FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 06:43:43 PM

Title: ஐபேட் மினியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள்
Post by: Anu on October 28, 2012, 06:43:43 PM
ஆப்பிள் தனது புதிய சாதனமான ஐபேட் மினியை நேற்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஐபேட் மினி 3 மாடல்களில் வருகிறது. அதாவது 16ஜிபி சேமிப்பு மற்றும் வைபை வசதியுடன் வரும் ஐபேட் மினி 329 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி சேமிப்பு மற்றும் செல்லுலர் வசதியுடன் வரும் ஐபேட் மினி 459 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் 3ஜி மற்றும் எல்டிஇ வசதிகளுடன் வரும் ஐபேட் மினி 559 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றது.
நெக்சஸ் 7 போனைவிட இந்த ஐபேட் மினியின் டிஸ்ப்ளே பக்காவாக இருக்கும் என்று ஆப்பிள் கருதுகிறது. ஐபேட் மினி கருப்பு மற்றும் ஸ்லேட் மற்றும் வெள்ளை மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த ஐபேட் மினி சிரியை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் நானோ சிம்மையும் சப்போர்ட் செய்கிறது.
இதில் உள்ள கேமராவைப் பார்த்தால் ஐபேட் மினி 1.2எம்பி முகப்புக் கேமராவையும், பின்பக்கம் 5எம்பி ஐசைட் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த கேமரா மூலம் 1080பி வீடியோவை எடுக்க முடியும். இதில் இருக்கும் பேட்டரியும் நீடித்த அதாவது 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும்.
அக்டோபர் 26 முதல் இந்த ஐபேட் மினியை வாங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, செக் ரிபப்ளிக், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் ஹாங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஐயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சிங்கப்பூர், ஸ்பெயின், ஸ்வீடன். சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரி ஆடர்டர் செய்யலாம்.