தமிழ்ப் பூங்கா > வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )

பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!

(1/11) > >>

சாக்ரடீஸ்:
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்

நாம் அறிந்த விளக்கம் :

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் என்பது இதன் உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

சாக்ரடீஸ்:
ஏறச் சொன்னால் எருது கோபம்இ இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்

நாம் அறிந்த விளக்கம் :

கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

விளக்கம் :

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும்இ இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்இ அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள்இ தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல்இ ஏறினால் எருதுவுக்கு வலிக்கும்இ ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம்இ நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும்இ சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

சாக்ரடீஸ்:
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

நாம் அறிந்த விளக்கம் :

பேச்சு பெருசா இருக்கும் செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

விளக்கம் :

ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.

சாக்ரடீஸ்:
புல் தடுக்கிப் பயில்வான் போல

நாம் அறிந்த விளக்கம் :

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு பழமொழிகளில் கலந்து விடுகிறது. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது. வேண்டுமானால் சிலவகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் அல்ல
 

விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான். ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி - கரைத்துக் குடித்தாராம். எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. இது தான் உண்மை விளக்கம்.

சாக்ரடீஸ்:
பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ

நாம் அறிந்த விளக்கம் :

விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.
 

விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோஇ வாளோஇ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version