FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 15, 2018, 11:33:30 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: Forum on September 15, 2018, 11:33:30 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 200
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/200.png)

இருநூறாவது ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியை முன்னிட்டு  மேல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் பதிவிடப்படும்  அனைத்து  கவிதைகளும் நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: AshiNi on September 16, 2018, 12:41:35 AM
என் காதலின் ஆசை புரிந்தவளே...
  என் மனதின் ஓசை அறிந்தவளே...

உனக்காய் கோர்க்கிறேன் இனிய கவி...
 உன்னால் சொர்க்கமானது இந்த புவி...

உன்னால் என் இதயத்தில்
 கர்நாடகத்தின் சங்கீதம்...
உன்னால் என் துடிப்பில்
 சரிகமபதநி'யின் சந்தோஷம்...

நீ சிரித்ததாலோ
  ராகத்தின் சுகமறிந்தேன்...?
நீ பேசியதாலோ
  ஸ்வரங்களின் இதமுணர்ந்தேன்...?
நீ பாடியதாலோ
  ஸ்ருதியின் பயனறிந்தேன்...?
நீ ஆடியதாலோ
  தாளத்தின் மெட்டுணர்ந்தேன்...?

உன் ஆரோகண அழகினால்
  அவரோகணமாய் தாழ்கிறேன்...
உன்னை பல்லவியாய் கொண்டே
  என் ஆயுளை வாழ்கிறேன்...

என் காலைப்பொழுதின்
  பைரவியும் நீயடி...
என் மழைக் காலத்தின்
  அம்ருதவர்ஷினியும் நீயடி...
என் சயன நேரத்தின்
  நீலாம்பரியும் நீயேதானடி...

மென்மையால் பெண்ணான
  வாழைத் தோப்பே...
ஆண்மையால் தினமும்
  உன்னைக் காப்பேன்...
பண்பினால் குலம் காக்கும்
  பாசக் குடையே...
உன் நிழல் இல்லையேல்
  மனதால் உடைவேன்...

உன் கபடமில்லா அன்பினால்
  என் இதயத்தில் குதித்தவளே...
உன் பெயர் சொல்லியே
  கன்னத்தில் சின்னம் பதிப்பேன்...

காட்டுப் பாதையில் நடந்தவனுக்கு
  காதல் பாதையை காட்டினாய்...
முட்கள் கண்ட சட்டைப்பையில்
 ரோஜா மலரை ஊன்றினாய்...

என் இளமையின் தேவதையே...
  என் வாழ்வின் அரசியே...
இசையும் நீயும் சமனன்றோ...!
  இரண்டும் இனிக்கும் தேனன்றோ...
என் சோலையில் நீ மானன்றோ...!
  உன் வாசம் வசிக்காவிடில்
என் ஜென்மமும் வீணன்றோ....!!!


■■■■■■■■■■

200 ஆவது வாரம் காணும் "ஓவியம் உயிராகிறது" நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சிக்கு உயிர் தந்த FTC க்கும், நிகழ்ச்சியை இரசிக்கும்படி கோர்த்தெடுக்கும் Editors க்கும், நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் RJ க்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியின் சிறப்புக்காய் பாடுபடும் அனைவருக்கும் இக்கவி சமர்ப்பணம்...

ஓவியமே நீ உயிராகி
  இருநூறு வாரங்கள் கடந்ததே...
உன்னால் பல கிறுக்கல்கள்
  கட்டவிழ்த்து வந்ததே...

பேனையும் உன்னால்
  கவி வரைய துடித்ததே...
இதயமும் உனைக்காண
  வாராவாரம் அடித்ததே...

பல சித்திரமும் உன்னால்
  உயிர் கொண்டது...
எம் தனித்துவ FTC'யே உனக்கு
  பிறப்பு தந்தது...

FTC எனும் தோழனுக்கும்
  என் நன்றி!
கவி வழங்கும் நட்புக்களுக்கும்
  என் நன்றி!
பாடல்களால் இதமூட்டும் உயிர்களுக்கும்
  என் நன்றி!
நிகழ்ச்சிக்கு வண்ணமூட்டும்
  தொகுப்பாளர்களுக்கும் என் நன்றி!
நிகழ்ச்சியின் வளர்ச்சிக்கு துணையாகும்
  உள்ளங்களுக்கும் என் நன்றி!
எனையும் குளிர்வித்த கவித்தளமே...
  உனக்கு கோடான கோடி நன்றி!

இறையருளால் பல்லாயிரம்
  வாரங்கள் கம்பீரமாய் முன் செல்வாய்...
ஓவிய அழகால் பல்கோடி
  கவிஞர்களின் மனம் என்றும் வெல்வாய்...!!!


●●வாழ்த்துக்கள் "ஓவியம் உயிராகிறது"●●



   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: JeGaTisH on September 16, 2018, 12:56:25 AM
பாசத்தால் திறந்த மனம் இன்று
பாடல் ஒன்றால் திறந்து கண்டேன்.

காதலும் சரி கனவும் சரி
உண்டாக்கும் கரு நீயே

கேட்போர் மனதை திருடி
உன் வசமாக்கிக்கொள்ளும்
பாடல் என்னும் மாயவன் நீ

சஞ்ஞலத்தில் இருக்கும் மனதை கூட
சமநிலை படுத்தும் வல்லவன் நீ

அம்மா என்னை உறங்கவைக்க
பாடியாதோர் பாட்டு
இன்றும் கண்ணுறங்குகிறேன் அதை கேட்டு
மனதை வருடியது வரிகளின் உணர்வு
என்னை களவாடியது பாடல் என்னும் இசை

என்னையும் காதல் செய்ய வைத்து இசை
இன்றும் காதலிக்கிறேன் இசை தென்றல் என்னும் காதலியை

இசையை நேசியுங்கள் இன்புற்று வாழுங்கள்
எல்லோர் இதயம் துடிக்கும் ஓசைகூட இசையே




அன்புடன் உங்கள் ரோஸ்  மில்க்  தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: SaMYuKTha on September 17, 2018, 07:26:47 PM
எப்பப்பா thread  ஓபன் பண்ணுவீங்க
ச்சா இந்த வாரமும் இடம் போச்சே
அட நா கேக்க நெனச்ச பாட்டு நீங்க கேட்ருக்கீங்களே
இவையாவும் நாம் இங்கு அநேகமுறை
கேட்டுப்பழகிய வாக்கியங்கள்…

இசைமீது உள்ள எமது தீராக்காதலை
எம்மனத்துக்கு நெருக்கமான சுற்றத்தோடு
கூடி ரசிக்கச்செய்து
இன்னும் பலமடங்காய் பெருக்கி
எம் உணர்வுகளோடு சங்கமித்திடும் இசைத்தென்றலே!!!

பல அழகிய நட்புறவுகளை
மனதிற்கினிய பாடல் சமர்பணங்களால்
பலப்படுத்திடும் பாலமாகிறாய் நீ!!!
எம்மனம் கவர்ந்த பாடல்கள்
பிறரால் ரசிக்கப்படும்போது அறிமுகமில்லையென்றாலுமே
மெல்லிய நூலிழையாக அங்கொரு இனியநட்பு
உருவாக காரணியாகிறாய் நீ!!!

முதலிடம் பிடிப்பதற்காக பொதுமன்ற வாயிலில்
பாய்ப்போட்டு படுத்திருக்கும் ஜெகாவும்
ஊருக்கு முன்னாடி ஓடிவந்து
பெரிய பெட்ஷீட்டை விரித்திடும் வைப்பெரும்
இங்ககூட ஜோடியாக வால்பிடித்து
இடம்பிடிக்கும் டோகாருவும் சொக்காருவும்
குலுக்கல்முறையில் வாரம் மூன்றுபேராய்
பாடல் சமர்ப்பித்து கிடைக்கிற கேப்பில
கெடா வெட்டும் பவர்ஸ்டாரும் இருக்கும்வரை
உன் மவுசு என்றும் குறைந்திடாது…

இசையால் எம்மனம் நிறைக்க
வரமாய் வந்தவள் நீ!!!
இசைத்தென்றலே என்றென்றும்
நீ எம் உள்ளத்து அரசியே!!!

இசையுடன் கலந்த கவியாய்…
இன்று விமரிசையாக இருநூறாம் வாரத்தில்
வெற்றிநடை போடும் ஓவியமே!!!
இசைத்தென்றலின் சமர்ப்பணமாக
என் நினைவுகளால்
உன் ஓவியம் உயிராகின்றது இன்று!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: JasHaa on September 17, 2018, 08:17:24 PM

இதயத்தில் மலரும்  இன்னிசையே  .....

கருவாய்  உருவாய்  நான் ஜனித்த  என்  தாயின் கருப்பை 
உணர்த்தியது  என் முதல் இசையை ...

என் தாயின் மெல்லிய சிரிப்பொலி உணர்த்தியது இன்னிசையை....

அவளின்   நேசமாய் ஒலிக்கும் என் தந்தையுடனான    உரையாடல்  உணர்த்தியது இன்னிசையை....

அவள் கரத்தில் கொஞ்சி விளையாடும்  கண்ணாடி வலைப்பூட்டிகள்
உணர்த்தியது இன்னிசையை ....

நேசக்கரமாய்  எனை தீண்டி  பாசபடிப்பினை ஊட்டியவளின்  மௌன  மொழிகள் 
உணர்த்தியது இன்னிசையை ....

பிரசவிக்கும்  தருணத்திலும்  வலி  எனும் அரக்கனை  விரட்டி 
இசையாய் எனை இவ்வோலகம்   சேர்த்தவளே   அந்நொடி
உணர்தேன்  இன்னிசையை.....

நான் இப்பூவுலகில்  ஜனித்த நொடி....
எனை கண்டு  உன் விழிகள்  விவரித்தான ஆயிரம் ஸ்வரங்களை  ....
உணர்த்தியது இன்னிசையை....

நான் துயில நீ பாடிய  தாலாட்டு  பாடல் உணர்த்தியது இன்னிசையை .....

இத்துணை ஆண்டுகளில்  நான் கடந்து  வந்த  ஆயிரம்  இசைகளில் என் தாயின் இசையே 
எனது நெஞ்சத்தில்  காதல் எனும் தீ  பிடித்து  வேரறுக்க விடுகிறது  ....

இசையின்பால்  நான் கொண்ட  காதல் எனை விழாமல்  தாங்கி தழுவிச்செல்கிறது  ....

இசையாய் எனை இப்புவியில்  வாழ  செய்திடும்  எந்தாயின் இசை....
இன்னிசை  ...

இசையாய் என்னுடன் வாழும்  என் அன்பு  சகோதரிக்கு  எனது சமர்ப்பணம்  .....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: RishiKa on September 17, 2018, 11:51:45 PM

இதயம்...!
காதலுக்கு மட்டும் சின்னமா?

காலம் கடந்தாலும் ..
சாதல் மீறிய சாதனை சிற்பம் !

வாலிபத்தின் உணர்வுகளின்
பொக்கிஷ மேடை!

கண்கள் செய்த தவறுக்கு ..
இதயம் வாங்கும்  தண்டனை!

காதல் பெறுதல் அல்ல !
கொடுத்தல்!
அது ... இன்பமோ ..! வேதனையோ !

விடியாத இரவுகள்....
முடியாத பல்லவிகள்....
தவமாக யுகங்கள்...
வரமாக ஸ்வரங்கள்!

ஓவியமாய்  வாழ்ந்த காதல்...
ஒளி இழக்கும் சில நொடிகளில்...

உறவுக்கு அலையும் உலகில் ...
உனக்காக உறங்கா விழிகள்!

பாராத நாட்களில்...
பதைக்கின்ற காதல்...

பாழான  மெத்தையும்....
ஈரமான தலையணையுமாய்...

கனவுகள் பயிர் செய்த இடத்தில் ..
களை செடிகள் விளைந்ததே..

கண்ணீர் விட்டு வளர்த்த ..
காதல் ...இன்று...
கள்ளி பால் ஊற்றி
கொன்று விட்டது யாரோ?

போதும் இந்த வேதனைகள்..!
உடைந்த சில்லுகளாய் ...
நொறுங்கி போன இதயம்...

இனியும் அதில் வேண்டாம்..
நம் காதல் ரேகைகள் !

உன்னை தவிர ...
உலகம் இல்லை என்றேன் !
நீயோ.. உன்னை சுற்றியே ...
என் உலகம் என்றாய்..

காதல் வரம் பெற்ற என்னை..
ஏன்..
மௌன  சாபம் கொடுத்து
மெல்ல கொன்றாய்  ?

புரிந்து கொள்ள முடியா..
புது அர்த்தங்கள்..
புரையேறும்   உன் நினைவுகள்!

துன்ப கடலில் மூழ்கிய  எனக்கு..
உன் தூய அன்பே முத்துக்கள்!

உன்  பெயர் உச்சரிக்கும்..
ஒவ்வொரு  நொடியும்..
இதயம் சுவாசிப்பதை உணர்கிறேன்..

உன் பேர் சொல்லா வினாடிகளில் ..
என் உயிர் பிரிந்து விடுமோ ..
என்று அச்சப்படுகிறேன்..

உன் நினைவுகளும்..
உன்னோடான நிமிடங்களும் ..
போதும் எனக்கு..!

வரும் ஜென்மத்திலாவது..
உன் இதயத்திடம் சொல்லி வை!

என் நினைவு கல்லறையில்..
யாருக்கும் இடம் இல்லை என்று!








ஓவியம் உயிர் ஆகிறது ....
இரு நூறு ஓவியங்கள் ...
உயிர் பெற்றன நம் கவிகளால்..
எத்துணை சாதனை இது..

இந்த வாரம் பொருத்தமாய் ...
இதயம்... அதில் இசைக்கும் ராகங்கள்..

பொதுவாய்..
இதயம் என்றால்...
காதலும் ..
அதன் தாக்கங்களும்  வந்தாலும்...
இதயத்திற்கு  என்று ஒரு இசை உண்டு..!

அதன் துடிப்புகள் இசைக்கும் ...
ஒரு புதிய சிம்பொனி !

இந்த அரட்டை அரங்கில் ...
இசையில் மகிழ்விக்கவே..
அத்தனை நிகழ்ச்சிகள் !

உங்கள் விருப்பமும் ...
இசை தென்றலும் ..
நாள் எல்லாம் மனதை வருடும்
தேனிசை பாடல்களும்..
நம் இதயத்தின் ஓசைகளின்....
மறு பிரதிபலிப்பு அல்லவா!

எங்களின் இதய ராகங்களை ..
இசைக்கும் FTC யே..
உன் சேவை என்றும் தொடர...
எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: KaBaLi on September 18, 2018, 01:07:56 AM
இசையே நீ
செவிகள் சுவைத்து
இதயம் நிரம்பும்
அற்புத ஒலிரசம்...

ஆணும் பெண்ணும் பிறப்பு
இசையே ! ஆனால் நீ அணைவரின் ஓர் ஈர்ப்பு

இரவினில் கூட உன்னை பார்க்கிறேன்
இசையினை கொண்டு கவி பாடினேன்
இரவும் பகலும் ஓயாமல் தேடினேன்
உன்னை கொண்டு என் காதலை மீட்டேன்
 
மனஅமைதியின் மடம் நீயே
மண்வாசனையை உணரவைப்பது நீயே

எங்கும் நீயே எதிலும் நீயே
அழுகையிலும் உன்னை கண்டேன்
அரவணைப்பிலும் உன்னை கண்டேன்
கனவிலும் உன்னை கண்டேன்
கர்பப்பையிலும்  உன்னை கண்டேன்


வெறும் காற்றாக
துளைக்குள் நுழைந்து
இசைக்கீற்றாக வெளிவரும்
வல்லமை உண்டு உன்னிடத்தில்...

குழந்தையிடம் தாயாகவும்
தாயிடம் குழந்தையாகவும்
கடவுளிடம் பக்தனாகவும்
காதலரிடம் தூதுவாகவும்
எத்தனை பரிமாணங்கள் உன்னிடத்தில்...

மாட்டுவண்டி ஓடும் தாளத்திலும்
காளைகளின் கொம்பு மணி ஓசையிலும்
பசுக்கன்றின் நா அசைவிலும்
பிறந்து வரும் பிறவி இசை எங்கள் கிராமியத் தேனிசை...!

இரவு உன்னை நிலவாய் பார்த்திடும் போது
உன் சத்தத்தின் பெருமை
இரவாய் போனதோ !!

எவரும் இல்லாமல் என்னால் வாழமுடியும் 
ஆனால் இசையே நீ இல்லாமல் இந்தன் உலகம் இல்லையே !!

தூணிலும் துரும்பிலும் இருக்கப்பெற்றவன் இறைவன்
காற்றின் ஒலியிலும் காணக்கிடைப்பது இசை !!

ஆதியிலே ஊரறிய
சேதி சொன்ன நாதம் இது
வீதியிலே போட்டுவிட்டான்
சாதியென பெயர் எழுதி

பாறையாய் மாறிவிட்ட
சாதிய மனங்கள் எல்லாம்
சாம்பலாய் ஆகட்டும்
இந்த பறை ஒலியினிலே

இசையோடு வாழ்ந்து வரும்
எம் தமிழர் பரம்பரையில்
பறையென்று சாக்கடையில் தள்ளிவிட்ட  இந்த சமுதாயம் !!

இசைக்கு உயிர் கொடுத்த பறை இன்று பறைக்கு உயிர் கொடுக்க எவருமில்லை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: Ice Mazhai on September 18, 2018, 07:18:45 AM
எங்கிருந்து வந்தவளோ நீ ??
உன்னை பார்த்த முதல் நிமிடத்தில் பட படத்தது
என் இதயம்!!!
என் இதயம் பட படத்த சத்தம் கேட்டு
நான் உணர்ந்தேன்
என் உள் வந்த காதலை.....

நான் அவளை பார்க்கையில்
அவள் எனை
பார்த்ததையும் நான் பார்த்தேன்....

எங்கிருந்து வந்தாளோ பேசுவாளோ மாட்டாளோ
என்று ஆயிரம் கேள்விகள் என் உள்ளே.......
எத்தனை கேள்வி வந்தாலும் உன்
ஆசையை சொல் என்றது என் இதயம்..........

மறுநாள் தயக்கத்தை விட்டு
பேச துணிந்தேன் நான்....
எனக்கு காலம் முழுவதும் உன் அன்பு வேண்டும்
கொடுப்பாயா என்றேன்!!!
உடனே அவள்
நீ கொடு நான் கொடுக்கிறேன் என்றாள்!!!!!!

என் இதயத்தில் ஆயிரம் வயலின் இசை
சத்தம் கேட்டு
சொல்ல முடியாத சந்தோசம் என் உள்ளே
எங்கிருந்து வந்தாயோ நீ.... ஆனால் நீ
எனக்காக பிறந்தவள் என்று சொன்னது என் இதயம்

நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரம் சந்தோசம்
கொடுத்தவள் நீயடி
உன் கூட பேசிக்கொண்டு நீ தூங்குகையில்
உன் மூச்சு சத்தத்தை
ரசித்தவன் நானடி

ஆனால் இப்போ
சிறு சண்டைகள் பெரு சண்டைகளாகி
நாளுக்கு நாள் கொல்லாமல் கொல்லுதடி
உன் நினைவு

இதன் முடிவு தான் என்ன????
மறுபடி வருவாயா?????
ஆயிரம் கேள்விகளுடன்
உன் மூச்சு சத்தத்தை நினைத்திட்டே
தனிமையில் நான் ...........

200vathu oviyam uyiragirathu nu
ellarum eluthurankannu naanum eluthinan
jaarum thittatheenka :)
vazhthukkal FTC oviyam uyiragirathu team


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: VidhYa on September 18, 2018, 06:45:31 PM
என் இதயத்தின் இசையை - இதுவரை
நான் கேட்டதில்லை
எனினும் உன் பேச்சின் இசையை
கேட்க்காமல் இருப்பதில்லை
இளையராஜாவின் இசையைக் கூட
கேட்க்காமல் இருந்துவிடலாம்
ஆனால் , நம்  காதலிசையைக்
கேட்காமல்  இருக்க்கமுடியவில்லை
இசைக்கு நீ  அடிமை
உனக்கு  நான் அடிமை
நமக்கோ நம்  காதலடிமை

காதல்  பிசாசே பாடல்
நமக்காகவே எழுதியதுப்போல் உள்ளது
ஏனெனில் ,காதல்  நம்முள் தலைவிரித்தாடுகிறது
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
சிம்பொனி மனசுக்குள் இசைக்கிறது
கண்களில் ஆனந்தக்  கண்ணீர் வழிகிறது
பட்டாம் பூச்சிகள் உடல் முழுவதும் பறக்கிறது


நீ இசைக்கு வித்வானாய் இருப்பதில்
எனக்கு பெருமையல்ல
நீ  வித்யா வின் வித்வானாய் இருப்பதில்
எனக்கு பெருமை !
முளைக்கும் போதே  மணத்துடன் 
முளைப்பது  போல் - நானும்
பிறக்கும் போதே உன்
காதலோடு பிறந்ததேனடா ...                     


                                                                     காதல்  கவி குட்டி  வித்யா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: Dong லீ on September 19, 2018, 11:13:24 AM
(http://friendstamilmp3.net/znewfiles/all/donglee/dl1.jpg)

(http://friendstamilmp3.net/znewfiles/all/donglee/dl2.jpg)

(http://friendstamilmp3.net/znewfiles/all/donglee/dl3.jpg)

(http://friendstamilmp3.net/znewfiles/all/donglee/dl4.jpg)

(http://friendstamilmp3.net/znewfiles/all/donglee/dl5.jpg)

(http://friendstamilmp3.net/znewfiles/all/donglee/dl6.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: சாக்ரடீஸ் on September 19, 2018, 11:13:41 AM
எல்லாருக்கும்
வருடம் ஒருமுறை தான்
பிறந்த நாள் வரும்
ஆனால்
வாரம் வாரம்
பிறந்தநாள் காணும்
ஓவியம் உயிராகிறதே
நீ ஒரு அதிசய பிறவியே தான் ...

நீ
பெற்ற பலநூறு பிள்ளைகளில்
இந்த கிறுக்கணும் ஒன்று
என்பதில் எனக்கு
பெரும் மகிழ்ச்சி
இது  உங்களின்
இரு நூறுவது பிறந்தநாள்
இந்த  கொண்டாட்டத்தில்
உங்களுக்காக உங்கள்
கிறுக்கு பிள்ளை
எழுதும் கிறுக்கலே இது

இந்த வாரம்
உயிர் பெற இருக்கும்
ஓவியத்தை போல்
என் இதயத்தில் உங்களுக்காக  இயற்றிய
ஒரு ராகத்தை  எழுத்துக்களாய் கோர்த்து
ஒரு இன்னிசை கிறுக்கலாக தர இருக்கிறேன்...
 
என்னையும் கிறுக்கல்களை
கிறுக்கவைத்த
ஓவியம் உயிராகிறதே
வாழிய வாழிய வாழியவே !

இசையே !

இசை இல்லா இடம்
உண்டா  இவ்வுலகில்

இசை
இதயத்தை மென்மையாக
வருடுகையில்
இசை ஒரு மயில் இறகு  ..

இசை
ரணமான  இதயங்களின்
வலிகளை
வெல்வதில்
இசை ஒரு பேரரசன்

இதயத்துடிப்பும் இசைதான்
பூக்கள் விரிவதும் இசைதான்
தென்றல் காற்றும் இசைதான்
குழந்தையின் அழுகை இசைதான்
கொட்டும் அருவியும் இசைதான்
கால் கொலுசு சத்தமும் இசைதான்
கடல் அலைகளின் ஓசை இசைதான்
இயற்கையின் காதலி இசைதான்

இந்த
மண்ணில் பிறந்த நாள் முதல்
சுடுகாடு செல்லும் வரை
என்னோடும்
என் வாழ்க்கையோடும்
பின்னிப்பிணைந்து
என் எண்ணங்களாய் நீ
என் கற்பனைகளாய் நீ
என் எழுத்துக்களாய் நீ
நான் கிறுக்கிய கிறுக்கல்களாய் நீ
இனி
நான் எழுதப்போகும் கிறுக்கல்களாய்  நீ
என்னுள்ளே இருக்கிறாய்
என்னோடு வாழ்கிறாய் இசையே !!!

இசை என்னும் இன்பவெள்ளத்தில்
இருக்கும் இடத்திலே
என்னை அறியாமல்
தொலைந்து  போகையில்
மனதில் பேரின்பம்...

உணர்வோடும்
உடலோடும்
உயிரோடும் கலந்த
ஒரு இன்னிசை கேட்கையில்
மதிமயங்கி போகையில்
இதயத்தில் அளவில்லா சந்தோசம்

மௌனம் கொள்கிறது
என் இதயம்
நீ என் செவிகளில்
இசையாய் இசைக்கும் போது
இதுதான் மௌனராகமோ ?

மென்மையான பாடல்கள்
இளம் தென்றல் காற்று
நிலாவெளிச்சம்
மன எடை காகிதத்திற்கு இணையாய் உள்ளது
முகங்கள் தேவையில்லை
உடல்கள் தேவையில்லை
உருவங்கள் தேவையில்லை
நேசம் பொங்கும் இதயம்
வேற என்ன வேண்டும் ?
இது போன்ற மாய உலகில்
பலமணிநேரம் மெய்மறந்து இருப்பதை விட ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: Karthi on September 19, 2018, 09:15:31 PM
அம்மா... நான் கேட்ட முதல் இசை உன் தாலாட்டு
என்றும் கேற்ககிடைக்கா ஆனந்தம் உந்தன் பாசத்தில்

என் அன்பே... இயற்கையில் சிறந்த ஒன்று காற்று
அந்த காற்றினில் உந்தன் இசையை கேட்டு துடிக்கும் என் இதயம்

தனிமையில் நான்... அருகினில் நீ... உன் மூச்சுக்காற்றே எந்தன் இசை
கண்ணே... கண்ணே... உந்தன் இமைகள் அசைவிலும் கண்டேன் ஓர் இசை

வீசுகின்ற காற்றில் அசையும் மரக்கிளையில் தோன்றும் இன்னிசையே
மணக்கும் மண் வாசமும் சாரல் மழை சத்தமும் ஓர் கிராமத்து இசையே

தவிக்கின்ற உயிர்க்கு தாகம் தீர்க்கும் நீராய் வரும் காணமே

நிழல் வரும் ஓர் உருவத்திற்கு... அதைப்போல
காற்றிற்கு நிழலாய் வரும் இசையே...

காயம் கொண்ட இதயத்திற்கு மருந்தாய் வரும் ஓர் கருவியே இசை
அலைந்து திரியும் மனதிற்கு ஓர் நிலையை கொடுக்கும் இசையே...

காதல் என்னும் உணர்வுக்கு இதய துடிப்பே ஓர் இசை
உலகில் உள்ள அணைத்து உயிர்களுக்கும்  முதன்மை தாய் இசையே...
 
இன்பமோ... துன்பமோ... இசை தான் முதல் வழி அதை அனுபவிக்க
என்றும் இசையை நேசிப்போம் எதிலும் நேசிப்போம்...

- அன்புடன் YUVAN'னியன் இசை பிரியன்

200வது ஓவியம் உயிராகிறது ப்ரோகிராம்ல நானும் கலந்துகிறது மகிழ்ச்சியா
இருக்கு OU டீம் மற்றும் FTC டீம் நண்பர்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்.
குறிப்பு: ஏதோ எனக்கு தெரிஞ்சத கிறுக்கிருக்கேன் தவறு இருந்த மன்னிக்கவும்
                  regular OU கவிஞர்களே.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: பொய்கை on September 19, 2018, 10:48:41 PM
ஒரு நூறில் எழுதியதால்
இரு நூறில் எழுதுகிறேன்
முன்னூறில் எழுதினாலும்
நானூறு ஆகிடுமா ? புற
நானூறு ஆகிடுமா ?

ஆயிரங்கள்  கவி எழுத
பாயிரங்கள் வேணுமே!
ஓவியங்கள் பல கண்டு
காவியங்கள் தோணுமே!

தாய் பாடும் தமிழ் பாட்டில்
சேய் எல்லாம் தூங்குமே !
வாய் மணக்கும் இசை பாடு- உன்
நோய் கூட தீருமே  !

திரவியங்கள் அள்ளிடவே
கவிஞர்களை காணோமே!
தமிழா நம்  கவிதையிலும்
தமிழ் மறந்து போனோமே!

திசைக்கு  ஒருவராய்
திக்கெற்று நின்றாலும்
இசைக்கு நாமும்
என்றுமே கூடிடுவோம் !
இசை கேட்டு இசை கேட்டு
இங்கேயே தங்கிடுவோம் !


இருநூறாவது வாரத்தில் கவிதை எழுதும்
கவிஞர்களுக்கும் , கவிதாயினிகளுக்கும் ,இதை தொய்வின்றி
சிறப்பாக நடத்திவரும் நண்பர்கள் அரட்டை அரங்க "ஓவியம் உயிராகிறது"
பொதுமன்ற  குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: KoDi on September 20, 2018, 01:31:17 AM
               இதயம்

அவயங்கள் அனைத்திற்கும்
ஆதாரமாய்  இருக்கின்றாய்
ஆன்மாவின் உறைவிடமாய் 
ஆனந்த நடம் ஆடுகின்றாய்

அன்பின் அமைவிடமாய்
அருள்கூர்ந்து இருக்கின்றாய்
எண்ண  அலைகளை
அசைபோட்டு ரசிக்கிறாய்

இரவுபகல் பாராது
இயந்திரம்போல் சுழல்கின்றாய்
தூங்கும்போதும் விழித்திருந்து
சுகமாய் நீ  காக்கின்றாய்
 
விளையாடும் போதினிலே
ஆடி பாடி மகிழ்கின்றாய்
அவளை காணும் நொடியினிலே 
மின்னல் நீயும்  உணர்கின்றாய்

மென்பஞ்சு வார்த்தையிலே
நின் நெஞ்சு அறிகின்றாய்
என்னை  சிறையெடுக்க வந்தவளை
கைநீட்டி   அழைக்கின்றாய்
 
கடுஞ்சொல் பேச்சினிலே
கண்ணாடியாய்  உடைகிறாய்
அவள்  கண்ணீர் துளிகளிலே
கற்பூரமாய்  கரைகின்றாய்

இரகசியங்கள்  காத்திடும்
பெட்டகமாய்  இருக்கின்றாய்
காடுபோயி சேறுமட்டும்
அவளை நீயும் சுமக்கின்றாய்

காதலர் மனங்களிலே
காவியமாய் திகழ்கின்றாய்
காதலின் சின்னமாய்
காற்றில் நீயும் பறக்கின்றாய்   

சிவப்பு நிற மேனியுடன்
சிறிதாய் நீயும் சிரிக்கின்றாய்   
டிக் டிக் ஓசையுடன்
என் இதயகானம் ஒலிக்கின்றாய்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: SweeTie on September 20, 2018, 05:15:32 AM

எதிர்வீட்டு ஜன்னல் ஓரம்   
இசைக்கும் குரலொன்று கேட்டேன்
புல்லாங்குழல் கூட தோற்றுவிடும்
என் தடையை மீறியது இதயம்
ஜன்னலூடே அவன் தெரிந்தான் 

ஆறடி உயரம் அழகிய உருவம்
மன்மதன்   போல தெரிந்தானே
நான் காதலில் விழுந்தேன் அவன்மீது
கண்களை மூடி  திரும்பவும் திறந்தேன்
அவனே தெரிந்தான் கண்முன்பே 
.
இதயத்தை  ஏதோ  செய்தான்
காதலை  ரசிக்க வைத்தான்
இசையால்  என்னை கட்டியணைத்தான் 
பேதை நான்  என்னை  மறந்தேன்
அவன்  பூபாளம்  இசைக்கையிலே
 
இசை அரசே என் இளவரசே
என்னை ஆளும் இலக்கணமே
பைந்தமிழே  பண்ணிசையே
பண்பான  தமிழிசையே
காலமெல்லாம் வேண்டும் நீ
காதலுடன்  நான் கவிபாட

வாழ்த்துகிறேன்  ஓவியமே  உன்னை
உயிரூட்டும் போதெல்லாம் வாழ்த்துகிறேன்
இருநூறு வாரங்கள் கடந்தாலென்ன
ஆனாலும் என்றென்றும் குழந்தை நீ 
என் மடியில் தவழ்கின்றாய்
என்றென்றும் நீ வாழிய வாழியவே !!!
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: MysteRy on September 20, 2018, 11:56:50 AM
இசை
எங்கும் இசை எதிலும் இசை
இசைக்கு பலப்பல சக்திகள் உண்டு
இதய ரணங்களை குணமாக்கும்
வருந்தும் இதயங்களை
மயில் இறகால் வருடிவிடும்

இசையின் நாதத்தில்
பாம்பே மயங்கும் போது
பாமரன் மயங்க மாட்டானா என்ன
இறைவன் படைப்பில்
எங்கும் நிறைந்திருப்பது இசை

ஒரு தாலாட்டுக்கு
அழும் குழந்தையை தூங்கவைக்கும்
சக்தி உண்டு
ஒரு பக்திப் பாடலுக்கு
இறைவனை மனமுருக வைக்கும்
சக்தி உண்டு

இசையால் சொர்கமே நம்
காலடி சேர்கிறது
கவலைகள் காற்றாய்ப் பறக்கிறது
கனத்த நம் மனம்
கரைந்து ஊதுபத்தி மனம் போலே
மேலே செல்கிறது

இந்த உலகமே அழிந்தாலும்
இசை என்றும் அழியாது
அது என்றும் வாழும்   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: thamilan on September 20, 2018, 01:58:44 PM
இசையும் இயற்கையும் ஒன்று
வீசும் காற்றில்  அடிக்கும் அலையில்
கொட்டும் மலையில் பாயும் அருவில்
எங்கும் எதிலும் வியாபித்திருப்பது இசை

இசைக்கு மொழி இல்லை
ஆண் பெண் என்ற பேதம் இல்லை
படித்தவன் பாமரன் என்ற வித்தியாசம் இல்லை
கிழவன் குழந்தை என்ற
வயதெல்லையும் இல்லை
எல்லோரது நாடிக்கமலத்திலும் நரம்புமண்டலத்திலும்
ஊடுருவிப் பாய்வது இசை   

தனிமை கொடுமையானது
அந்தத் தனிமையையே விரும்ப வைப்பது இசை
தனிமையின்  தோழன் இசை

இசை
அன்பால் அன்னை
துயர் துடைப்பதில் தோழன்
மனதை வருடிடும் காதலி

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200
Post by: BreeZe on September 21, 2018, 03:59:26 PM
இதயத்தின் ஓசை

ஓவியம் உயிராகிறதுக்கு
இந்த வார படத்துக்கு
உயிர் கொடுக்கவா
என் உயிரை கொடுக்கவா...

என் இதயத்தை எடுத்து
படமா இங்க போட்டுட்டாங்க
படு பாவிகள் .. என் இதயம்
பாடும் ஓசை கேட்குதா
பாருங்கள்..
லேப் டாப் , லேப் டாப்..

லேப் டாப் எடுத்து
புயலா ஒரு கவிதை
எழுத தொடங்குனா
ஒரு யோசனை, நாம்தான்
தென்றல் ஆச்சே! புயலா
எப்படி எழுதுறதுன்னு..

எத்தனை காற்று அடிச்சாலும்
தென்றல் போல வருமா
உங்க மனசு சொல்றது
கேக்குது .. கேக்குது ..
என் இதயத்தின் ஓசை
லேப் டாப் .. லேப் டாப் ..

எல்லாரும் கவிதை
போட்டுப்புட்டாங்க
ஒருகவிதையும்
வரலையே ...
அய்யப்பா .. சொக்கா...
நாளு வேற நெருங்கிட்டே
இதயத்தின் ஓசை
லேப் டாப்... லேப் டாப்....

ஓவியம் உயிராகிறது
என் கவிதை ..வாசிக்கிறாங்க..
ஆஹாஆ ...
இப்போதான் தென்றலாய்..
இதயத்தின் ஓசை ..
லப் டப்.. லப் டப்.. லப் டப்