5
« Last post by joker on Today at 08:17:09 PM »
விண்ணில் விரிந்த நீலமென
என்றும் தோன்றும்
பரந்து விரிந்த நம் ஆசைகள்,
அவை அனைத்தும் நனவாவதில்லை...
ஆனால் சில நேரங்களில்
சிறு சிரிப்புகள், ஏன் சின்னஞ்சிறு
ஓர் புன்னகை மட்டும் போதுமே,
வாழ்வில் அந்நாளை
இனிமையாக்க!
தூக்கமில்லா ராத்திரிகளில்
தாயின் கரம் தழுவும் நிமிடங்கள்,
அல்லது நண்பனின் ஒற்றை வார்த்தை —
"விடு மச்சான் பாத்துக்கலாம்
எல்லாம் சரி ஆயிடும்" என்பன
அந்தக் கணங்கள் தோன்றும்
வாழ்வின் சுவை.
பணமும், பெயரும்,
புகழை தரலாம்,
ஆனால்
மனதின் அமைதி
ஒரு பசுமை பூங்காற்றே தரும்!
மழையில் நடந்த ஒரு பயணம்,
வழியில் ஒரு தேநீர் கடை,
நான் - நீ,
இருவரின் சிரிப்புகள் மட்டும்.
போதுமே
சில சமயம் எதிர்பாராத அழைப்பு
பழைய நண்பரிடமிருந்து,
"நீ என்னை மறந்துட்டியா?"
அந்த வார்த்தையில் இருக்கும் வெண்மை
மணமுடிக்காத பூவின் வாசனை.
வாழ்க்கை ஒரு கவிதைதான்,
அதில் கவிஞன் நாமே!
வாக்கியங்களில் பிழைகள் இருந்தாலும்
பொருளில் இருக்கும் நேர்மைதான்
வாழ்வின் இனிமை!
அன்பும் அக்கறையும்,
சிறு சந்தோஷ தருணங்களும்,
ஓர் இனிய பார்வையும் கூட
வாழ்கையை வண்ணமடைய செய்கின்றன.
மிகவும் பெரிதாய் நினைக்க வேண்டாம்,
வாழ்க்கையை இனிமையாக்க
சின்னஞ்சிறு முயற்சிகள் போதும்
பிறரின் முகத்தில் தோன்றும்
ஓர் புன்சிரிப்பிற்கேனும் காரணமாய்
நீங்கள் இருங்கள்
வாழ்வின்
பிற்பகுதியில் பார்க்க
அழகான ஓவியமாய்
மனதின் வெள்ளைத் துணியில்
அவை பதியட்டும்!
****JOKER****