FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 06:51:15 PM

Title: டிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கும் சோனி ஸ்மார்ட்போன்!
Post by: Anu on October 28, 2012, 06:51:15 PM
எக்ஸ்பீரியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை புதிதாக களமிறக்க உள்ளது சோனி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது இப்ரைஸ்.
சோனி நிறுவனத்தின் இந்த புதிய எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் திரை நிச்சயம் தகவல்களை தெளிவாக பார்க்கும் வகையில் 4.0 இஞ்ச் அகன்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த திரை டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை வழங்கும்.
இதனால் சிறந்த துல்லியத்தினையும் பெறலாம். மேலும் எம்எஸ்எம்7227 ஸ்னாப்டிராகன் எஸ்1 சிப்செட் பிராசஸர் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதாகவும் இருக்கும்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா பற்றி தெரிந்து கொள்ள நிச்சயம் ஆர்வமாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ கேமராவினையும் பெறலாம். வீடியோ சாட்டிங் வசதிக்காக 0.3 மெகா பிக்ஸல் கேமராவினை இதில் பயன்படுத்தலாம்.
ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் வசதியிலிருந்து 3ஜி மற்றும் வைபை வசதி வரைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும் இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அப்டேஷன் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,000 விலையிலிருந்து ரூ. 12,000 விலைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரங்களை, கூடிய விரைவில் பெறலாம்.