Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 12619 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 31
« Reply #30 on: June 17, 2021, 05:48:17 PM »


Bubble Wrap Wallpaper?
 
 
Bubble Wrap பேப்பர் கையில் கிடைத்தால் உடைத்து விளையாடாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? உண்மையில் அந்த Bubble Wrap பேப்பர், பேக்கேஜ் செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 1957 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியைச் சேர்ந்த Al Fielding, Marc Chavannes என்ற இரு விஞ்ஞானிகள், சுவர்களில் ஒட்டி டிசைன் செய்யக்கூடிய வால்பேப்பராகத்தான் முதன் முதலில் bubble wrap பேப்பரை டிசைன் செய்தனர். இரண்டு ப்ளாஸ்டிக் பேப்பரை ஒன்றின்மேல் ஒன்று ஒட்டி அதிலிருக்கும் சின்னச்சின்ன காற்றுப்பைகளை உருவாக்கிய அந்த வால்பேப்பர் டிசைன் பெரிதாக எடுபடவில்லை. கொஞ்சம் யோசித்த விஞ்ஞானிகளிருவரும் வால்பேப்பரை பேக்கேஜ் செய்யப்பயன்படும் பேப்பராக மாற்றி வெற்றிபெற்றனர். ஐபிஎம் தன் முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை விற்கத்தொடங்கியபோது, அவற்றை பேக் செய்ய bubble wrap பேப்பரை உபயோகிக்கத்தொடங்கியதுதான் இவர்களின் முதல் பெரிய வெற்றி.
« Last Edit: June 17, 2021, 05:50:02 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 32
« Reply #31 on: June 18, 2021, 06:15:37 PM »


கலர்ஃபுல் ஃபோபியாஸ்?


ஃபோபியாஸ்ல என்ன கலர்ஃபுல் என்று யோசிக்கின்றீர்களா? ஒரு சில வண்ணங்களைப் பார்த்தால் பிடிக்காமல் கோபம் வருவதற்கும், பயத்தால் எரிச்சலடைவதற்கும் ஸ்பெஷல் பெயர்கள் இருக்கின்றன. ஆந்திர தேச சினிமா ரசிகர்களுக்கும், நம்மூர் ராமராஜன்(மற்றும் பலர்) ரசிகர்களுக்கும் இந்த ஃபோபியாக்கள் எதுவும் வருவதற்கான வாய்ப்பே இல்லை. 😉

Chromatophobia  – எந்த வண்ணத்தைப்பார்த்தாலும் பயப்படுவது

Ereuthophobia – சிவப்பு நிறம், சிவப்பு நிற விளக்குகள் இவற்றைப்பார்த்தால் வரும் பயம். (சிக்னலில் சிவப்பு விளக்கைப் பார்த்தாலும் நிற்காமல் செல்லும் மக்களுக்கு இருப்பது என்ன வகையான ஃபோபியா என்று கண்டறிய வேண்டும். )

Leukophobia  – வெள்ளை நிறம் தரும் பயம்

Melanophobia  – கருப்பு நிறம் தரக்கூடிய பயம்

Porphyrophobia – ஊதா(purple) நிறத்தைப் பார்க்கும்போது வரும் பயம்

Xanthophobia – மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் வரும் பயம். (Yellow என்ற வார்த்தையைப் பார்த்தாலும் கூட)


இந்தப்படத்திற்கும் மேலுள்ள ஃபோபியா லிஸ்ட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை..இல்லை..இல்லவே இல்லை 😉

 



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 33
« Reply #32 on: June 19, 2021, 08:25:23 PM »


மஞ்சள் மகிமை?

 
கல்லூரி/பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்திலிருப்பதன் காரணம் தெரியுமா? மற்ற பளிச் நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிவேகமாக நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறத்தைவிட மஞ்சள் நிறம்1.24 முறை விரைவாக நம்மை கவனிக்க வைக்கிறது. சாலையில் செல்லும் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி “கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்..” என்று சொல்லாமல் சொல்லவே மஞ்சள் நிறம் பள்ளிப்பேருந்துகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.


மட்டுமில்லாமல், இப்பேருந்துகள் இயங்கும் அதிகாலை/மாலை நேரங்களில் மற்ற வண்ணங்களை விட மஞ்சள் நிறமே பளிச்சென்று தெரியக்கூடியது. பள்ளிப்பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் கொடுக்கும் இந்தப்பழக்கம் 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் துவங்கப்பட்டது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பணியாற்றிய பேராசிரியர் Dr. Frank W. Cyr என்பவர் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிப்பேருந்துகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் பல பள்ளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான் இந்த மஞ்சள் வண்ணம். இந்த நிகழ்ச்சிக்குப் பின் “Father of the Yellow School Bus” என்றே பேராசிரியரை அழைக்கின்றனர்.
« Last Edit: June 19, 2021, 08:33:08 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 34
« Reply #33 on: June 20, 2021, 07:50:25 PM »


700% அதிகமான பென்சில் விற்பனை?


2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் உலகப்புகழ் பெறத்துவங்கி, இன்று எல்லா பத்திரிக்கைகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் சுடோக்கு(Sudoku) புதிருக்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் “Number Place”. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இந்தவகையான புதிர்கள் மக்களிடையே பழக்கத்தில் இருந்தாலும், இந்த மார்டன் சுடோக்கு 74 வயதான Howard Garns என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு(வடிவமைக்கப்பட்டு?) 1976ஆம் ஆண்டு  Dell Magazines என்ற பத்திரிக்கையில் ”Number Place” என்ற பெயரில் முதன்முதலில் வெளியானது. தான் கண்டுபிடித்த சுடோக்கு பிரபலமாவதைப் பார்க்காமலேயெ 1989ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார் Howard.

1984ஆம் ஆண்டு ஜப்பானில் Monthly Nikolist என்ற பேப்பரில் வெளியாகத் தொடங்கிய சுடோகுவிற்கு, Sūji wa dokushin ni kagiru என்று ஒரு வழவழா கொழகொழா பெயர் வைக்கப்பட்டிருக்க (அப்படியென்றால் “the digits must be single” என்று அர்த்தமாம்), பின் ஒரு நாள் Maki Kaji  என்பவரால் சுடொகு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டில் உலகமெங்கும் பிரபலமாகத் தொடங்கியது இந்தப்புதிர் குடும்பத்தில் மினி சுடோகு, cross sum sudoku, hypersudoku, killer sudoku என்று ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன.

மொத்தமே 5,472,730,538 சுடோகு புதிர்கள் தான் உள்ளன. பேப்பரும் பென்சிலுமாக மக்களை கிறுக்குப்பிடித்து அலையவைத்த சுடோகு தான், 2006ஆம் ஆண்டு பென்சில் விற்பனை முந்தைய ஆண்டைவிட 700% அதிகரித்ததற்குக் காரணம் என்று ”The Independent of London” பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது..
« Last Edit: June 20, 2021, 07:55:26 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 35
« Reply #34 on: June 21, 2021, 06:22:27 PM »


கடுகு சிறுத்தாலும்?


Pistol Shrimp எனப்படும் இறால் மீன் வகை மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் நீளமே வளரக்கூடியது. ஆனால் இந்த வகை மீன்கள் எழுப்பும் சத்தமோ ஒரு ஜெட் எஞ்சினிலிருந்து வரும் சத்தத்தை விட அதிகம். இவற்றின் இரண்டு நகங்களில் (கொடுக்கு??) ஒன்று மட்டும் பெரிதாக இருக்கும். இந்தப்பெரிய நகத்தில், பின் பக்கம் நகரக்கூடிய சுத்தியல் போன்ற பகுதி ஒன்றும், நகர முடியாத அடிப்பகுதி ஒன்றும் இருக்கின்றன. இதில் சுத்தியல் போன்ற பகுதி வெகமாக மற்றொரு பகுதியுடன் மோதும்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரை வெளியே தள்ளுகின்றன. இந்தச் செயலால் தண்ணீரில் ஏற்படும் நீர்க்குமிழிகள் உடையும்போது தான் ஜெட் எஞ்சினை விட அதிக அளவில் சத்தம் வருகின்றன.

மிருகக்காட்சி சாலைகளில் இருக்கும் பெரிய பெரிய மீன் தொட்டிகள் கூட இந்தச் சப்தத்தால் உடைந்துவிடும்.
« Last Edit: June 21, 2021, 06:26:40 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 36
« Reply #35 on: June 22, 2021, 06:59:41 PM »




கண்ணீரின் கதை?



நாம் சிரிக்கும்போது எவ்வளவு கலோரிகள் செலவு செய்யப்படுகின்றனவோ அதே அளவு கலோரிகள் நாம் அழும்போதும் நம் உடலிலிருந்து செலவு செய்யப்படுகின்றன. அழுகையை அடக்குவதால் ஹார்மோன் பிரச்ச்னைகள் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். நம் கண்ணீர் பார்ப்பதற்கு(!) ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் 3 வகைகள் இருக்கின்றன.

Basal tears – அடிப்படை கண்ணீர் – நம் கண்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகிறது.
Reflexive tears – எதிர்வினைக் கண்ணீர் – கண்களில் தூசு விழும்போது, வெங்காயம் நறுக்கும்போது, இருமும்போதும், தும்மும்போதும் வரும் கண்ணீர்.

Psych tears – உணர்வுசார் கண்ணீர் – பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே.. கோபம், மன அழுத்தம், பயம், துக்கம் இவை மட்டுமல்ல..அளவுகடந்த சந்தோஷத்தாலும் வரும் கண்ணீர். இந்த வகைக் கண்ணீர், மன அழுத்தத்தாலும் கவலையினாலும் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அழுதுமுடித்தவுடன் புத்துணர்ச்சியுடனும் லேசான மனதுடனும் இருக்க இதுவே காரணம்.
« Last Edit: June 22, 2021, 07:07:28 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 37
« Reply #36 on: June 23, 2021, 08:14:38 PM »



 ஜெர்ரியும் சீஸும் கொஞ்சம் கட்டுக்கதையும்?



சீஸை திருடும் ஜெர்ரியையும், ஜெர்ரியை துரத்திப்பிடிக்க முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கும் டாமையும் விரும்பிப் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால், ஜெர்ரிக்கு மட்டுமல்ல, எந்த எலிகளுக்குமே சீஸ் விருப்பமான உணவல்ல. இன்னும் சொல்லப்போனால், சீஸின் வாசனை வந்தாலே, அந்தப்பக்கம் போகாமல் தெறித்து ஓடிவிடும் எலிவகைகள் இருக்கின்றன. எலிகளுக்கு பசி வந்தால் சமையலறையில் இருக்கும் உணவுப் பொருட்கள் முதல், ப்ளாஸ்டிக், மரம், பூச்சிகள், மனிதன் என கண்ணில் படும் அனைத்தையும் சாப்பிடும் . வேறு வழியே இல்லையென்றால், சீஸையும் சாப்பிடும்.


அப்படியென்றால், எலிகளுக்கு சீஸ் பிடிக்கும் என்று கிளப்பிவிட்ட புண்ணியவான்(வதி) யாரு? தெரியாது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டுக்கதை இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்தக்காலத்தில், தானிய வகைகளையும், இறைச்சி வகைகளையும் சீஸையும் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கும். தானியங்களையும் இறைச்சியையும் எலிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க கொஞ்சம் சேஃப்டியாக வைத்திருப்பார்கள். ஆனால் சீஸ் கெட்டுப்போகாமலிருக்க காற்றோட்டமான இடத்தில் வைத்திருப்பார்கள். சாப்பாடு எதுவும் கிடைக்காத எலிகள் வேறு வழியின்றி சீஸை சாப்பிடத் துவங்கியிருக்க வேண்டும். இதிலிருந்து தான் எலிக்கு சீஸ் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 38
« Reply #37 on: June 24, 2021, 06:26:59 PM »


79 ஆண்டுகள் காத்திருந்த வால்ட் டிஸ்னி?


1927ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி கம்பெனி கடுமையான கஷ்டத்தில் இருந்த காலகட்டம். அப்போது, வால்ட் டிஸ்னியால் அறிமுகப்படுத்தப்பட்ட Oswald the Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தின் உரிமை அமெரிக்காவின் யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு விற்கப்பட்டது. டிஸ்னியின் நல்ல நேரம், அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் மக்களிடையே மிகப்பிரபலமாக மாற, 1928ஆம் ஆண்டு யுனிவர்சல் ஸ்டுடியோவுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கச் சென்றார் வால்ட் டிஸ்னி. தாங்கள் தரவேண்டிய பணத்தில் 20 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ளப்போவதாக யுனிவர்சல் அறிவிக்க, ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் திரும்பினார் டிஸ்னி. Oswald கதாபாத்திரத்தின் உரிமை யுனிவர்சலிடமே இருந்தது.



இது நிகழ்ந்து 79 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு, யுனிவர்சல் ஸ்டுடியோவின் NBC டிவி சேனல், அமெரிக்காவின் பிரபலமான Sunday Night Football நிகழ்ச்சியின் உரிமையை வாங்கியது. அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளராக யாரைத் தேர்வுசெய்யலாம் என்ற குழப்பம் வந்தபோது என்.பி.சி முடிவு செய்தது, வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான ஈஎஸ்பிஎன் சேனலில் வேலை செய்துகொண்டிருந்த Al Michaels என்பவரை. ஒப்பந்தம் என்ன தெரியுமா? வால்ட் டிஸ்னி, மைக்கேலை என்பிசிக்கு வர்ணனையாளராக அனுப்பி வைக்க வேண்டும். பதிலுக்கு, யுனிவர்சல் ஸ்டுடியோ, Oswald கார்ட்டூன் கேரக்டரின் உரிமையை வால்ட் டிஸ்னிக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் 39
« Reply #38 on: June 25, 2021, 06:08:26 PM »


இசைக்கு மயங்கும் தங்க மீன்கள்?


தங்க மீன்களின்(நான் சொல்வது நிஜமான Gold Fish..பெண் குழந்தைகளை அல்ல) ஞாபகசக்தியின் காலம் வெறும் மூன்று நொடிகள் தான் என்பது கட்டுக்கதை. உண்மையில், தங்க மீன்களின் ஞாபக சத்தி மற்ற சில மீன்களை விட அதிகம். இந்த வகை மீன்கள், தனக்கு தினமும் உணவு கொடுக்கும் மனிதரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவை. தனக்கு உணவு கொடுக்கும் மாஸ்டர் அருகில் வரும்போது அதிக உற்சாகத்துடன் இவை அங்குமிங்கும் நீந்தி சந்தோஷத்தைத் தெரிவிக்கும். கண் தெரியாத தங்க மீன்கள் கூட, தங்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் நபரை அவரின் குரலை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கின்றன.



குறிப்பிட்ட நிறங்களுக்கும் ஒளிகளுக்கும் குறிப்பிட்ட விதத்தில் இயங்கும்படி தங்க மீன்களுக்கு பயிற்சியளித்து ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, ஒரு குட்டி தங்க மீனுக்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்கும் முன் குறிப்பிட்ட இசையை கேட்கவைத்திருக்கின்றனர். சில மாதங்கள் இப்படிச் செய்தபின் மீனை கடலில் விட்டுவிட்டனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதே இசையை மீனை விட்டுவந்த இடத்தில் இசைத்தபோது, அந்த மீன் இசை வந்த திசைநோக்கி வேகமாகத் திரும்பி வந்துவிட்டது.

தங்க மீன்கள் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு: மீன் தொட்டியை அடிக்கடி மாற்றுவதும், தொட்டியில் அழகுக்காக வைக்கும் பொருட்களை இடம் மாற்றி வைப்பதும், இந்தவகை மீன்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும் வழிகளாகும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 40
« Reply #39 on: June 26, 2021, 08:24:49 PM »


பஞ்சுமிட்டாயும் பல் டாக்டரும்?


பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்பயன்படும் க்ரைண்டர் போன்ற அந்த மெஷினை உருவாக்க உதவியாக இருந்தது ஒரு பல் டாக்டர். 1897ஆம் ஆண்டு William Morrison என்ற பல் டாக்டரும் John C. Wharton என்ற மிட்டாய் தயாரிப்பாளரும் ஒன்றாக இணைந்து மின்சாரத்தால் இயங்கும் பஞ்சுமிட்டாய் மெஷினை கண்டுபிடித்தனர். நம்மூர் எக்ஸிபிஷன் மாதிரி அவர்களூரில் நடந்த ஒரு எக்ஸிபிஷனில் 1904ஆம் ஆண்டு இந்த மெஷினைக் கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த காலத்திலேயே ஒரு பஞ்சுமிட்டாய் 25 சென்ட்ஸ்க்கு விற்கப்பட்டது. அந்த எக்சிபிஷனுக்குச் செல்ல நுழைவுக்கட்டணமே 50 செண்ட்ஸ் தான். விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். முடிவில் 68,655 பஞ்சு மிட்டாய்களை விற்று $17,163.75(தற்போதைய மதிப்பில் 4,11,000 டாலர்கள்) சம்பாதித்தனர் டாக்டரும் மிட்டாய் விற்பவரும். ஒரு பஞ்சுமிட்டாய் செய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்ட அதிகபட்ச முதலீடு அந்த மெஷினும் இரண்டு டேபிள்ஸ்பூன்  சர்க்கரையும் மட்டும் தான்.


இதே சமயத்தில், Josef Lascaux என்ற மற்றொரு பல் டாக்டரும் இந்த மாதிரி ஒரு மெஷினைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் பொதுமக்களிடம் இதை அறிமுகப்படுத்தாமல் தன் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு மட்டும் செய்து கொடுத்தார். அவர் பொதுமக்களிடையே இந்த மெஷினையும் மிட்டாயையும் அறிமுகப்படுத்தாததற்கான காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. பஞ்சுமிட்டாய்க்கு Cotton Candy என்ற பெயரை வைத்தது இந்த டாக்டர் தான். முன்னிருவர்களும் இதற்கு வைத்த பெயர் Fairy Floss.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 41
« Reply #40 on: June 27, 2021, 11:33:34 PM »


ஊதா கலரு கேரட்?


17ஆம் நூற்றாண்டு வரை கேரட்டுகள் ஊதா நிறத்தில்(Purple Color) இருந்தன. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் ஊதா நிற கேரட்டுகளை நிறமாறுதலுக்கு உட்படுத்தி வெவ்வேறு வண்ணங்களில் கேரட்டுகளை உருவாக்கினர். ஆரஞ்சு வண்ண கேரட்டுகளுக்கு முன் வெள்ளை, மஞ்சள் நிறங்களில் எல்லாம் கேரட்டுகள் சோதனை முறையில் உருவாக்கப்பட்டன. கடைசியில் வெற்றிபெற்றதென்னவோ ஆரஞ்சு வண்ணம். வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கேரட்டுகளை ஒன்றிணைத்து தான் ஆரஞ்சு வண்ண கேரட்டுகள் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.



இரண்டாம் உலகப்போரின் போது, பிரிட்டீஷ் படைகள் ஏகப்பட்ட ஜெர்மன் விமானங்களை ராடார் உதவிகொண்டு சுட்டு வீழ்த்தின. ஜெர்மன் படை வீரர்களுக்கோ அப்போது ராடார் பற்றிய செய்தி எதுவும் தெரியாது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பிரிட்டன். கேரட் அதிகமாக சாப்பிட்டால் (விமானங்களை சரியாகக் குறிவைத்து சுட்டு வீழ்த்தும் அளவுக்கு)கண்கள் நன்றாகத் தெரியும் என்று ஒரு பெரியவர் சொன்னதாகவும், அதைப் பின்பற்றியதாலேயே தங்கள் வீரர்களால் ஜெர்மன் விமானங்களைத் தாக்க முடிந்ததென்றும் ஒரு கட்டுக்கதையைக் கிளப்பிவிட்டது. ஜெர்மனியும் இதை நம்பியது, பிரிட்டீஷ் மக்களும் அப்போதிலிருந்து கேரட்டை தங்களின் தோட்டப்பயிர்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டனர்.

எக்கச்சக்கமாக கேரட்டுகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தால், நம் தோல் கேரட்டின் ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிடும். கேரட்டிலிருக்கும் beta-carotene என்ற வேதிப்பொருளே ஆரஞ்சு வண்ணத்திற்குக் காரணம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 42
« Reply #41 on: June 28, 2021, 02:54:48 PM »


சீனப்பெருஞ்சுவர் – உலகின் மிகப்பெரிய கல்லறை?


சீனப்பெருஞ்சுவர் என்பது நாம் நினைப்பது போல் ஒரு பெருஞ்சுவர் இல்லை. சிறு சிறு சுவர்களாகக் கட்டப்பட்டு பின் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் முதல் பகுதி கி.மு 475ஆண்டு கட்டத்துவங்கப்பட்டது. அதற்குப்பின் சீனாவை ஆண்ட ஒவ்வொரு மன்னரும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் எல்லையைப் பாதுகாக்க அதைப் பெருஞ்சுவராகக் கட்டினர்.

விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும் என்று யாரோ கிளப்பிவிட, அதை சீனாவின் பாடப்புத்தகங்களிலெல்லாம் சேர்த்திருந்தார்கள். பின்னொரு நாள் சீனாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அறிஞர் ஒருவர், க்ராவிட்டி படத்தில் வருவதுபோல் விண்வெளியில் மிதந்து, சுவர் தெரியவில்லை என்று கூறியதையடுது பாடப்புத்தகங்களெல்லாம் திருத்தியமைக்கப்பட்டன.

சீனப்பெருஞ்சுவரை சீன மொழியில் “Wan-Li Qang-Qeng” என்று அழைக்கின்றனர். அப்படியென்றால் 10,000Li Long Wall என்று அர்த்தமாம். Li என்பது தோராயமாக 1/3 மைல் நீளம். 15 முதல் 30 அடி அகலமும் (சில இடங்களில்)25 அடி உயரமும் கொண்டது.

சீனப்பெருஞ்சுவரில் கடைசியாக 1983ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் சீனாவிற்கும் சண்டை நடந்தது. அந்தச் சண்டையின் அடையாளமாக துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் இன்னும் Gubeikou என்ற இடத்தில் இருக்கும் சுவரில் இருக்கின்றன.

இன்னும் 20 ஆண்டுகளில் சீனப்பெருஞ்சுவரின் ஒரு சில பகுதிகள் மறைந்துபோகலாம். மண்ணால் செய்யப்பட்ட இப்பகுதிகள் காற்றிலும் மழையிலும் கரைந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சீனப்பெருஞ்சுவரின் மற்றோரு பெயர் உலகின் மிகப்பெரிய கல்லறை..காரணம் என்னவென்றால், இச்சுவரை கட்டும் பணியில் இறந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 43
« Reply #42 on: June 29, 2021, 03:37:45 PM »




கே.எஃப்.சி கிறிஸ்மஸ்?


மற்ற நாடுகளைப்போல் இல்லாமல் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் கிறிஸ்மஸ் ஜனவரி 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காரணம் வேறொன்றும் இல்லை. இந்த இரு நாடுகளிலும் உள்ள தேவாலயங்கள் இன்னும் பழைய ஜூலியன் காலண்டர்களையே பண்டிகை நாட்களை அறிவிக்கப் பயன்படுத்துகின்றன. இங்கு 39 நாட்களுக்கு முன்பே மக்கள் கிறிஸ்மஸை வரவேற்க விரதமிருக்கின்றனர். கிறிஸ்மஸின் முதல் நாள் இரவு, வானில் முதல் நட்சத்திரம் தோன்றியவுடன் 12 வகையான உணவுகளுடன் இவர்களது இரவு விருந்து தொடங்குகிறது.



ஜப்பானில் கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பாரம்பரிய இரவு உணவு KFC சிக்கன். ஆமாம்..KFC சிக்கனே தான். கடைசி நேரத்தில் சிக்கன் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வதென்று, KFCயில் எக்கச்சக்கமான முன்பதிவுகள் நடக்கும்.

ஸ்லோவாகியாவில் கிறிஸ்மஸ் தினத்தின் முத்தைய நாள் இரவு உணவின் போது, சாப்பிடுவதற்கு முன் குடும்பத்தலைவர் Loksa என்ற உணவில் ஒரு ஸ்பூன் எடுத்து மேலே தூக்கிப்போடுகிறார். இந்த Loksa உணவு நம்மூர் தீபாவளி லேகியம் போல் கிறிஸ்மஸுக்காகவே ப்ரெட், கசகசா(Poppy Seeds) மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 44
« Reply #43 on: June 30, 2021, 04:54:36 PM »


கோழியா முட்டையா?


கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்ற ஆராய்ச்சியை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஆரஞ்சு என்ற பெயர் முதலில் பழத்திற்கு வந்ததா அல்லது நிறத்திற்கு வந்ததா என்று பார்க்கலாம். ஆரஞ்சு என்ற பெயர் முதன்முதலில் ஆரஞ்சு பழத்திற்கு தான் வந்தது. 1300களில் ஆரஞ்சு பழத்திற்கு இந்தப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. Orange என்ற வார்த்தையின் ஆதி என்னவென்று ஆராய்ந்தால், நாம் வந்து நிற்பது சமஸ்கிருதத்தில். orenge என்ற ப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்து வந்தது orange. இந்த ப்ரெஞ்ச் வார்த்தையின் மூலம் அராபிக், செரிபியன் என சுற்றிவிட்டு கடைசியில் n?ranga என்ற சமஸ்கிருத வார்த்தையில் வந்து நிற்கிறது.


ஆரஞ்சு நிறத்திற்கு இந்தப்பெயர் சூட்டப்பட்டது 1500களில் தான். பெயரில்லாமல்(அல்லது “yellow-red” என்ற பெயரில்) இருந்த நிறந்திற்கு ஆரஞ்சு பழம் பிரபலமானதற்குப் பின் ஆரஞ்ச் என்ற பெயரை வைக்கப்பட்டது.. ஒன்று தெரியுமா? ஆரஞ்சு வண்ணத்திற்கு நம் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் பவர் இருக்கிறது. ஆரஞ்சு வண்ண இரு/நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விளையாட்டுதனம் கொண்டவர்களாகவும் புதிய  ஸ்டைல்களை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 45
« Reply #44 on: July 01, 2021, 04:03:52 PM »


ஆலிவ் பழங்கள்?


15 கிராம் பச்சை நிற ஆலிவ் 20 கலோரிகளையும், 15 கிராம் கருப்பு நிற ஆலிவ் 25 கலோரிகளையும் கொண்டிருக்கின்றன. ரெண்டுமே ஆலிவ் தானே பிறகேன் வித்தியாசம்? கருப்பு நிற ஆலிவ் பழத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயே அதிலிருக்கும் அதிக கலோரிகளுக்குக் காரணம்.


கருப்பு நிற ஆலிவ் பழங்கள் மரத்திலேயே கனிய வைக்கப்பட்டு பின் பறிக்கப்படுகின்றன. மாறாக கனிவதற்கு கொஞ்சம் முன்னதாகவே பறிக்கப்பட்டு, அவற்றிலிருக்கும் கசப்புத் தன்மை குறைவதற்காக 6 முதல் 12 மாதங்களுக்கு  பதப்படுத்தப்படுகின்றன பச்சை நிற ஆலிவ்கள். பதப்படுத்தப்பட்ட கருப்பு நிற ஆலிவில் இருப்பதை விட பதப்படுத்தப்பட்ட  பச்சை நிற ஆலிவில் இரண்டு மடங்கு சோடியம் இருக்கிறது. ஆலிவ் மரங்கள் அதிகபட்சமாக 2000 வருடங்கள் வரை உயிர் வாழும். உண்மையில், ஆலிவ் எண்ணெய் என்பது எண்ணெய் அல்ல. ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் பழச்சாறு. “Extra virgin” என்பது, ஆலிவ் பழங்களிலிருந்து எடுக்கப்படும் முதல்தர எண்ணெய்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்