Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 335  (Read 707 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 335

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Lakshya

பெண்கள் தந்தையை
அதிகம் நேசிக்க காரணம்,
எவ்வளவு அன்பு வைத்தாலும்
தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்
அவளின் தந்தை மட்டுமே....

ஆயிரம் உறவுகள்
நம் அருகில் இருந்து
நமக்கு ஆறுதல் சொல்லி கட்டி
அணைத்தாலும்..
அப்பாவின் அரவணைப்பில்
ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்...

ஒரு ஆணிடம் அடம்  பிடித்து சாதிக்கலாம் என கற்று குடுத்தது தந்தை மட்டுமே....
பெண்களை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் தன்னை பெற்ற அம்மா வின் மறுபிறவி மகள் என்று....

ஒரு பெண் சாதிக்க முதல் தூணாக நின்றவர் தந்தை மட்டுமே...
அப்பாவின் கண்களுக்கு தன் மகள்கள் எப்பொழுதும் குழந்தைகளே...

மகள்களின் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண நினைக்கும் ஜீவன் அப்பா...

அப்பாவின் இரண்டாவது தாய் மகள்...மகளின் முதல் ஹீரோ தந்தை...
வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்ய தயங்காத உயிர் அப்பா....

அப்பாவின் தோழில் ஏறி சாமியை பார்க்கும் போது தெரியவில்லை சாமியின் தோள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!

நெடு தூரம் கைகளை பிடித்து நடை பழக கற்று குடுத்த உங்களை நரை வந்த பின் நான் பாத்து கொள்கிறேன் அப்பா...

பெண் பிள்ளையாக இருந்தாலும் கடைசி வரை உங்களுடன் இருப்பேன் அப்பா..இது சத்தியமே...

« Last Edit: January 22, 2024, 07:03:13 AM by Lakshya »

Offline Lonely Warrior

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 32
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்பு மகனே

இரும்பில் செய்த இதயம் எனக்கென 
எண்ணி இருந்தேன் இறுமாப்போடு 
கரைந்து தான் போனது  இதயம்
உன் பிஞ்சு விரல் தொட்ட நிமிடம் 

அசகாய சூரனும்
அசைந்தே தான் போவான்
தன் பிள்ளை மேனி தொடுகையிலே ,
நான் மட்டும் என்ன அதற்கு விதி விலக்கா .


கருவிலே சுமந்த உன் அன்னை
மார்பிலே தாங்கும் முன்னே ,
இரு கரம் ஏந்தி தாங்கி விட்டேன்
என் நெஞ்சினிலே உன்னை  .


உன் பிஞ்சு கால் கொண்டு என் நெஞ்சிலே
நீ உதைத்திட்டாய் காரணம் பின்பு அறிந்தேன் ,
அந்த பஞ்சு மெத்தை வேண்டாம்
உன் நெஞ்சினில் என்னை உறங்கவை அப்பா என்று .


ஆயிரம் காலத்து  பயிரடா    நீ  !
என் குலம்  காக்கவந்த உயிரடா  ! 
நீயும் கண்ணாடி போல் தான் மகனே
என்னைகாண்கிறேன்  உன் முகத்தினிலே …
« Last Edit: January 23, 2024, 04:17:43 AM by Lonely Warrior »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


பிள்ளை

என் தாயுமானவனே...

பத்து மாதம் கருவில்
பக்குவமாய் சுமப்பவள் தாய் என்றால்
நித்தம் நித்தம் நினைவில்
பொக்கிஷமாய் சுமப்பவன் நீ...

தன் உதிரத்தை பாலாய் கொடுத்து
உணர்வுகளை ஊட்டுபவள் தாய் என்றால்
உன் பிம்பமாய் என்னை நினைத்து
உன் உயிராய் என்னை பார்ப்பவன் நீ..

எட்டாப் பருவத்திலும் உலகை
எட்டிப்பார்க்க உன் தோள்களில் சுமப்பாய்..
பருவமான காலமதில் தோள் கொடுக்கும்
தோழனாய் என்னை கருத்தாய் காப்பாய்...

உடல் அளவில் மட்டுமேயன்றி
மனதளவிலும் உறுதிகொண்டு
வாழ்வை வெல்லும் வீரனாய்
பார் போற்றும் பிள்ளையாய்
பக்குவமாய் செதுக்கும் நீ --
ஒவ்வொரு பிள்ளையின் வாழ்விலும் கிடைத்த
மிகப்பெரிய பொக்கிஷமே.....


தந்தை

யான் பெற்ற மகனே..

கருவில் சுமக்கயில் உன் அசைவுகளை
உணர்ந்து பூரித்தால் உன் அன்னை
உன்னை என்று என் கைகளில் உணர்வேன் - என்ற
காத்திருப்பின் பலனாய் என் கைகளில் வந்த கடவுளடா நீ...

எம் தந்தை என்னை என்றுமே
தண்டித்தும் கண்டித்தும் வளர்த்தாரடா
அவருள்ளும் ஒரு தாயுள்ளம் இருந்திருக்கும் என உணர்ந்தேன்
உன் பிஞ்சு உடலை என் கைகளில் ஏந்திய நொடியில்...

என்றாகிலும் உன்னை நான் அதட்ட நேர்ந்தால்
அன்பு குறைந்ததென எண்ணிவிடாதே..
இந்த உலகை எதிர்கொள்ள உன்னை பக்குவப்படுத்துகிறேன்
என்பதை என்றுமே உன் கருத்தில் கொள்ளடா...

உன் அன்னையுடன் சேர்ந்து உயிர் கொடுத்து
எம் வாழ்வின் அர்த்தமாய் உம்மை பெற்றோமடா...
உன்னில் என்னை கண்டேனடா... என்றுமே
உன்னை என் உயிரினும் மேலாய் காப்பேனடா...


Offline NaviN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 107
  • Total likes: 258
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
அன்பு மகனே!!!!
எதற்கும் துணிந்தவனாய் இருந்த என்னை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்தது உன்னுடைய பிறப்பு..
எத்தகைய துன்பம் வந்தாலும் உன்னுடன் இருக்கும் தருணம் அனைத்தும் மறந்து போகும்..
உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் இறுதி வரை என் நெஞ்சில் சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது..
உன்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நீ விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன்..
அன்பு மகனே!!
அடியெடுத்து வா..
அகிலமும் உனக்கடா...
துள்ளி ஓடுகையில்
புள்ளி மான் ஓட்டம்
உன்னில் கண்டேனடா..
ஆசை வார்த்தையிலும்
அதட்டி பேசுகையிலும்
அடிபணிவேன் உன்னோடு..
உனக்குள்ளே போ
உன்னை தேடு
உன்னை அறிவாய்
உலகை வெல்வாய்...


Offline Vijis

மகள்
 பத்து மாதம் சுமந்தவள் தாய் என்றால் வாழ்க்கை முழுவதும் சுமப்பவர் தந்தை

 என் முதல் ஆசான் என் முதல் நாயகன் என்னை காக்கும் கடவுளும் அவரே

 நான் கேட்ட முதல் இசை அவரது இதய துடுப்பு தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது என்று நேர்மை தவறாமல் வளத்தவர் நாள்தோறும் நாம் வாழ நாளெல்லாம் போரடியவர்

 கஷ்டங்களில் தோள் கொடுக்கும் தோழன் குடும்பம் என்றும் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கியவர்

 என்றுமே பாசத்துக்கு எடுத்துக்காட்டு அவர் குழந்தையாக இருந்தபொழுது உங்களை கட்டிஅணைத்த படி உங்களின் பாசத்திலும் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்த நாட்கள் வராத என ஏங்கிறது மனது

 கடவுளே வரமாய் கிடைத்தார
 தந்தை என்னும் உருவத்தில்

தந்தை
என்னை அன்னையாக வளர்க்கும்
குட்டி தேவதை இவள் என் வீட்டு குலதெய்வம் இவள்

என் வாழ்வில் வந்த பின் தந்தை என்ற உணர்வை உணர்ந்தேன்

ஓராயிரம் மலர்கள் தோற்று போயின அவளின் சிரிப்பில் என் கஷ்டமும் கவலையும் மறந்து போகும்

 அவளின் மழலை மொழியில் என் மடியில் தவிலும் பொழுது எனக்குள் தாய்மை இருப்பதை உணர்தேன்

 கை பிடித்து நடை பழகியவள் மார்பில் தலை சாய்த்து உறங்கியவள் வரம் கேட்டு வந்த மகள் இவள் என் வாழ்க்கைக்கு வசந்தத்தை தந்த மகள்

 ஆண்டுகள் பல ஓடின வளர்ந்து ஆளானாள் எனக்கு மகளாய் பிறந்து தாயுமானதால் பிரிய சற்றும் மனமில்லை அவளின் திருமணத்தின் பொழுது நன்றி

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
இன்னோரு ஜென்மம் வேண்டும்

அவனும் அவளும் கரம்பிடித்த
இந்த  ஈராண்டுகளிலும்
அவளுக்கு அவனும் அவனுக்கு
அவளுமாய் தான் நகர்ந்தது

அவளும் தன்னை எல்லாரும்
மலடி என்று சொல்வதை
தாங்காமல் திண்டாடுவாள்
அவனோ அவளை ஆறுதல் படுத்துவான்

நான் உனக்கு வேண்டாம்
நீ என்னை விட்டு பிரிந்து விடு
என்பாள் அவனோ உன்னை விட்டு
எங்கு நான் செல்வேன் என்பான் அன்பாய்

இந்த போராட்டத்தின் வென்றது
அவன் நம்பிக்கை தான்
ஆம் இறுதியில் கடவுள் வரமாய்
உருவானது ஒரு குழந்தை

அவள் குழந்தையை பத்து
மாசம் சுமந்தாள் - ஆனால்
அவன் அவளையும் கருவையும்
அவன் நெஞ்சில் சுமந்தான்

அவள் காலில் சிறு
கல் கூட படாமல்
கண்ணை இமை காப்பது போல
பாதுகாத்தான் அவன்

பிரசவ வலியில் அவள் துடித்தாள்
அவளை பார்த்து அவன் துடித்தான்
இல்லை என்னால் அவளை
இப்படி பார்க்க முடியாது என்றான்

வலியில் அவளும் பயத்தில் அவனும்
பிரசவ அறைக்கு செல்லவும் துணிவு
இல்லை அவனுக்கு எதோ ஒரு
தைரியத்தில் உள்ளே சென்றான்

அவளும் அவனை பார்த்த
திருப்தியில் அவள் கரம் பற்றி
வலியில் துடித்தாள்
அவனோ அவளை கண்கொண்டு
பார்க்கமுடியாமல் தவித்தான்

இறுதியில் குழந்தையை
அவன் கையில் கொடுத்தார்கள்
அதை அவன் பார்க்கும் போதும்
அவன் கண்ணில் அவள் பார்த்த பிரகாசம்
இதுவரை காலம் அவன் கண்ணில் பார்க்காதது

அப்போது அந்த வலியையும்
மறந்து உறங்கினால் அவள்
விழித்து அவள் அவனிடம் சொன்னது
இன்னோரு ஜென்மம் வேண்டும்  உன்னோடு

உன் தாயாகவோ உன் தரமாகவோ இல்லை
உன் மகளாக வாழவேண்டும்

இத்தனை நாள்  முத்த மழையில்
என்னை நீ நனைய வைத்தாலும்
எம் குழந்தைக்கு நீ கொடுத்த
முதல் நெற்றி முத்தத்துக்கு
ஈடாகாது என்றாள் அவள்


« Last Edit: January 22, 2024, 09:53:03 PM by NiYa »

Online AtmaN

  • Newbie
  • *
  • Posts: 35
  • Total likes: 83
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
என் தங்கமே.. என் பல வருட வாழ்க்கை சுற்றியதே இந்த ஒரு நிகழ்வுக்காகத் தான்....

நீ என் கைகளில் தவழ்ந்திடும் தருணம் இந்த உலகமே என் வசமானது என் உயிரே..

உன் ஒற்றைப் புன்னகையில், உலகம் அர்த்தமற்று போகச் செய்கிறாய்..
உன் கன்னக் குழி அழகில், வாழ்வை முழுமை ஆக்கினாய்..

இந்த நொடி முதல் எனக்கென்று எதுவுமற்று, உனது கனவுகளை மெய்பிப்பதே என்னுடைய நோக்கம் ஆகும்..

என் கரங்களில் எத்தகு பாதுகாப்பை உணர்கிறாயோ, அத்தகு பாதுகாப்பை
காலம் முழுவதும் உனக்கு தருவதற்கான தைரியத்தை என்னுள் நான் உணர்கிறேன்..

ஒவ்வொரு மகளும் ஒவ்வொரு தந்தைக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை உன் மூலம் நான் உணர்கிறேன்..
இதே உணர்வு தான் அனைத்து தந்தைக்கும் இருக்கும் என்பதனால் இதருணத்தில் இருந்து என் மனைவியைத் தவிர அணைத்து பெண்ணையும் என் மகளாய் பார்ப்பேன் என்று உறுதி மொழிகிறேன்..

தந்தை மகள் உறவு என்பது உலகத்தில் வேற எந்த உறவைக் காட்டிலும் உயர்ந்தது மற்றும் புனிதமானது..

இந்த சமுதாயத்தில் எவ்வளவு நல்லது கெட்டது இருந்தாலும் உன்னைப் பாதுகாத்து உன் மனதிற்கு பிடித்தவாறு நீ வாழ்வதைப் பார்த்து ரசித்து..
உன் கலங்கமற்ற கண்களும் தெய்வீகச் சிரிப்பும் உன் வாழ்க்கை முழுவதும் தொடர என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் கண்மணியே..

உன் வாழ்க்கையில் நான் உன்னுடன் இருக்கும் வரை தோல்விகள் அனைத்தையும் வென்று, வெற்றி தடம் பதித்து..
உனது இதே அழகிய புன்னகையை எனது மரண படுக்கையின் கடைசி தருணத்தில் பார்த்து எனது உயிர் மூச்சு என்னை விட்டு பிரிந்தால் அதுதான் பேரானந்தம்..
« Last Edit: January 23, 2024, 12:22:55 AM by AtmaN »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 131
  • Total likes: 805
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கையில் தவழ்ந்திடும்
தங்க நிலா..
வேரினில் உதித்த
வேர்ப்பலா..
புன்னகை புரிந்திடும்
பொன் நகை..
பூக்களின் தேசத்தில்
நீ ஒரு தனி வகை..

அதிகாலையில் கேட்டிடும் பூபாளம்..
மலர்கள் மொத்தமாய் குவிந்த
சோலை வனம்..
கொள்ளை கொள்ளும்
மாதுளைச் சிரிப்பு...
அழகெல்லாம் கொட்டி கிடக்கும் தேக வனப்பு...

சிப்பிக்குள் மறைந்திருந்த
அரிய வகை முத்து..
கைகளிலே தவழ்ந்து நிற்கும்
பிள்ளைக் கனி அமுது..
வேண்டினாலும் கிடைத்திடாத
பெருஞ்செல்வம்..
யாவரையும் கட்டிப் போடும்
வசிய மந்திரம்..

புன்னகையின் பூக்காடு..
வண்ணங்கள் நிறைந்த வானவில்..
தெற்கிலே வீசிடும் தென்றல்..
உலகோர் போற்றிடும் தீந்தமிழ்..

கையில் தவழ்கின்ற வருங்காலம்..
வைகறையில்  போட்ட மாக்கோலம்..
ஒவ்வொரு மனிதனும் விரும்பும் கனவு..
கோடி கொடுத்தாலும் எட்டாத
பூம்பிஞ்சு..

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 653
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடித்து தாயின் கைகள்..
தடுக்கி விழுந்தவனை தூக்கி நிறுத்துவது தகப்பன் கைகள்..

உன் உச்சு முகர்ந்து பெருமை கொள்ளும் தாயன்பு..
ஊருமெச்சும் உனதழகை பார்த்து கர்வப்படும் தகப்பனன்பு..

அம்மாவின் ஒரு துளி கண்ணீருக்கு கூட அர்த்தம் புரியும் நமக்கு.. ...
அப்பாவின் வெளிவரா கண்ணீருக்கு கடைசிவரை அர்த்தம் தெரியாது..

தாய்க்கும் பிள்ளைக்குமான பாச பிணைப்புக்கு வழிவிட்டு..
தூர எட்டி நின்று அதை ரசிப்பது அப்பாவின் பாசமே.. பாசம்தான்..

அம்மாவின் பாசம் உணர்வில் கலந்திருக்கும்...
அப்பாவின் பாசம் அவரின் உழைப்பில் கலந்திருக்கும்..

அம்மாவின் அன்பு அலைகடல் போல என்றால்
அப்பாவின் பாசம் ஆழ்க்கடல் போன்றது...   

அலைக்கடலை புரிந்து கொள்ளுதல் எளிது...
ஆழ்கடலை அறிந்து கொள்ளுதல் கடினம்...

தன் உடல் உழைப்பை கொடுப்பவள் தாய் அன்பு என்றால்...
தன் உயர் மொத்தத்தையும் தானம் செய்பவன் தகப்பன்..

தவறிழைக்கும் பிள்ளையை கண்டு கலங்குவது தாயுள்ளம்..
தவறுகளை சுட்டிக்காட்டி நல்வாழ்ப்படுத்துவது தந்தையுள்ளம்..

தாயின் கருவறையில்  பத்து மாசம்..
தகப்பனின் இதயவறையில் மொத்த மாசம்...

தாய் தாயக இருப்பதும். தந்தை தந்தையாக இருப்பதும்...
அவர்கள் வாழ்ந்து காட்டுவதிலே அடக்கம்...