Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 280  (Read 955 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 280

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Mr Perfect

 • Jr. Member
 • *
 • Posts: 58
 • Total likes: 296
 • Karma: +0/-0
 • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰

என் அன்பே என் ஆருயிர் காதலியே என் காதல் சொல்ல ஓடோடி வந்துள்ளேன் நம் இரு கைகள் கோர்க்க 💟

இறக்கும் நிலையிலும் மறக்க முடியாத நினைவு என்றால் அது நீ மட்டும்தான் 💟

யாரை பிரிந்தாலும் வலிக்காத என் மனது உன்னை பிரிந்தால் மட்டுமே வலிக்கிறது 💟

என் இதயத்தில் ஏற்படுகின்ற வலிக்கு மருந்து என்றால் அது நீ மட்டும்தான் 💟

விழியோடு தோன்றும் கனவும் நீதான் உயிரோடு கலந்த உறவும் நீதான் 💟

எனக்கு மட்டும்தான் தெரியும் நீ இல்லாமல் என் இதயம் துடிக்காது என்று 💟

உனக்காக எதை வேண்டுமானாலும் இழப்பேன் ஆனால் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன் 💟

ஒருநாள் உன்னை கானாவிட்டால் ஒருநாள் உன்னோட பேசாவிட்டால் என் மனது என்னிடம் இல்லை 💟


என் மனதை வென்றவள் நீ மரணம் தாண்டியும் உன்னை நேசிப்பேன் 💟

உனக்கு பிடித்த ஒன்றை வெறுக்கவும் மாட்டேன் உன்னக்கு பிடிக்காத ஒன்றை நேசிக்கவும் மாட்டேன் 💟

என் கண்ணை விட்டு மறையாத கனவும் நீதான்
என் மனதை விட்டு போகாத நினைவும் நீதான் 💟

உன்னை மறந்துவிடு என்று சொல்லாதே அதற்க்கு பதில் என்னை இறந்து விடு என்று சொல்💟

இப்படிக்கு உன்னையே நினைத்து உருகிப் போன உன் அன்பு காதலன் 💘
« Last Edit: October 26, 2021, 11:22:28 AM by Mr Perfect »

Offline AgNi

 • Full Member
 • *
 • Posts: 136
 • Total likes: 643
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !

என்னை வாழ்த்த வந்தவனே...!
உன்னை மறைத்து வந்தவனே!

பூங்கொத்தில் பொதிந்திருப்பவை
மணம் வீசும் மலர்களா? அன்றி
சருகான‌ மனங்களின் மரணங்களா?

நம்  வைர சொற்குவியல்கள் இன்று
கரிக்கும் சூன்யமானதென்ன?
சரளைகற்களாய் சடசடத்த நாம்
இன்று தடித்த நினைவுகளால்
புதைமணலுக்குள் சொற்கள்
தேடுகிறோம்..?

இடிந்தும் சாயமிழந்தும் கவனிப்பாரற்று சிதிலமடைந்த
அனுமாஷ்ய கோட்டையாய்....
நம் இருப்புமேடை...
உயிர் பெற ஊளை இரவுகள் தாண்டி...விடியலைத்தேடி
மாயலோகம் காண விரைகிறது...

நட்சத்திரங்களுக்கு
சிதை எதற்கு?அது தானாய்
எரிந்து விழத்தான் போகிறது...
நம் உதிர்ந்து போன‌
உறவைபோல...

அடர்ந்த மேககாடுகளில் சென்று தங்கும் கனவுகிளைகள் போல...
என் இரும்பு கண்களில்..
ததும்பும் காந்த கண்ணீர்!

யாரும் அறியவில்லை என்று
இறுமாந்திருக்க...
பன்னீர் தூவலாய் உன் சிரிப்பு
அடிமனதில் கலவரமூட்டி..
என் முககவசம் கிழிக்கிறது...

கார்கால காற்றின் விழிகளை
கடன் வாங்கி...
வெப்பம் தணித்திடும் மழைநாளில்
நீர்குமிழ்களுக்குள் பதுங்கிட
நினைக்கும் மைனாவாய்
நகர‌துடிக்கும் என்னை
கண்ணாடி மாளிகையொன்றின்
பக்கம் நின்று கர்வத்துடன்
எள்ளிநகையாடுகிறாய்...

காலவரையற்ற பயணத்தில்
எத்தனைகாலம் மௌனமொழியில்
சம்பாஷிப்பது?
பூஜ்ய நேரம் நெருங்கும் போது
விடைபெறதானே வேண்டும்?

நீ ஒரு கர்ஜிக்கும் சிங்கமாகவே
இருந்துவிட்டு போ!
நான் ஒரு தீ கொழுந்து விட்டெரியும்
சிதையில் விறகாகி போகிறேன்!
Offline Dear COMRADE

 • Newbie
 • *
 • Posts: 16
 • Total likes: 125
 • Karma: +0/-0
 • Gender: Male
 • என் இனிய தனிமையே✍️

தோழியாய்
தோள் சாய்ந்த உன்னை
துணைவியாய்
என் இதயம் பார்க்க
நட்பிலே நடைபழகிய
என் கால்கள் இன்று
காற்றினில் சிறகின்றி
பறக்கின்றதே காதலினால்...

மரணத்தின் வலியை
தினம்தோறும் உணர்கிறேன்
இந்த ஒருதலைக் காதலில்...
வார்த்தையால்
வர்ணிக்க முடியாத
வரைவிலக்கணம் இந்த காதல்....
உயிரோடு
உருக்கும் தீயில் இட்டாலும்
உன் நினைவோடு
உறையும் பனியில் கிடந்தாலும்
ஒன்றும் ஆகாது அல்லவோ ....
தனிமை கடலில்
தவிப்பதை விடவும்...

செய்வதறியாது தவிக்கின்றேன்
சிவப்பு ரோஜாக்கள் ஏந்தி
உன் முன்னே...
சொல்லமுடியாமல் நிற்கின்றேன்
சிலை போல அதை மறைத்து
என் பின்னே...
வார்த்தைகள் மௌனமாக
மௌனங்கள் நீளமாக...
உன் விழி நோக்கி நடக்கின்றேன்
ஏற்பாயோ இல்லை மறுப்பாயோ???
என்றறியா வினாக்களோடு...

எதிர்பார்ப்பின் உச்சம்
உன் விழியிலே விளையாட...
பிரமிப்பின் வெளிப்பாடு
உன் புன்னகையில் புலப்பட...
மெல்லத் தலை சாய்த்து
உற்று நோக்கும் உந்தன்
ஓரக்கண் பார்வை தேடுவது
கழுத்தில் இட அணிகலனோ
கை விரல் ஜொலிக்க மோதிரமோ
கார் கூந்தலோடு கதை பேசிட
காதோரமாய் தொங்கும் கம்மலோ
கவி வடித்த காகிதமோ
தேன்சுவை சாக்லேட்டோ
காஞ்சிபுர சேலை பட்டோ...

இல்லையேல்...
உன் இதயவாசலின் வெளியே
இணைந்திட தவம் கிடக்கும்
எந்தன் காதல் தானோ???

« Last Edit: October 26, 2021, 01:24:34 AM by Dear COMRADE »

Offline JsB

 • Full Member
 • *
 • Posts: 120
 • Total likes: 481
 • Karma: +0/-0
 • Gender: Female
 • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
அன்பே...
சகியே...
என் உயிரில் கலந்திட்ட
என் அழகு ரதியே....
உன் மீதுக் கொண்ட  அளவில்லா அன்புக்கு....
சொல்ல என்னிடம் வார்த்தை இல்லையே...

அழகிற்கே அழகு சேர்க்கும்...
உன் அழகிய குணத்தைக் கொள்ளைக் கொண்ட
என் இதயம் தினம் சொல்ல துடிப்பதே...
உன் பெயரை மட்டும் தானே என்னவளே...

உன்னை எனக்கு மட்டுமே...
சொந்தமாக்கி கொள்ள அடம் பிடிக்கும்
என் இதயத்திற்க்கு...என்னவென்று ஆறுதல் கூறுவது
எங்கு பார்த்தாலும் உன் ஞாபகம் என்னைக் கொல்கிறது....
யாரிடம் பேசினாலும்.....உன்னிடம்  பேசிய  நினைவுகள்...
என்னுள் ஊஞ்சலாடுகிறது...

என்னையே  உனக்கு பரிசளிக்க துடிக்கிறேன்...
உனக்கு பிடித்த  அழகிய  சிவப்பு ரோஜாவுடன்...
என் இதயத்தைப் பரிமாறிக் கொண்டு செல்ல வருகிறேன்...
என் ஆசை காதலியே...என் கனவு தேவதையே...
நீ சொல்லும் ஒரு சொல்லில்....என் காதல் மட்டும் இல்லை...
உனக்காகக் கட்டி வைத்த...
என் காதல் சாம்ராஜ்யமே அழியாமல்....
என் ஆயுள் காலம் வரை உயிர் வாழுமே...

உன்னை வியக்க செய்ய நான் வந்த  அவ்வழகிய நேரம்...
என்னை  சந்தோஷ கடலில் மிதக்க செய்கிறது
உன் புன்னகையின் வரவேற்பு...
நீயும் இதைத் தான் எதிர்ப் பார்த்து காத்துக் கொண்டிருந்தாயோ ...
என் செல்ல குட்டியே...
ஐ லவ் யூ மை பேபி....
« Last Edit: October 26, 2021, 04:23:39 PM by JsB »

Offline MoGiNi

உன்னை தாண்டும் தென்றல் என
உன் வாசம் சுமக்கிறது என் சுவாசம்
வரைந்து வைத்த ஓவியமென
நெஞ்சத்தில்
புனைந்து வைத்தகாவியம் நீ
வெகு தூரத்தில் இருப்பினும்
உன்னை விலகாது
நுகரும்
நினைவுப்பசி ...

புகழ் பெற்ற ஓவியர்கள்
தீட்டிய களங்கமற்ற ஓவியம்போன்ற
உன் வரிவடிவில்
வாழ்ந்துவிட துடிக்கிறது
ஒரு நிமிடம்
சிறகடிக்கும் இருதயப்பறவை ...

வண்டுகள் நுகரா மொட்டென
மலர மறுக்கும்
உன் இதழ்க் கடையில்
வழியும் அமுத மொழியில்
சிறகுலர்த்த தவிக்கிறது
இதுகாறும்
இன்மைஎனும்
வெம்மையில் குளித்த மனப்பறவை ..

சொல்ல முடியாத  காதல்
சொல்லில் அடங்காத  நேசம்
மெல்ல முடியா வார்த்தை
மென்று தின்னும் மௌனம்
கொன்றுவிட கூடுமோ
காதலதை ...

திறக்காத உதடுகள் திறக்கும்
என்றோ ஒரு நாள் ஒரு பொழுது
ஒரு நொடியில் ...
அதைக் காண அன்று
திறக்காமல் போகலாம்
இமைக் கதவு ...

Offline SweeTie

நட் போடு கூடிவந்த காதலிது
நாளாகிப்போனாலும்  மாறாது
தேனாக   தினமும்   இனிக்கிறதே  ...
தெவிட்டாத   நம் காதல்

நேற்று வச்ச  மீன் குழம்பு
இன்று  ருசிப்பதுபோல் 
காத்திருப்பதும்  காக்கவைப்பதும்
காதலுக்கு  என்றும்  குஷிதான்

காதலும்  மோதலும்  கட்டிப்புரண்டு
சேர்தலால்  கூடும்   
ஊடலும்  கூடலும் 
 இரட்டை குழந்தைகளாம் 

இடைவெளிகள்  கொடுப்பது
காதலுக்கு  நெருக்கம் 
தடைகள்   பல வரினும்
தளராது உண்மைக்  காதல் 

பார்வைகளின்  பரிபாஷை
பரிமாறும்  ஜாலங்களின் அபிநயங்கள்
புரிந்தும்  புரியாமல்  நடிக்கும்
இளங்குயில்களின்  காதல் மாயங்கள்

வண்டுகள்  இசைத்ததும் 
மலர்கள்  மகிழ்ந்து  அசைவதும் 
சேற்றில் முளைத்த செந்தாமரை
திங்களை தேடுவதும்  எதற்காக ??

முத்துப்பல்  தெரிய  அவள்
மோகன   சிரிப்புகளை  அவன்
அள்ளிச்  சேர்த்தெடுத்து    அதை
நித்தமும்  ரசிப்பது    எதற்காக?

பட்டுப்போல் மேனியதில்   
பட்டுத் தெறிக்கும்  வியர்வையதை
தொட்டுத்  துடைபபதற்குத்   தன் 
கைக்குட்டையைக்   கொடுப்பதும் எதற்காக

காதல்   காதல்   காதல்    

Offline Sun FloweR

மயக்கம் கொள்ளச் செய்கிறதே பெண்ணே..
பூத்துக் குலுங்கும் உன் புன்னகையும்..
ஈர்த்துக் கொள்ளும் உன் விழிகளும்...❤️

உன் முன் மண்டியிட வைக்கிறதே பெண்ணே..
பிரியம் படர்ந்த உன் பார்வையும்...
நேசம் தோய்ந்த உன் சொற்களும்...❤️

உள்ளம் நிறைந்த பேரன்பு
பொங்கித் ததும்புது நம் இருவர் முன்னே..
முதலில் யார் அவிழ்ப்பது இந்த
மௌன முடிச்சை என்ற கேள்வி
இன்று காணாமல் போய்விட்டது...❤️

எத்தனைக் காலம் தான்
சத்தமில்லாமல் மௌனித்திருப்பது...?
துணிந்து விட்டேனடி பெண்ணே
உன் மேல் கொண்ட பிரியத்தை
வார்த்தைகளால் மட்டுமல்ல
பூக்களாலும் புரிய வைக்க ....❤️

உன் சம்மதம் உணர்ந்த பின்னே
துணிவு கொண்டேன் பெண்ணே...
நான் கொண்ட பெருங்காதலை
உன் காலடியில் சமர்ப்பிக்க....❤️

பெரும் பிரியத்தை நீ இதழ் விரித்து
புன்னகையால் வெளிப்படுத்துகிறாய்...
நான் பூக்களால் அழைப்பு விடுக்கிறேன்...
பூக்களைக் கூந்தலில் சூடிக்கொண்டு
என்னை மனதில் சூடிக்கொள்வாய்
என்ற நம்பிக்கையில் உன் முன் நான் .....❤️
« Last Edit: October 27, 2021, 08:57:14 PM by Sun FloweR »

Offline Orchids

இது நிஜம் தானா..
நான் எதிர்நோக்கி இருந்த திருநாளும் இது தானா..💜💜💜

காதலை‌ உரக்கச் சொல்வாயா
அல்ல அல்ல
காதருகில் மெல்லிசையாய் இசைப்பாயா

என்னை ஏங்க வைப்பாயா!
அல்ல அல்ல
காதலால் தாங்கி பிடிப்பாயா!

மௌனமாய் நிற்பாயா!
அல்ல அல்ல
தேனாகக் குளைவாயா!

எட்ட நின்று கொல்வாயா
அல்ல அல்ல
கட்டி அனைத்து கொள்வாயா

பூங்கொத்தை பரிசளிப்பாயா!
அல்ல அல்ல
ஒற்றை ரோஜாவில் என்னை வென்று விடுவாயா!

மனதிலிருப்பதைச் சொல்லாமலே செல்வாயா
அல்ல அல்ல
சொல்லித்தான் என்னையும் கொண்டு செல்வாயா

நித்தம் தவிக்கிறேன்..
உன் தோள் சாய்ந்து
உன் பூமுகம் காண..
உன் கைகள் கோர்த்து
உலகை மறக்க..
சொல்லிவிடு இப்பொழுதே...!
💜💜💜


« Last Edit: October 27, 2021, 11:34:59 PM by Orchids »

Offline Nafraz


மறைத்து வைத்த காதல்
என் மனதில் மோதல்

உன்னிடம் சொல்ல முதல்
என்னை அறியா சாரல்

சொல்லவந்தேன் உன்னிடம்
என்ன சொல்வாய் என்னிடம்

வெல்ல வந்தேன் உன்னை
வையகம் பார்க்கும் முன்னே

என் மனதில் ஒரு தயக்கம்
அது என்னை சொல்லாமல் மயக்கும்

என் ரோஜாக்களுக்கு அரசி நீயோ
என்னோடு சேர்ந்து வருவாயோ

சொல்ல துடிக்குது மனசு
சொல்லாமலே போகுது என்னோட வயசு

உன் கண்களில் எனக்கு தெரிகின்ற காதல்
என் கண்களில் உனக்கு தெரிகிறதா?

           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline DineshVira

 • Newbie
 • *
 • Posts: 6
 • Total likes: 23
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
பிப்ரவரி 14 காதல் விஞ்ஞானி

நம்மை உணர்ந்து நம் காதல் அறிந்து
ஆம் முதலில் நியூ எண் crush

உன் கன்னங்களில் அப்பளம் உடைத்தே
கல்யாணம் செய்வது கனவு crush
நீ என் இதயம் உடைத்ததால் மட்டும்
 இல்லை என்றேன் crush
கண்ணாடியில் நான் மறைந்து என் எண்ணமெல்லாம்
 நீயே என் காணல் காட்சி  பொருளே crush

உன் நிழலும் என் புன்னகைக்கு தரும்
ஒரு புத்துணர்ச்சி உண்மைதான் crush
உன் வெட்கத்தில் என் உயிர் வைத்த இறைவனுக்கு
மனு போட நாள் கூடுமோ என் crush
அவன் இந்த காதலில் இரு நிழல்கள் கரம் தீண்டல் கண்டே
அவனுக்கும் மணி அடித்தது crush

உன்னால் தானே என் கையில்
கவிதை பிறந்தது தமிழே என் crush
உன் வசம் என் வாசம் உலர மலரே
உலகம் நீதான் கள்ளி காவியமே நம் crush
என் மனம் திறந்தும் உன் மௌனம்
அந்த நேரம் என் வாழ்வில் நரகம் தானே crush

இருந்தும் கண் ஜாடையில் என்னை
வா வா என்று நீ பாடியதும் அமிர்தம் தானே crush
நாம் வித்தியாச வானவில்
காதலர் தினம் எழில்மிகு நேரங்களில் crush
உறவினில் உம் தனி சிறகுகள் தந்த
வள்ளலே அன்பே crush

உன் விரல் பிடித்தே நம் கல்யாணம்
காலில் மெட்டி யாய் நானும் உன் crush
மறக்க முடியாத உன் அன்பின் வெளிப்பாடு வரும்
வரிகள் தானே நீர் நீ crush
காலன் வரும்வரை இருக்கும் நம்
பிணைப்பு என்று சொல்வாய் அடி கிறுக்கி crush

அதற்காக இந்த பூங்கொத்து நிகரில்லைதான்
இருக்கட்டும் இதோ crush
வெள்ளை உள்ளம் அடித்தவளுக்கு இப்படிக்கு crush
காதலிலே மலரோடு தேனாய் என் உனக்கு
இன்னொரு பா-கொத்து   முத்தத்திலே தருகிறேன் crush