Author Topic: கார்ன் ஃபிளேக் மில்க்ஷேக்  (Read 285 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

கார்ன் ஃபிளேக்ஸ் - அரை கப்,
பால் - 1 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
ஐஸ் கட்டிகள் - சிறிது.
எப்படிச் செய்வது?

பாலில் கார்ன் ஃபிளேக்ஸ் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும். அதை ஆற வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து  மிக்சியில் அரைக் கவும். ஏலக்காய்த் தூள் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்துக் குளிரக் குளிரப் பரிமாறவும்.