Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 273  (Read 1921 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 273

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
காதல் எத்தனை அழகானது!
காதலின் அனுபவம் எத்தனை சுகமானது!
காதலித்த பின்பு தான் வாழ்க்கையின் உன்னத இன்பம் பெற்றேன்!
காதலால் தான் புது வித பரவசம் அடைந்தேன்!

ஆனால் அதற்கு நேர்மாறானது காதல் தோல்வி!!
 காதல் தோல்வியிலும் இரண்டு வகை  உண்டு!!
 காதலை ஏற்றுக்கொண்டு தோல்வி அடைவது!!
 காதலை ஏற்றுக் கொள்ளாமலே தோல்வி அடைவது!!

இதில் இரண்டுமே ஆறாத  வலிகள் நிறைந்த அனுபவம்!!!
இதை கடந்து போவது என்பது மிகவும் கொடியது!!!
அந்த கொடிய வலிகள் நிறைந்த வாழ்க்கை கடந்து போவது!!!
என்பது ஒரு நொடி கூட  ஒரு யுகம் போல நகரும் வலியுடன்!!!

இதுவும் கடந்து போகும் என்ற வலியுடன் நாட்கள் நகர்ந்து போகும்!!!!
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து செல்லும் அதனை அனுபவித்து நாமும் நகர்ந்து செல்வோம் அதன் போக்கில்!!!!

ஒரு நாள் காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் அதுவரை காத்திருப்போம்!!!!
 அனைத்தையும் கடந்து செல்வோம்
 வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!!!!
« Last Edit: August 15, 2021, 03:30:40 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
 
காகிதத்தில் எழுதியே உன்னை காதலிக்கிறேன் 💘
காலம் முழுவதும் கவிதையுடன் பேசி தீர்க்கிறேன் 💘
 மை கொண்ட கண்களால் கண்ணீர் வடிக்கிறேன்💘
 அந்த கண்ணீர் துளிகளால் காதலின் உச்சமான கவிதையை தீட்டுகிறேன்💘
 என் பேனா மையும் சில சமயம் தீர்ந்து விட கூடும் 💘


 ஆனால் என் கண்ணீர் மையோ உன்னை காணும் வரை வடித்து கொண்டே இருக்கும்💘
 உலகமே உறங்கி கொண்டிருக் கையில் உந்தன் நினைவுகளால்💘
 என் கண்கள் மட்டும் கண்ணீர் துளிகளில் நிரம்பி நிற்கிறது  எந்தன் காதலே💘
 கட்டுக்கடங்காத காட்டு தீ போல் என் இரவுகளை எரிக்கிறது💘


  கண்ணீர் தெளித்து அணைத்து  பார்த்தேன்💘
 அவை அணையா விளக்கு போல் கொழுந்துவிட்டு பிரகாசம் காட்டுகிறது💘
   இரக்கமற்ற உன் இதயத்தை விரும்பியதற்காகவா💘
 உறக்கமற்ற இரவுகளால் என்னை வதம் செய்கிறாய் 💘


  நிலவில்லா இரவை கூட இந்த நீலவானம் கடந்து செல்லும்💘
 ஆனால் உன் நினைவில்லா ஓர் இரவை கூட என்னால் இயல்பாய் கடக்க முடியவில்லையே💘
 காலங்கள் காயங்களை ஆற்றிவிடும்
 என்பது எத்தனை பெரிய பொய்💘
என் கண்ணில் மாறாத மாற்றமும் உன்னில் சொல்லாத காதல் உணர்கிறது💘


 என் கனவுகளுக்கு கரைகள் இல்லை
 அதனால் தான் 💘
   என் கண்களில் இருந்து தப்பிக்க    முடியாமல் அவை தவிக்கிறது💘
  ஒருநாள் உன்னை நேரில் சந்தித்து என் காதலை உன்னிடம் சொல்ல வந்தேன் 💘
  நீயோ என் காதலை புரிந்துகொள்ளாமல் போனதால் இனி நான் கனவில் மட்டும்
 கைகோர்க்கிறேன் கடைசிவரை அதை கண்டே காலம் கழிக்கிறேன்💘
 
       -காதல் என்றும் அழிவதில்லை
« Last Edit: August 18, 2021, 12:06:37 PM by Mr Perfect »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


தென்றல் காற்று வீசிய
இளமை கடற்கரை சாலை.....
அது காதல்வழி சாலை..

நேற்று பூத்தவை எல்லாம் இன்று
உதிர்ந்து  காய்ந்து சருகாய் மாற
மணல்வெளி எங்கும் மிதிபட்ட
நொறுக்கப்பட்ட ஒற்றை இதயங்களினின்  ஓலங்கள்!
ஊமைகண்ணீர்  புலம்பல்கள்!

தோட்டத்தில் பூத்த மலர்களுக்கு
தெரிவதில்லை...
நாம் காதல் பறிமாற செல்ல போகிறோமா..அன்றி
கல்லறைமேல் அலங்கரிக்க போகிறோமோ என்று..

சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில் சேர்வதில்லை எனில்
அன்பை அனுமதிக்கா காதல்
அங்கீகரிக்கப்படுவதில்லையோ?

தவிர்க்க பட்ட ஒற்றை ரோஜாவின்
காதல் தவித்தால் என்ன?
கனவு தகர்ந்தால் என்ன?
காதலின் தேசத்தில் என்றுமே
உயர்சாதிக்கே இட ஒதுக்கீடோ?

கண்கள் செய்யும் தவறுக்கு
இதயம் பெறும் தண்டனைகள் நியாயமானதுதான்..
இரக்கமல்லாதர்க்கு இதயத்தை பறிக்கொடுத்த தவறுக்கு...
இறத்தலும் நியாயமில்லைத்தான்.

திரும்பி வரும் தீஞ்சுவை தருணங்களுக்குக்காக
காத்திருப்பது சுகம்தான்...
ஆனால் அது திரும்பாத திருந்தாத
 தீவழி பயணங்கள் எனில்
அது இலவுகாத்த கிளிதான்!

காதல் கிடைத்தவர்க்கு வரம்...
கிடைக்காதவர்க்கு சாபம் எனில்
அதன் பின் தொடரும்
வாழ்க்கைபாதை உயர்வுகளால்....
காதல்தோல்வியும் வெற்றிதான்...
ஏனெனில் ...
தோல்வியே வெற்றிக்கு முதல்படி!



Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
நிற்கின்றாள் அவள் தன் கைகளில்
ரோஜாவை ஏந்தி என் வருகைக்காக
நிற்கின்றாள்.. மனம் வருந்தி நிற்கின்றாள்..
 
அவள் அவளின் மனம் முழுக்க
இருக்கும் ஒரு நினைவு 'என்னவன்'
திரும்பி வருவான் என்ற ஏக்கத்துடன்
ஒற்றை ரோஜாவும் வாடா..  இவளும்
வாடா முகத்துடன் சிறிது புன்னகையுடன்
ரோஜா பூவை கூட சுமக்க சக்திகள் இழந்த படி
நிற்கிறாள் என் வருகைக்காக நிற்கிறாள்

அவள் ஆயிரம் கனவுகளுடன்
தன் மனதை கொள்ளை அடித்த
கள்வனின் வருகைக்காக காத்திருக்கிறாள்
தன் ஆயுள் முழுவதும் காத்திருப்பேன் என்று
வைராக்கியத்துடன் காத்திருக்கிறாள்

ஆனால், இந்த உலகம் வழக்கம் போல
கல்யாணம் ஆகாமல் கன்னி பெண்
ரொம்ப காலம் தன் வீட்டில் இருந்தால்
என்ன எல்லாம் கதைகள் கட்டி விடுமோ?

அந்த எல்லாம் கதைகளையும் எதிர்த்து
போராடி கொண்டு தன் கணவனாகவே
என்னைக் கருதி என் வரவை எண்ணி..
எண்ணி நிற்கிறாள் ஒற்றை ரோஜாவுடனே
நான் சென்ற வழிதனில் விழி வைத்து
காத்துக்கொண்டிருக்கிறாள்
என் அன்பிற்கு உரிமையானவள்...
« Last Edit: August 20, 2021, 12:23:51 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


அன்பே! ஓர்... ஓர்.. முறையேனும்..
நீ என்னை திருப்பி பாராயோ..

உன் வரவுக்காக.. தினம் தினம்..
நீ நடந்து சொல்லும் வழிதனில்..

என் மனதில் ஒத்திகை பார்த்த...
அத்தனை வார்த்தைகளையும் கொட்டிட

நினைத்து நினைத்து.. காத்து நிற்கின்றேன்..
நீ விரும்பும் சிவப்பு ரோஜாவுடன்..

ஆருயிரே! ஒரே .. ஒரு.. முறையேனும்..
என் நிலை நீ உணர்வாயோ...

உன் முகம் பார்த்து நான் பேச..  துடித்து..
தவிக்கும் நிலை நீ புரியவில்லையா?..

இல்லையென்றால்  அறிந்தும் அறியாதது போல்..
நடித்து.... என் தவிப்பை.. நீ ரசிக்கின்றாயா...

நீ என் அருகினில்.. திரும்பி வாடா...
என் துடிப்பை.. நீயும் புரிந்து கொள்ளடா..
 
ஆருயிரே! உன் பொன் கரங்களை  கோர்த்து..
உன் மென் முகில் தோள்களில்  சாய்ந்து..

நாம் செல்லும் பாதை எங்கும்.. மங்கள பொன்
மஞ்சள் மாலை வெயில்..  கம்பளம் விரிக்க..

வீசும் குளிர் காற்றும்.. நம் கன்னங்கள்..
தழுவி..  தழுவி.. நழுவி.. நழுவி..  வீச..

நாம் நடந்து செல்லும் வழி சாலைகளும்
முடிவின்றி...  நீண்டு கொண்டே செல்ல...

காதலே!  என் சின்னசிறு ஆசைகள் எல்லாமே
உன்னோடு உறவாட சொல்லி.சண்டையிடுகிறதே..

தவிக்கும் என் மனதை புரிந்து.. அறிந்து....
என்னையும் உன்னுடன் அழைத்து செல்லடா..

அன்பே! அழகே!! ஆருயிரே!!! என் அன்பு காதலே!!!!   

« Last Edit: August 17, 2021, 07:54:40 PM by TiNu »

Offline PreaM

என் இதயத்தில் பூத்த பூவே ...
உன் இருகரம் பிடித்திட எண்ணம் கொண்டு
மனதில் தோன்றிய காதலோடு
மணிக்கணக்கில் காத்திருந்தேன்...

நீ வரும் வழியில் விழியை வைத்து
வருகிற வரைக்கும் காத்திருந்தேன்
தொலைவில் தெரிந்த உன் உருவம் கண்டு
இமைக்க மறந்தன இமைகள் இரண்டும்...

என் இதயத்தில் பூத்த பூவே...
என் இதயம் துடிப்பது உனக்காக
எண்ணம் முழுவதும் நீயாக
எனக்குள் தோன்றிய
காதலைச் சொல்ல
ரோஜா ஒன்றை கையில் ஏந்தி
காத்திருந்தேன் உனக்காக...

உன்னை கண்ட நொடி முதல்
இந்த உலகம் மறந்து
மனம் உன்னை மட்டும் நினைக்க ...

நீதான் என் உலகம் என்று ரோஜா பூவை கையில் தந்து
காதல் சொல்லி
உன் கண் அசைவிற்க்கு காத்திருக்க...

உன் கரம் பற்றிய ரோஜா பூ...
வாடுவதற்குள் வந்துவிடு...
உன் சம்மதத்தை தந்துவிடு...

காதல் கைகூடும் என்ற நம்பிக்கையில்...

காதலோடு காத்திருப்பேன் ...
என் காதல் என்றும் உனக்காக.....
......................💗💗💓💚💓💗💗..........................
« Last Edit: August 17, 2021, 10:28:29 PM by PreaM »

Offline MoGiNi

ஓர் நிராகரித்தலின்
பின்னான நகர்வுகள்
எப்பொழுதும்
விரக்தியானவை ..

கடந்து செல்லும்
ஒவ்வோர் அணுவின்
தீண்டலிலும்
அது தன்  விரக்தியை
படரவிட்டிருக்கும் ...

தூரத்து நிலவின் அழகு
இரவு நேர தென்றலின் தீண்டல்
நாடு நிஷியின்
நிஷப்த  அலைகள்
எதிலுமே
மனம் லயிக்க மறந்து கிடக்கிறது ..

வாழ்க்கையின் பாதைகளை
அன்பும் அனுசரிப்பும்
தீர்மானிப்பதில்லை
வார்த்தைகள் தான்
வரைந்து கடக்கிறது ..

நிராகரித்தலின்
நீண்ட கரங்களுக்குள்
ஆயுள் கைதியாகி
காதல்
கரைந்து கனக்கிறது  ..

யாசித்தலில் ப்ரியமற்றவள் - இவள்
நேசித்தலில்
ப்ரியமுற்றவள்
இன்று ..

உன்னிடம்
ஒரே ஒரு விண்ணப்பம்
தொலைந்துவிடு
என் வாழ்க்கையின்
வானத்தில்
வந்து போன மேகம் நீ
பிடுங்கி வீசிய மலருக்கு
மீண்டும்
நீ மழையாகி ஏதுமில்லை ..
எங்கோ ஒரு மரம்
மழைக்காய்  காத்திருக்கும்
அங்கு பெய்யென பெய்து விடு ..


Offline SweeTie

ஒற்றை ரோஜாவை   கையிலேந்தி   
இதயமெங்கம்   காதலை  ஏந்தி 
மையிட்ட விழிகளில்  ஒளி பட்டுத்தெறிக்க 
காத்து நிற்கிறேன் அவன் திரும்பி வருவான் என


காக்க வைப்பது  காதலுக்கு  சொந்தம் 
காத்துக் கிடப்பதில்   காதலர்க்கு  இன்பம்
காய்ந்துபோன   என்  ரோஜா இதழ்களை 
காயப்படுத்தாமல்  ஈரமாக்கி கொள்கிறேன்

காதல்  எனும்  சொர்க்கத்தில்  காலடி  பதித்து ....
அவன்  கைத்தலம்   பற்றவேண்டும்   
தோளோடு  தோள்  சேர்த்து காதோடு பேசி
என்  காதலை  சொல்லவேண்டும்.   

ஒற்றை வானில்  ரெட்டை நிலவுபோல் 
துரத்திப் பிடித்து  ஓடி விளையாடவேண்டும்
என் கெண்டையில்   உரசும்  தண்டையின் மணிகள்
கொஞ்சி நடம் புரியவேண்டும்   

ஏங்கித் தவிக்கிறது    என்  எண்ணங்கள்   
கையில்  முடங்கி  கிடக்கிறது  ஒற்றை ரோஜா
இருவர்  இதழ்களும்    ஒன்றானால்   நம்
இருவர் ஜாதியும்  ஒன்றல்லோ !!

முட்களோடு  வளர்கிறது  ரோஜா
வர்ணங்களோடு  தொடர்கிறது  காதல் 
இசையோடு  பயணிக்கிறது  நாதம் 
முகிலோடு  விளையாடுகிறது   நிலவு '

காதல் இதயங்களை  இணைக்கும்  ரோஜாக்கள்
கல்லறைகளிலும்     தஞ்சமடையம் 
கடவுள்  பாதங்களை  வருடவேண்டிய ரோஜா
கசக்கி  வீசப்படுதலும்   உண்டு.


 
« Last Edit: August 19, 2021, 11:36:36 PM by SweeTie »