Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
23
மைதானம் இறங்கவில்லைங்க 
கையில் பந்தை வீசவில்லைங்க 
மட்டையும் தூக்கவில்லைங்க 
ஆனாலும் ஆடினேன் தூங்காம 
நானும் ஒரு  கிரிக்கெட்ங்க

Strikers, Shooters, blasters  தொடங்கி
மொத்தம் எட்டு குழுங்க
 அட ஆறே நம்பர்குள்ள இந்த
மொத்த gameum அடுக்கும்ங்க
Private le bowling போட்டு 
main le போடுவோம் batting nga
இதுதான் எனக்கு தெரிஞ்ச
 ஒரே ஒரு கிரிக்கெட்ங்க

 நம்ம  FTC வழங்கும் FPL   match தாங்க 😁

தங்கமான கேப்டன்
எங்க  strikers கேப்டன் வாணிஸ்ரீங்க
பயபுள்ள tossing time  மட்டும் போய்டுவாங்க
 out of coverage  ங்க
 ஜெயிச்சாலும் தோத்தாலும்
செல்லமேனு கட்டி பிடிப்பாங்க
எல்லா வியாதிக்கும் சொல்வாங்க
 சரியான  நாட்டு வைத்தியம்ங்க

Tea Master போடுவாரா தெரில
strong ar ஒரு டி ங்க
ஆனா மாஸ்டர் எப்போதுமே
எங்க டீம் strong palyerங்க
அடிப்பாரு பாருங்க வரிசையா பல  sixerங்க
Game  தவிர மத்த நேரம் எல்லாம்
சார் pvt le busyங்க

சரியான நேரம்  வந்தாரு
  நம்ம நண்பன் balck pantherங்க
வரும்போதே போடுவாரு
strong ar  ஒரு மந்திரம்ங்க
என்னடா bowling போடுறேனு
tea master திட்டினாலுங்க 
அட போங்கய்யா இதுதான் என் கேம்னு
கெட்டியா நிற்பாருங்க , wicket ar எடுப்பாருங்க

புது வரவு எங்க FCP Shanங்க
வந்த அன்னைக்கே எடுத்தாரு maximum runங்க
Game முடிஞ்சதும் மெயின் லே போடுவாரு கடலைங்க
 இருந்தாலும் !
இப்போதைக்கு எங்க  டீம் நம்பிக்கை நடிச்சதிரமங்க

எங்க டீம் Virat Terror ஆனா cute moonங்க
அவுங்களுக்குனு உண்டு  தனிபாணி ஆட்டடம்ங்க
எனக்கு எப்போதுமே அவுங்கதான் குருவுங்க
என்ன தோல்வினா மட்டும் மாமி
ஒரு நாள் மட்டும் தூங்க மாட்டாங்க

அன்பான  நண்பன் வசீகரன்ங்க
ஐயோ out  என்றாலும்  பாத்துக்கலாம்னு
தட்டி கொடுக்கும் தோழனுங்க
கடைசி நேரத்துலே draw எடுத்து team ar காப்பாத்துவாருங்க
எப்போதுமே இவர சுத்தி அதிக girls fansதாங்க

எல்லா டீமையும் கட்டி ஆழும் umpire தானுங்க
எட்டு குழு owners எங்க Spike  plus வெண்மதி தாங்க
எல்லாரையும் ஒன்னு சேர்க்க
பாடுவாங்க படாத பாடுங்க
கேம் முடிஞ்சதும் கண்டிப்பா 0
போகணும் நல்ல vacation ங்க
ஒரு ஒருத்தர் ஒரு ரகமங்க
எல்லாரையும் முகம் சுளிக்காம சமாளிப்பாங்க
பொறுமையின் சிகரம் தானுங்கே
 இவுங்களுக்கு
எப்போதுமே உண்டு  என்னோட சலாம்ங்க 

நண்பர்கள்  டீம் காக விழித்திருந்து
 கை தட்டும் போதுங்க
அவங்கே வெற்றியை நம்
வெற்றியாய் ரசிக்கும் போதுங்க
கூடுpனது  நல்ல   நட்பு தாங்க
கண்டிப்பா இதையெல்லாம்
இனி  மிஸ் பன்னுவேங்க

இதுதான் எனக்கு தெரிஞ்ச
ஒரே ஒரு கிரிக்கெட் ங்க
 நம்ம  FTC வழங்கும் FPL   match தாங்க 😍
24
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on May 15, 2024, 01:47:08 PM »
25


மட்டைக்கும் பந்துக்கும் ஆன உறவே
நமக்கும் நம் வாழ்க்கைக்குமான உறவு...
அடிகளை தாங்கும் மட்டையாய் நாமும்
நம்மை அடிக்க காத்திருக்கும் பந்தாய் நம் வாழ்க்கையும் ....

எவ்வளவு முறை அடித்தாலும்
திரும்ப திரும்ப நம்மை நோக்கியே வரும்
அடிக்க முடிந்த வரை அடிப்போம் ...
வெற்றியோ தோல்வியோ நிர்ணயிப்பது என்னவோ அது தானே ?

வெற்றியை இலக்காய் கொண்ட விடாமுயற்சி போராட்டம் ..
தோல்வி நம்மை தழுவிய போதும்
தோள்களை தட்டி நமக்கு நாமே கூறும் ஆறுதல் வார்த்தை
தோல்வியும் வெற்றியடா , ஆம் அதுவே வெற்றிக்கு முதரற்படியடா ...

நமக்காய் நம்முடன் நிற்க சிலர்
நம்மை எதிரியாய் கொண்டு எதிர்க்கவும் சிலர் ..
கை கொட்டி சிரிக்கவும் சிலர்
அய்யோ பாவம் என்று அழுகவும் சிலர்..

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்ற கூற்று எங்கோ ஒலிக்கும் நொடியில்
தோள் கொடுப்பான் தோழன் என்ற கூற்றும்
காதுகளில் கணீரென கேட்கிறது ...

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
செவிமடுக்காமல் நம் இலக்கை நோக்கி போவோம் ...
வெற்றியோ தோல்வியோ என்றுமே நம் கையில்
வீழ்த்த நினைத்தாலும் விருட்சத்தின் விதையாய் முளைப்போம் ...

26


அன்று,
ஓ.. விளையாடலே.. எனையாளும் கலையே..
உன்னை விரும்பாதவர் யாருமுண்டோ?
உன்னால் நாங்கள் அடையும் பயன்கள்.. ஏராளம்.
அது, எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காது..

உன்னை, சில மனிதர்கள்.. பொழுது போக்கு என்பர்.
இன்னும், ஒரு சிலர் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பர்..
ஆனால் நானோ.. ஒரு கடின வித்தையை ஒருவர் அறியாமல்
அவருக்கு நாம் எளிமையாக கற்பிக்கும் யுக்தி என்பேன்..

நீயோ! ஒரு நிகழ்வுக்கு வியூகம் அமைக்க.. கற்று தருகின்றாய்..
அவ்வியுகத்தை செயலாக்கும் நுட்பம் செதுக்க.. கற்று தருகின்றாய்.. ..
செதுக்கிய நுட்பத்தை செயலாகும்.. மனவலிமை கற்று தருகின்றாய்..
மனவலிமையோடு.. வேகம் விவேகத்தையும் கற்று தருகின்றாய்..

மேலும்,
உள்ளரங்க விளையாட்டு.. வெளி அரங்க விளையாட்டு..
தனிநபர் விளையாட்டு..., குழுக்களின் விளையாட்டு...
எல்லைக்குள் விளையாட்டு.. எல்லைகளில்லா சுதந்திர விளையாட்டு..
விதிமுறைகளின் கட்டுப்பாட்டில் நீந்த கற்று தருகின்றாய்..

இன்றோ, 
மட்டைபந்தே... உலகின் மாபெரும்.. இதய துடிப்பு என்கிறார்கள்..
அகன்ற ஓர் அரங்கில், ஆயிர கணக்கானோர் சுற்றி நிற்க...
ஒருவர் மட்டும் பத்துஎறிய.. அதை ஒருவர் தடுத்து ஆட..
மற்ற வீரர்கள் வேடிக்கைபார்க்க, நடந்தேரும் விளையாடல்.. அது..

இன்று,   விளையாட்டை விளையாட்டாக பார்க்க ஆளில்லை..
தனக்கு, பொருளீட்டும் தொழிலாக பார்க்கின்றது.. ஒரு கும்பல்..
தான், உருவாக்கிய பொருளை சந்தைப்படுத்துகிறது.. ஒரு கும்பல்..
கைகள் தட்டி கொண்டவந்தவர்களை.. சூதாடிகளாக மாற்றுகிறது..  ஒரு கும்பல்..

இன்றைய விளையாட்டுக்கள் எல்லாம்.. விளையாட்டாக இல்லையே..
மட்டைபந்திடம்.. தன் தன்மை மறந்து மயங்கி தடுமாறி கிடக்கின்றன..
பண்டைக்கால நம் பாரம்பரிய விளையாட்டுகள் எங்கே போயின?
நம்மை செதுக்கி சிற்பமாகிய நம்ம விளையாட்டை காத்து நிற்போமா?   

இவை, ஆயக்கலைகளில் 64-ல் நம்மை களிப்பூட்டும் கலையிலும் சேராது.
இது, வீரம் செறிந்த போர்ப்பயிற்சி கலைகளிலும் அடங்காது...
நாம், விவேகவீரத்துக்கு விலைகள் பேசாது.. விலைகளுக்கும்  போகாது.. 
அதன்,  சிறப்புகளை..  மதிப்புகளை.. மங்காது மறையாது.. காத்து நிற்போம்...


27
  சிறுபிள்ளைகள் முதல்  பெரியவர்கள்  வரை விரும்புவது மட்டை பந்து தான் ..மைதானத்தில்  நண்பர்களுடன் எவ்வித கவலைகளின்றி விளையாடினோம்  அன்று .!கட்டிடங்களும் மதில் சுவர்களும் மறைத்துவிட்டன பலரது இளம்வயது கனவுகளை

இரு அணிகளுக்குள் கோபம்,  மோதல்கள். ஆர்ப்பரிக்கும் இரசிகர் பட்டாளங்கள் பெரும் திருவிழாவையே  திணரடித்துவிடும் .!!

. வீரர்களின் கனவு ,இலட்சியம் அணியை  வெற்றியை பெற செய்ய ஆடும் வீயூகம்  பாராட்டுக்குரியது.

உலக நாடுகளின் நட்பை இன்றளவும் இணைத்து வைத்திருப்பதே மட்டைபந்து தான் சுவாரசியம் மிகுந்த மகிழுட்டும் தருணங்கள் நடப்பது மட்டைப்பந்தில் தான் ....

வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடுபவனே சிறந்த வீரன்   பலரால்  கேலி, கிண்டல், அவமரியாதை என சந்தித்த வீரர்கள் 1983- ல் இந்தியர்களை தலைநிமிர செய்த கேப்டன் கபில்தேவ்!!!! 

பல  ஆண்டுகளாக தவமாய் தவமிருந்தோம் உலககோப்பையை   கையில் ஏந்திடமாட்டாமோ என்று விளையாட்டை நேசிக்கும் பலரது கனவை நனவாக்கிய 2011 -   ஆண்டில் வெற்றிவாகை சூட்டினார் தலைவன் Ms தோனி..



நம் சாதனையை சமன் செய்ய இன்னொருவர் உருவாகின்றான் சரித்திரத்தை நிலைநாட்ட நம்மால் மட்டுமே முடியும்...
 


போராடி கிடைக்கும் தோல்விகள் கூட கொண்டாடப்படும் வெற்றிதான்.- எம்.எஸ்.தோனி
28
Hi cute Moon sissy. Wish you a very happy b'day... U r really a very kind hearted girl sis.. be the same God bless you🎁🎊💜
29
Hi cuteeee,

               Indru endrum nalamudanum magizhchiyudanum vaazha iniya pirantha naal nalvazhthukkal.
30
Many more returns of the day happy birthday 🎂 Cute Moon Friend all your dreams come true good luck
Pages: 1 2 [3] 4 5 ... 10