Author Topic: Wi-Fi தொழில்நுட்பம்  (Read 2678 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Wi-Fi தொழில்நுட்பம்
« on: January 29, 2012, 06:19:14 PM »


வயர்லெஸ்  தொழில்நுட்பம் இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.  அதில் ஒருவகையே Wi-Fi (Wi-Fi). இது ஒயர்லெஸ் ஃபிடெலிடி (Wireless Fidelity) என்பதன்
சுருக்கமாகும். இத்தொழில் நுட்பம் Wi-Fi அல்லயன்ஸால்  (Wi-Fi Allaines) உருவாக்கப்பட்டது.

வயர்லெஸ் நுட்பம் வானொலி, தொலைக்காட்சி, கணினி,   கைபேசி மற்றும் பல சாதனங்களில் வெவ்வேறு அலைவரிசைகளில்  பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் Wi-Fi-க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga  Hertz) முதல் 5 கிகா  ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை
ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுவர். வினாடிக்கு 
11 மெகா பைட் (Mega Byte) முதல்   140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தும்
திறன் கொண்டது. இத்திறனை அடிப்படையாக வைத்து 802.11ஒ, 802.11, 802.11ப,
802.11  என நான்கு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.

வயர்கள் இல்லாமல் வயர்லெஸ்
முறையில் கணினிகள், பிரிண்டர்கள், Laptop ஆகியவற்றோடு தொடர்பை
ஏற்படுத்திட(LAN) இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள்,  நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள்  ஆகிய பல இடங்களில்
இணையத்தைப்  பயன்படுத்துவதற்கென  Wi-Fi அக்ஸஸ் பாயிண்ட்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வீடுகள் சிறு நிறுவனங்களில் இணைய
இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மோடம்களில் Wi-Fi ரூட்டர்கள் (Wi-fi
Router) பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.

இதுபோன்ற Wi-Fi வசதி உள்ள
இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற Laptop, Tablot Pc மற்றும் Smart Phones
 சந்தையில் பல மாடல்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. Wi-Fi
சாதனங்களுக்கான இந்திய சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் 120 கோடி. வரும்
ஆண்டுகளில் இது 400 கோடியாக வளர்ச்சியடையக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Wi-Fi நெட்வொர்க்கில் தகவல் திருட்டு

 இத்தொழில் நுட்பம் சிறந்ததாக இருந்தாலும் இதிலும் சில பாதுகாப்புக்
 குறைபாடுகள் உள்ளது. Wi-Fi நெட்வொர்க்கில்  ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து
நம் தகவல்களைத் திருடி நாசவேலையில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உண்டு. Wi-Fi
 நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட சுற்றுப்புறத்தில் எங்கிருந்தும் அந்த
நெட்வொர்க்கை ஹேக் செய்யமுடியும். இதற்கான மென்பொருள்கள்கூட இணையத்தில்
கிடைக்கின்றன.

இதுபோன்ற திட்டமிட்ட ஹேக்கிங் மட்டுமல்லாமல் ஏதோச்சையாக கிடைக்கும்
Wi-Fi நெட்வொர்க்கில் நுழைந்து விளையாட்டாக அல்லது விஷமத்தனமாகக்
குழப்பங்களை ஏற்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் ஆகியவையும்கூட
நிகழ்கின்றன.தற்காலிகமாக போலியான Wi-Fi நெட்வொர்க்கை உருவாக்கி தொடர்பு
கொள்ளும் கணினிகளில் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகள்
கையாளப்படுகின்றன.

 பாதுகாப்பு வழிமுறைகள்



இதுபோன்ற தீய நோக்கத்துடன் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை அணுகாமல் தடுக்க Wi-Fi ரூட்டரின் சாதாரணமானதாக இல்லாமல் கடினமானதாக அமைக்கவேண்டும்

உங்கள் Wi-Fi நெட்வொர்க்கிற்கான
பாதுகாப்பு அமைப்பை (Security Setup) எப்போதும் இயக்கத்திலேயே
வைத்திருக்கவும்.  வீடுகள் மற்றும் சிறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும்
Wi-Fi ரூட்டர்களுக்கும் இவை பொருந்தும்.

பயன்படுத்தாத போது மின் இணைப்பைத் துண்டித்து விடுவதே  நல்லது.


உங்கள் நெட்வொர்க்கில் உள்ள Wi-Fi கருவிகளுக்கு மட்டுமே இணைப்பை அனுமதிக்கும் படியான ஃபில்டர்களைப் பயன்படுத்தவும்.

Wi-Fi சாதனங்களில் வேறு திறந்த
நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் (Automatic Access) தானியங்கி
அமைப்புகள் இருந்தால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும்.

  • நிறுவன நெட்வொர்க்குகளுக்கு ஃபயர்வால் (Firewall) போன்ற கூடுதலான பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தவேண்டும்.

« Last Edit: January 29, 2012, 06:21:03 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: Wi-Fi தொழில்நுட்பம்
« Reply #1 on: January 29, 2012, 09:45:01 PM »
ipdi security potta gab and me lam epdi aattaya podurathu net a >:( >:( >:(