FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 01, 2018, 12:25:03 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: Forum on July 01, 2018, 12:25:03 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 191
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/191.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: AshiNi on July 01, 2018, 01:51:39 AM
வான் மதியே வான் மதியே
  மின்னும் வெண்திலகமாய் நீ தோன்றிய
சேதி சொல்லவா உலகத்திற்கு..?
  வட்ட முகமாய் நீ ஜொலிக்கும்
காரணம் சொல்லவா அண்டத்திற்கு..?

காடு மலைகளில் தேடியலைந்தேன்
  ஒருகாலம் என் மனதை...
கடைசியில் தொலைந்த இடம் அறிந்தேன் !
  எப்படி தொலைத்தேன் என பிழிந்தேன்
நித்தமும் என் நினைவை...
  வார்த்தைகளின்றிய அவள் ஒற்றை புன்னகையால்
என சித்தமும் தெளிந்தேன் !

அவளும் நானும் முடிவற்ற பயணமாய்
  காதல் ரயிலில் பயணித்தோம்
சிவப்பு அபாயமாய் எது வந்ததோ...?

தஞ்சாவூர் தவிலாய்
  காதல் தாளம் உரக்க வாசித்தோம்
தாளமும் மௌனம் காத்ததேனோ..?

சிவகாசி வெடியாய்
  காதல் பூரிப்பில் படபடத்தோம்
வேட்டுச்சத்தம் ஓலமாகியதேனோ..?

திண்டுக்கல் காதல் பூட்டினால்
  அடைப்பட்டு கிடந்தோம்
பூட்டை உடைக்கும் சாவி யார் கையில் கிடைத்ததோ...?

தாவணி போட்ட என் கண்மணி,
  அன்று காதலனை பிரிந்த பெண்மணி !
பூ முடிந்த என் எழில் கோதை,
   நாளும் கொண்டாள் வேதனையெனும் போதை !
                                                     
என் இதயம் பறித்த அவளை
  துளியும் மறக்க இடமில்லை...
நம்மை பிரித்த ஞாலத்தில்
  வாழ்க்கை நடத்த மனமில்லை...

கால்கள் விரைந்தன
  என் முடிவைத்தேடி...
மனதை பதம் பார்த்தது
  பிரிவெனும் விஷச்செடி...

கண்டு கொண்டேன் ஓர் பாதாளம்
  உயிரை மாய்க்க அது தாராளம்...
மரணத்தின் பிடியின் இறுதி நொடி
  கண் முன்னே நின்றாள் என் காதல் கொடி...

ஆனந்தத்திற்கோ எல்லையில்லை!
  அவள் விழிகள் தவிர வேறு சொர்க்கமில்லை!

பிரித்தவரே நம் உண்மைக்காதல் கண்டு
  அவளை என்னிடம் அனுப்ப,
நாம் கொண்ட பிறவிக் காதலின் பூரணத்துவம்
  உணர்ந்த கணம் அது......!!!

அதுவரை தேய்ந்து முழுமை காணா
  நம் இருவர் காதல் பிறைகளும்
பிரிவின் பின் முழுமை காண வளர்ந்து சேர
  பால்நிற ஒற்றை முழுமதியானதே...
இடையிலே தடை நிற்பினும்
  அவள் கண்கள் எனை மேய
என் கண்கள் அலைமோத
  மொத்தமும் அவள் வசமானதே...

விண்ணைத்தாண்டி போக
  ஏணி ஒன்று வேண்டும்...
நம் காதலை பிரதிபலிக்கும்
  வெண்ணிலவான உனை
முத்தமிட வேண்டும்!

எம்மிருவர் காதல் மனங்களை
  உலகிற்கு காட்ட உருவெடுத்த முழுச்சந்திரனே...
இனி காதலர் இதயங்களை
  அழகாய் வசப்படுத்தப் போகும் நீ,
 என்றும் இளசுகளின் செல்ல தந்திரனே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: JeGaTisH on July 01, 2018, 02:12:31 PM
இரு கோணங்களில் நிற்கும் நாமிருவர்
நம்மை சேர்த்து வைக்க வந்த நிலவோ ??

இரு பாதி நிலவுகளும் ஆசைகொண்டு
தோன்றியது அந்த பௌர்ணமியோ ??

எட்டாத உயரத்தில் நீ இருக்க  -
உன்னை எண்ணாதவரும்  உண்டோ இப்புவியில்

என் மனமும் அது போலவே
ஒரு நாளும் உன்னை நினைகாமலிருந்ததில்லை.

மேகங்கள் உன்னை மறைக்கும் பொழுது
என் மனதில் ஏனோ  சலனம்
நட்சத்திரங்களின்  சதி   உன்னை
களவாடிவிடுமோ  என நெஞ்சில்  ஒரே பதற்றம்

விடியும் காலைப்  பொழுதில் உன்னை
கண்ணீருடன்  வழி அனுப்பி.வைத்து
சூரியன் மறையும் அந்திமாலைப்  பொழுது
மீண்டும் காத்திருப்பேன் உன் காதலனாக.

தூரம் எனக்கு தென்படவில்லை
உன் கண்ணீரும்  காதலும் கண்ணில் இருக்கையிலே!
நீ  அமாவாசையாகும் முன்
உன் கைபிடிக்க வருகிறேன் நிலவே!!!


     

              அன்புடன் உங்கள் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: PowerStaR on July 02, 2018, 10:01:32 AM
  ♡  வெண்ணிலா ஒன்றின்
வீதி உலா!!!
முழுமதி அவளின் ஒய்யார நடையில்
மதி மயங்கி நின்றேன்
அவள் கடக்கையில்
மேகம் கடக்கும் நிலவுக்கு ஒப்பான அழகு!!!
அவளின் சந்திர பார்வையில்
கிரகணம் விலகிய சந்திரனாய்
எந்தன் காதல் !!!
எங்களின் விழி மோதலில்
காதல் பிறை தோன்றிட..!!
வளர் பிறையாக நேசம்
வளர்கிறதே!!
நிறைமதி நேசமும்
அன்புலியின் அகமும் கூடி
பௌர்ணமியாக ஒளிர்ந்திடுதே
காதல்...!!! ♡ 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: சாக்ரடீஸ் on July 05, 2018, 01:34:03 PM

நீயும் நானும்
இரு வேறு திசைகளில்
நம்மை ஒன்றுசேர்க்கும்
பாலமாய் இந்த நிலவு

நிலவோடு ஒரு
உரையாடல்
உன் நினைவுகள் சுமந்தபடி
உன்னை பிரிந்த நாட்களின்
நினைவலைகளே இந்த கிறுக்கல்

கடும் வெயிலிலும்
என்னை தென்றலாய் தீண்டி
சிலிர்க்க வைத்தது
உன் நினைவுகள்

எப்பொழுதும்
நிழல் போல
என்னை பின்தொடர்ந்து
இருளில் மட்டும்
என்னுள் ஒளித்து கொண்டது
உன் நினைவுகள்

நீ என்னோடு இல்லை
என்றாலும்
என் தனிமையை போக்க
என்னை தாலாட்டியது
உன் நினைவுகள் ...

ஊமை படமாய்
கண்முன் விரியும்
என் கனவுகளுக்கு
இசையமைத்து பின்னணி குரல்
கொடுத்து
என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தது
உன் நினைவுகள்

பட்டாம்பூச்சியின் வண்ணங்களாய்
என் இதயத்தில்
உன் நினைவுகள் ...

பூக்களின் வாசம் ...
       பூக்கள் வாடும்வரை
குயிலின்  ராகம் ...
      குயில்கள் கூவும்வரை
தென்றலின் சுகம் ...
      தென்றல் வீசும் வரை
மொழியின் அழகு ....
      மொழியை பேசும் வரை
உன் நினைவுகளோ ...
      நான் வாழும் வரை

என்னதான் என் நேசத்தை
இதயம் என்னும் சிறையில்
அடைத்தாலும்.
அதை உடைத்தெறிந்து
மீட்டு செல்கிறது உன் நினைவுகள்

நிலவிடம் பதில் சொல் 
உன்னை
என் நினைவுகள் தீண்டியது ? என்று ....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: joker on July 05, 2018, 09:15:08 PM
என் தாய் தான் உன்னை
அறிமுகப்படுத்தினாள் என்னிடம்
சோறூட்டுகையில்
மலைமீது ஏறி மல்லிகை பூ
கொண்டுவாருவாய் என

தினம் உன்னை காண்கிறேன்
யாருக்கு கொடுத்தாயோ அந்த
மல்லிகைபூவை
நானறியேன்

நான் வளர வளர உன்மீதான
நட்பும் வளர்ந்தது

மொட்டைமாடியில் உன்னுடன்
பேசிக்கொண்டிருப்பதே என்
வேலையாகி போனது
இரவுகளில்

வளர்பிறையில் உனை காண்கையில்
சந்தோசம் தொற்றிக்கொள்ளும்
தேய்பிறையிலோ சோகமும்
என்னை சூழ்ந்து கொள்ளும்

சோகமும் மகிழ்ச்சியும்
கலந்து தான் வாழ்க்கை என
தினம் தினம் வாழ்ந்து
உணர்த்திக்கொண்டிருக்கிறாய்

உன்னை காணாத இருள்நாள்
நான் என்னை மறக்கின்ற ஒருநாள்

என் இரவு நேர பயணங்களில்
அழைக்காமல் என்னுடன் எப்போதும்
பயணிப்பவள்  நீ

விஞ்ஞானம் தான் வளர்ந்து
உன் இடம்தனில் கால் பதித்தாலும்
என்றும் அன்னாந்து பார்த்து வியக்கும்
அழகி நீ

எத்தனை கவிதைகள் தான்
எத்தனை கவிஞர்கள் தான்
எழுதினாலும் உனைப்பற்றி
தீராத அமிர்தமடி நீ

தினம் தினம் உன்னை ரசித்தாலும்
தெவிட்டாத இன்பமடி நீ எனக்கு

****ஜோக்கர் ****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: SweeTie on July 05, 2018, 11:05:31 PM
ஆழம் தெரியாத  நீலத்திரைகடல்
ஆர்ப்பரிக்கும்  அலைகளின்   சீற்றம்
சீற்றத்தால்  பிளவுண்ட குன்றுகள்மேல்
சீண்ட துடிக்கும்  ஈருயிர்கள்.

அளவீடு இல்லாத காதலுக்கு
கொள்ளளவு தெரியாத மனங்களுக்கு
பரப்பளவு தெரியாத இதயங்களை
வரப்பறிந்து  சேர்த்துவைக்கும் காதலது.

இருசோடிக் கண்களின் ஊடுருவல்
ஒரு சோடி இதயத்தின்  அகநெருடல்
துளிர்விடும்  காதல்   முதல் அரும்பு
ஒளிர்விடும் முதல் பிறை வான்வெளியில்

காதலைக்  கவி  பாடும் கவிஞர்களும்
வர்ணத்தால்  வரம்கொடுக்கும் ஓவியரும்
வாழ்நாளில்  மறப்பதில்லை  நிலாமகளை
காதலரும்  வெறுப்பதில்லை அவளை என்றும்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
கோளொரு  பொழுதும்  காதலர் வாழ்வில்
கூடவே வளர்வாள் …நிலா கேடுகள் செய்யாள்
பலர்  தேடவும்  செய்வாள்  அமாவாசையன்று

இச்சையுடன் சத்தமின்றி பரிமாறும்
காதலர் வாழ்வின் முதல் முத்தம்
திருடிய  பொழுதுகள்  மறவாது
என்றுமே பௌர்ணமி  நிலாமுத்தம்


 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 191
Post by: VipurThi on July 06, 2018, 09:52:07 AM
முகில் உலாவும் வானம்
வான் தொடும் மலைகள்
மலைகளில் இரு மனங்கள்
மனங்களிலே மௌனங்கள்

தேய்பிறையாய் அவன்
வளர்பிறையாய் அவள்
முழுநிலவாய் இவர் காதல்

மனத்தால் ஒன்றாக
விதியால் தூரமாக
பிரிவோ துன்பமாக
நினைவோ இன்பமாக
காதலை சுகமாய் உணர்ந்தோம்

தூரமோ தூரமாகிட
மீண்டும் கைகள் கோர்த்திட
நம் காதல் ஒளிருமே
அன்று மட்டுமல்ல என்றுமே 
வானில் பௌர்ணமியாய்

              **விபு**