Author Topic: ~ பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! ~  (Read 1333 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!




உலகில் பிறப்புகளும், இறப்புகளும் சாதரனமானவை தான். எந்த உயிரினமும் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. அதை இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான் மரணம் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் இயற்கை எல்லா உயிர்களையும் போலவே மனித உயிரையும் குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறது.
மனிதன் மரணிக்கும் பொது அவன் உதிர்க்கும் வார்த்தைகள் மதிப்பு மிக்கவை. அவற்றில் பொய் ஒளிந்திருக்காது என்பது உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை. இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, 'யூ டூ புரூடஸ்?' என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்'அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ''வைரவா விளக்கை அனைத்து விடு''என்பது தான்.

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை "விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்".

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலிகுலா, கடைசியில் தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. "நான் இன்னும் இறக்கவில்லை."

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, "இறைவா... நான் ஒரு குற்றமும் செய்யாதவன்".

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை, "கடவுளே என்ன நடந்தது எனக்கு?''

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, "ஆஹா... இதோ... என் முடிவு இங்கே இருக்கிறது" என்றார், கடைசியாக.

இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கும் பொது "நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது" என்றார்.

விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை "என்னை தனிமையில் இருக்க விடுங்கள்."

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், "இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடியாது" என்றார்.

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ''இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே" என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை "எனக்கு எல்லாமே போர் அடிக்குது" என்பது தான். எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இருக்கிறார்கள்.

'நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது' - அது தான் விதி.