FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on January 18, 2018, 07:01:42 PM
-
காதலாய் நினைத்திருந்தால்
கைதியாகி இருப்பேன் ...
காமமாக நினைத்திருந்தால்
கடந்திருப்பேன் ...
நண்பனாய் நினைத்திருந்தால்
தோள் சேர்த்து நடந்திருப்பேன் ...
உறவாய் நினைத்திருந்தால் ...
உருகி இருப்பேன் ...
உடன் பிறப்பாய் நினைத்திருந்தால் ...
உடன் இருந்திருப்பேன் ...
தாயாய் நினைந்திருந்தால் ...
உன் கருவில் நுழைந்திருப்பேன் ...
தந்தையாய் நினைத்திருந்தால் ...
உன் வாசம் நுகர்திருப்பேன் ...
நானே நீயாக மாறியதால்
என்ன செய்வதென்று
புரியாமல் கிறுக்கி கொண்டிருக்கிறேன் ...
-
அருமை நண்பா
தொடர்ந்து நிறைய கிறுக்குங்கள்
வாழ்த்துக்கள்
-
கண்டிப்பா நண்பா :)
-
Too gud Senior.. keep going..Supereee
-
sure junior .. :)
-
கிறுக்கல் நன்று. தோல் என்பதை தோள் என மாற்றிக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
-
nandri sweetie :)
-
கவிதை அருமை Socrates அண்ணா
தொடந்து எழுதுங்கள் .....