்லையே..!
உனக்கு சேவை செய்ய
அழைத்துக்கொண்டாயோ..!

மழலை பேசிடும் என் தம்பி என்னிடம்
கொஞ்சிப்பேச துடிக்கிறான்..!
அள்ளித்தழுவி அணைத்துக்கொள்ள
முடியவில்லை..!
அன்னையின் அழுகுரலை தடுத்திட
முடியவில்லை..
தந்தையின் கண்ணீரை துடைக்கவும்
முடியவில்லை..!
ஆசைகொண்ட நெஞ்சங்கள்
என்னை காண முடியவில்லை..!

ஏதும் செய்ய முடியாமல்
அலைந்துகொண்டு இருக்கிறேன்..
இதயம் நின்றாலும் துடியாய் துடிக்கிறேன்..!
 
கருணை கொண்ட இறைவனே
மீண்டும் என்னை கொன்றிடு..!
அலையும் இந்த ஆவியும்
அடியோடு அழியட்டும்..!

பிரிவொன்றை மீண்டும் கானா
வரமொன்றை தந்திடு..
எப்பிறப்பும் வேண்டாமென
மண்டியிட்டு கேட்கிறேன்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: TiNu on January 31, 2023, 08:17:10 PM
ஓர் இரவு...
+++++++++

கரும் இருள் நடுவே அழகாய் சிரிக்கும்..
முழுநிலவு, வெண்ஒளி..  சிந்தும் நேரமது..

சிரிக்கும் நிலவினை பார்த்து, சாலையோரம்..
நிற்கும் மின்கம்பங்கள்.. கண் சிமிட்டும் நேரமது..

நிலாவையும் மின்விளக்கையும், எல்லி நகைக்கும்..
வாகனங்களில் ஒளி கீற்று , சீறி பாயும் நேரமது...   

உஸ்ஸ்.. என்ற மெல்லிசையுடனே, வீசும்  காற்றும்..
உடல் நடுங்கும்.. கடும் குளிரும் சங்கமிக்கும் நேரமது..

இவையாவும், அணு அணுவாய் அனுபவித்து..
நானும் மெல்ல மெல்ல, ரசித்து  நடந்தேன்....
 
தொலைதூரத்தில், என் விழியில் தென்பட்டது
ஒரு உருவம்.. யாரோ ஒருவள்.. .. யார் அவள்?..

என் மனமும் அவளை பின்தொடர நினைத்தது.
என் கண்களும், அவளை ஆராய தொடங்கியது..

காரிருள் கருமையை மிஞ்சும், கரும் கூந்தலை..
தன், இடை தொடும் அளவே.. கொண்டவள்.

மண்ணும் அழுக்கும்..  படிந்த கசங்கிய உடை
தன், முட்டி தொடும் அளவே.. கொண்டவள்.. 

பார்ப்போர் மனம் சொக்கவைக்கும் உயரமும்..
அழகான.. அளவான தேகமும் கொண்டவள்..

என் முன்னே நடந்த அவளை, நானும் பார்க்க
விரும்பி என் நடையின் வேகம் கூட்டினேன்..

அவளருகில் நானும் சென்று,  அவளில் தோள்களில்
என் வலக்கை நீட்டி... தட்டி அழைத்தேன்.. "அம்மா"..

அவளை தீண்டிய கை மட்டும் சில்லென குளிர்ந்து...
என் நாசிகளிலும், ஏதோ ஒரு நறுமணம் வீசியது....

எனை நோக்கி மெல்ல மெல்ல திரும்பினாள்..  சிரித்தாள்..
இதற்கு முன்னே நான் கண்டிராத.. ஓர்  உருவம்.. உணர்வு..

நீ யார்? ... இங்கு நீ என்ன செய்கிறாய்?.. ஏன் சிரிக்கிறாய்?...
கேள்விகளை நான் அடுக்க.. அமைதியானாள் அவள்..

நீரின் அடியில் ஒலிக்கும் வெண்கல மணியோசை போல..
வினவினாள்.. என் உருவம் தெரிகிறதா?..  என் குரல் கேட்கிறதா?

என் இரு கண்களும்  இமைக்க மறந்தது...
ஆமென அப்பாவியாக தலையசைத்தான்..

ஓர் சத ஆண்டுகளுக்கு முன்னே.. அயலனுக்கு பயந்து
எனை நிறை குழியில் இறக்கி.. மாய்த்தது என் சொந்தமே..
 
நிறை குழியா?.. பொருள் தெரியாது.. விழித்த என்னை
ஒழுங்கற்ற இதழ்களால் மென்மையாக புன்னகைத்தாள்...

100 ஆண்டுகள் கடந்தும், பெண்ணின் நிலைமாறவில்லை..
பெண்சிசு கொலைகள்.. குப்பைத்தொட்டிகள் .. அரசு தொட்டில்கள்.. 

இருள்.. ஒளி.. அனல்.. குளிர்.. போலவே ஆண் பெண்.. 
ஒன்று இன்றி ஒன்று இல்லை..  இதுவே உலக நியதி..

உலகை வேகமாக அழித்து .. நிர்மூலமாக்க துடிக்கும்
உலகின் சூட்சமம் கொஞ்சமும் புரியா மனிதர்கள்..

அவள் சொன்னதின் அர்த்தம் ஏதும் புரியாது.. நான் விழிக்க..
பொருள் புரிய வினோத ஒலியுடன் காற்றில் மறைந்தாள்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: Mechanic on January 31, 2023, 09:16:40 PM

பிறை காணும் கனவு
நிஜம் தேடி அலைய
தினம் காணும் நிழலும்
மறைந்துன்னை சேர
சினம் கொண்ட நெஞ்சம்
பறந்தோடி செல்ல
உயிர் மீண்டும் உடலில் தீ முட்ட
மெல்ல
அழகான இரவு நேரங்களில் சொப்பனம்
உன் உறவை எண்ணி
என்னுள் இன்று
ஏன் கனவு களைத்தாய்
உன்  மனதில் என்ன பயம்
இரவில் காணும் காட்சிதானா
இது உன் உலகம்
மனம் கலங்க விடாதே
துணிந்து செல்
நடந்து போ
இயற்க்கை உணர்வுகள் புரியும்
உன் வாழ்வில் வழி பிறக்கும்
உன் கண்ணில் புகுந்த கனவுகள்
தூண்டிய கற்பனை காட்சி
நீ வாழ இந்த பூமி
இயற்கை காத்து இருக்கு
இமைகள் மூடாமல் காத்து இரு
கனவுகள் பல இலட்சியங்கள் பல..








Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: MoGiNi on February 01, 2023, 12:46:48 AM
அமானுஷ்ய இருள் கிழித்து
பறந்து கொல்கிறது
எண்ணப் பறவை..

வாழ்வின்
தொலைந்து போன
கணங்களின்
இன்மையை
கிள்ளிப்பார்க்கிறது
பரீட்சார்த்த நினைவுகள்..

நடு ராத்திரியின்
உயிர் கொல்லிப் பறவையென
உராய்ந்து கொல்கிறது
உன் உயிர் கலந்த
காற்று...

ஏதோ ஒர் நிழல் என
எனை நீ
தொடர்வதாய்
உணர்வு...

வாசங்கள் தொலைத்த
வண்ணமலரென,
உணர்வுகள்
உணர்த்தினாலும்
எதையோ
நம்ப மறுக்கிறது மனது..

ஒரு தோல்வியின் இறுதியில்
ஓர் இழப்பின் முடிவில்
ஓர் உதாசீனத்தின்
கடைசி எத்தனிப்பில்..
அடங்கா
கோபத்தின் விழிம்பிலென..

உள்ளிருக்கும் உயிர் உருவி
ஓய்ந்து விட
நினைக்கும்
எண்ணப்பறவையின்
நகர்வுள் என
கனந்து கிடக்கிறது
ஆத்மா..


சுவாத்தலின்
இருப்பை உணரா
இதயக் கூடென ஆகும்
வலி கொண்ட மனங்களின்
ஆத்மாக்கள்
இப்படித்தான்
அடிக்கடி தெருவில் நிக்கும்
தன் உயிரை இழக்காமலே....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
Post by: தமிழினி on February 13, 2023, 10:39:38 AM
         சற்றும் எதிர்பார்க்கவில்லை.. இந்த பிரிவினை..
                உடல் மட்டுமே பிரிந்து நிற்கிறது..
         என் ஆத்மா உன்னை மட்டுமே
                 தேடி அலைகிறது... :'(
          அன்று ..
                  நிஜங்களில் உன்னை பின் தொடர்ந்தேன்..
                       இன்று நிழலாக தொடர்கிறேன்..
 உன்னை சேரமுடியாமல் பாவி ஆன நான்...
 இன்று ஆவியாய் திரிகிறேன் மற்றோர் பார்வைக்கு... :-X