FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 05, 2022, 11:43:29 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: Forum on November 05, 2022, 11:43:29 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 299

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/299.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: Dear COMRADE on November 07, 2022, 11:28:57 AM
நானாக நானிருந்தேன்
நட்பாக நீ வந்தாய்
காலமும் நகர்ந்ததே - நம்முள்
காதலும் மலர்ந்ததே
தனிமையில் நடைபழகிய
எந்தன் கால்கள்
உன் கரம் பற்றி நடந்ததே
புதிதாய் பிறந்தவனாக....

ஆயிரம் மலர் பூங்காவில்
யாரும் பறித்திடா
உறவாடி வாசம் நுகர்ந்திடா
ஒற்றை மலர் என்னை
உந்தன் கூந்தலில் சூடி
அன்பினால் முகவரி தந்தாய்....

நாட்கள் நகரவே
இடைவெளி ஏனோ நம்மிடையே
வார்த்தைகள் மௌனிக்க
ஏக்கங்கள் எனைச் சாய்க்க
விரக்தியின் விளிம்பு எனை
வில்லங்கமாய் வம்பிழுக்க
செய்வதறியாது சண்டையிட்டேன்
அன்றுபோல் ஏனடி
பேச மறுக்கின்றாய் என
விடை இல்லா வினாக்களோடு....

மீண்டும் உனைப் பெற
வேண்டுமென்று இட்ட ஊடல்
எனை எட்டி உதைத்து
உனை தூரமாய் கொண்டு சென்று
வேடிக்கை பார்த்து
கேலி இட்டு சிரிக்கின்றதே...

தாங்கி நின்ற கரம்
தாமரை இலை மேல் நீரானதே
அருகில் இருந்தும் சேராத
தண்டவாளமாய் தான் நீளுதே...

பேசாதவரோடு கூட
நீ பேசி மகிழ்ந்தாய் - உன்
பின்னே வந்து வந்து பேசினாலும்
மறுமொழி தர மறந்தாய்...

மீண்டும்
வண்ணமில்லா வானவில் ஆனேன்
வரிகள் இல்லா காகிதம் ஆனேன்
நானும் நானின்றி ஏதோ ஆனேன்
நின் உயிர் தொலைத்த நடைபிணமானேன்...

வாடி நிற்கின்றேன் - உனது
வாசலில் கை ஏந்தி நிற்கின்றேன்
உந்தன் கரம் பற்றிட
காத்துக் கிடக்கும் காதலின் யாசகனாய்....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: VenMaThI on November 07, 2022, 11:32:58 AM

இந்த உலகினை வெல்ல
இரு கைகள் வேண்டுமாம்
முகத்தில் புன்ன கை யும்
அகத்தில் நம்பிக் கை யும்

ஆனால்
இந்த உலகை நான் வெல்ல
உன் கை போதும் எனக்கு

அம்மாவின் அரவணைப்பும்
அப்பாவின் பாதுகாப்பும்
உணர்ந்தேன் உன் விரலின் ஸ்பரிசத்தில்

உன் கைகளை கோர்த்த நொடி
உணர்ந்தேன் என் அன்பே
உன் மனம் மட்டுமல்ல
கைகளும் காதல் மழை பொழியும் என்று

உன் விரல் தொட்ட நொடி - என்
உள்ளத்தில் ஒரு வலி
வலியும் சுகமென்று
அந்த நொடி உணர்ந்தேன்

பகலெல்லாம் இரவாகி போனாலும்
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலும்
என் விரல் இடுக்குகள் உன் காதலை உணரட்டும்
கை ரேகை கூட அழியட்டும்

தாய் மடி தேடும் பிள்ளையாய்
கரை நோக்கி பாயும் அலையாய்
என்றும் உன் கைகளை தேடும் என் இதயம்

விட்டு விடாதே அன்பே என்றும்..
அந்த விரக்தியை தாங்கும் வரம்
கிட்டவில்லை இன்றும்...

இப்படியே
உன் விரல் இடுக்கில்
என் விரல் கோர்த்து

கால் நோக நடக்க ஆசை
பாதை முடியும் வரை அல்ல..
என் வாழ்நாள் முடியும் வரை
என் உள்ளத்தில் மட்டுமல்ல
உணர்வுகளும் நீ
என்  உறவாக மட்டுமல்ல
உயிராகவும் நீ.....



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: thamilan on November 07, 2022, 05:17:19 PM

அன்பே
காதல் நமது மனதை தொட்டதை
உன் விரல் என் விரல் தொட்டபோது
உணர்ந்து கொண்டேன்
உன் விரல் பற்றியதும்
என் மனம்
ஏதேதோ சொல்லியது


உன் விரலை என்விரல் பற்றியபோது
அந்த பஞ்சு விரல்
நீ எத்தனை மென்மையானவள் என
எனது மனதுக்கு உணர்த்தியது 

சிறுவயதில்
அன்னையின் விரல் பற்றி
அவள் கூட நடந்திருப்பாய்
இனி
என்றும் உனக்கு துணை நான்தான்
என்று சொல்லியது

இது
வெறும் ஒத்திகை தான்
உன் கையால் என்கழுத்தில்
தாலி ஏறியதும்
உன்விரல் பற்றி
அக்கினியை சுற்றி வலம் வருவோமே
என்று சொல்லாமல் சொல்லியது

உன்
இதயத்தின் காதலை மட்டுமல்ல   
உன்விரல் என்விரல் பற்றியபோது
உன் இதயம் என்பெயர் மூச்சுக்காற்றாய்
சுவாசிப்பதையும் உணர்த்தியதே

உன் விரல் அசைவில்
என் வாழ்க்கையே
வழிநடக்க போகிறது என்பதை
உன் விரல் என்விரல் பற்றி
எனக்கு உணர்த்தியது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: Ninja on November 08, 2022, 12:44:15 AM
பருவத்தின் முதல் மழை நாளில்
உன் கைப்பற்றி அமர்ந்திருந்த
நெடுமரத்தின் நிழலின் கீழ்
சிதறியிருந்த நினைவுகளை
சேகரித்து நின்றிருந்தேன்.
முதல் முறை உன் கைகளை பற்றியபொழுது
உன் உள்ளங்கையின் வியர்வை
பிசுபிசுப்பின் மணம்
இன்னமும் மிச்சமிருக்கிறதா
என கைகளை விரித்து முகர்ந்து பார்க்கின்றேன்

எனக்கொன்றும் சாலையை கடக்கத்
தெரியாமலில்லை.
எத்தனையோ சாலைகளை
நீ இல்லாமல் கடந்திருக்கிறேன்,
கடந்துகொண்டும் இருக்கின்றேன்
உன் கரம் பற்றி கடந்த சாலை மட்டும்
மிக மிக நீளமானதொரு சாலையாக
இருந்திருந்தது

ஒரு முறை என்னிடம் வினவினாய்
உன்னிடம் பிடித்தது எதுவென்று
உன் இரு கைகளையும் பற்றி
என் முகத்தை உன் கைகளில் பொதிந்து கொண்டு
உன் கைகள் தான் எனக்கு பிடித்தவை
என கூறினேன்,
எவ்வளவு தொலைவிலிருந்தாலும்
உன் கைகள் அளித்த ஆதூரத்தை
எதிலும் நான் காணவில்லை இன்னமும்.

அனிச்சையாய் கோர்த்து கொள்ளும் விரல்கள் பேசாத நொடிகளின்
மௌனத்தை நிரப்பியபடியே இருந்திருக்கிறது தானே.
விடைபெறும் நோக்கத்தில் என் விரல்கள் பிரிய பிரிய
இன்னும் இன்னுமென கைகளை இறுக்கி வலிமை காட்டுவது உனக்கொரு விளையாட்டு.
விடுபடுவது போல் கைகளை விலக்கி
மீண்டும் இறுக கோர்த்துக் கொண்டு
பிரியும் நிர்பந்தத்தை
நான் சபித்துக் கொள்வேன்.

ஏன் உன்னுடன் கைகளை கோர்த்துக் கொண்டு
நடப்பது போன்ற கனவுகள் வருகின்றன?
எவ்வளவு தூரங்களுக்கு அப்பால் நீயிருக்கிறாய்?
நீ இருக்கிறாய் என்பதை கூட
அறிய முடியாத தூரத்தில்
நான் இருக்கிறேன்.

அத்தனை கனவுகளும் ஒன்று சேர்ந்து
மீப்பெரும் சித்திரமாய் நிற்கிறது.
சித்திரத்தின் ஒளியென உன் கண்கள் மிளிர்கிறது.
முடியாமல் நீளும் அக்கனவில்
மீண்டுமொரு முறை
ஆதூரமாய்
உன் கரங்களை பற்றிக் கொள்கிறேன்

இனியொரு முறை உன் கரம் கோர்க்க போவதில்லை என்று தெரிந்தே தான்
கைகளை கோர்த்திருந்தபடி அந்த புகைப்படத்தை எடுத்து கொண்டோமோ?
தெரிந்திருந்தால் அந்த
கடைசி சந்திப்பில்
உன் கைகளைப் பற்றி,
கடக்க முடியாத எல்லா சாலைகளையும்
மீண்டும் ஒரு முறை கடந்திருப்பேன்.


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: ! Viper ! on November 08, 2022, 12:04:48 PM
ஓர் உலகில் திக்கு திசை அறியாமல்
இரவும் பகலும் ஒரே வண்ணமாய் நகர்ந்திருக்க
கைகளை வீசியபடி வாழ்க்கையை நோக்கி காரணமின்றி இழுத்திட
பாதைகளில் வளைவு சுழிவு தெரியாமல் நடந்திட
எங்கே கொண்டு செல்கிறது இந்த பயணம்
என அறியாமல் நின்ற நான்

மழை நேரங்களில் திடீரென மேகம் பிளந்து
சூரிய ஒளி பிரகாசிக்கும் வானமாய்
அவள் வருகை என் உலகிற்கு புதியதொரு ஒளியை வீசியது
பட்டு போயிருந்த என் உலகிற்கு ஒளியின் வழி விழுந்த
அம்மழை துளிகள் என்னை நிமிர்ந்து பார்க்க செய்தது.


அவளது வருகை எனது வாழ்க்கையின் தொடக்கமாய் பயணித்தது
முதல் முறை அவளுடன் கோர்த்த கையை,
அவள் கைக்குட்டைக்குள் என் கையை வைத்து
அந்த நிமிடம் பார்த்த அவளின் கண்கள்
வாழ்க்கையின் பிடியாய் உணரசெய்தது.

ஒவ்வொரு முறையும் அவள் என் கைகளை இறுக்க இறுக்க
இந்த உறவும் இறுக்கமாய் ஆனது
இனி இவள் கரங்களின்றி என் கரங்கள் தனியே பயணிப்பதில்லை
அவளுடன் அப்படி தொடங்கிய பயணம்
வாழ்க்கையில் அனைத்தையும் இன்பமாய் வண்ணமாய்
அவள் உலகிற்கு ஆழமாய் என்னை அழைத்தது

அவளின் சிரிப்பு என் இதயத்துடிப்பாய் இருந்தது
அவளின் பேச்சு என் சுவாசமாய் இருந்தது
அவளின் அரவணைப்பு என் உலகமாய் இருந்தது
அவளின் அன்பே என் உயிராய் இருந்தது


காலங்களும் கடந்தது,
இறுக இறுக கைகள் கோர்த்து அன்பின் உச்சத்தில் பயணத்திருந்தேன்
ஒரு நாள் என் உலகமும் தகர்ந்து வீழ்ந்தது
எங்கேசென்றாள் அவள்?
என் உலகை வண்ணமயமாயாக்கி விட்டு
எங்கே சென்றாள் அவள்?
தனியே பயணிப்பதில்லை என கோர்த்திருந்த கரங்களில் இருந்து
விடுபட்டு
எங்கே சென்றாள் அவள்?
அவளுடன் நான் கைகளை கோர்த்து நடந்திருந்த பாதைகளில்
காலடித் தடங்களாய் அவளின் நினைவுகள் மட்டும்
இன்னும் மிச்ச மிருக்கிறது.
இருப்பினும் அவள் வருவாள்என்று அந்த தடங்களில்
கண்ணீருடன் காத்திருந்தேன்.
அவள் கரம் பிடிக்க இனி வரமாட்டாள்
என்று அறிந்திருந்தும் காத்திருந்தேன்.
மீண்டுமொருமுறை அவளின் காலடி தடங்களை
தேடி பயணிக்கும் ஒரு உன்னத காதலனாய்
காத்திருந்தேன்…
]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: Sun FloweR on November 09, 2022, 01:18:08 AM
மனமெல்லாம் ரணமாகிக் கிடக்கிறது..
கண்கள் இரண்டும் குளமாகிக் கிடக்கிறது..
உயிர் பிரிந்த வெற்றுடலாய் உள்ளம்
சிதைந்து கிடக்கிறது..

எப்படி துணிந்தாய் இன்னொரு
கரம் பற்றி நடந்திட?
எப்படி அனுமதித்தாய் இன்னொரு விரலை
உன் விரலோடு கோர்த்திட?

இதே கைகள் தானே என்னை
அணைத்துக்கொண்டது?
இதே விரல்கள் தானே என்
கண்ணீர் துடைத்தது?
இதே கரங்கள் தானே என்
தலைகோதி நான் இருக்கிறேன் என்றது..?

நம்பிக்கையின் விதையை
என்னுள் விதைத்துவிட்டு
வேரிலே வெந்நீரை பாய்ச்சுகிறாய்..
ஆறுதலாய் ஒற்றைக் கையில்
அணைத்துக் கொண்டு மற்றொரு கையால்
வாள் கொண்டு குத்துகிறாய் முதுகில்...

கடைசியாக என்னுள் மிச்சம் இருந்த
புன்னகையையும் பறித்துக் கொண்டு
காலமெல்லாம் கண்ணீரில் நீந்திக்
கொள் என்கிறாய்...

காலத்தின் மேல் பழி சுமத்தும்
சாதாரண மனிதனாய் நீயும் ஆகிவிட்டாய்..
உறவுகளின் மேல் பாரத்தை சுமத்தி
உத்தமனாய் உன்னை காட்டிக் கொண்டாய்...

வேறு ஒருத்தியின் கைபற்றிய காட்சியை எனக்கு காட்டிய கடவுள், என் பக்கம் இருப்பதை
உணர்ந்து பூரிப்பதா?
என்னை மறந்து,
மாற்றாளின் விரல்பிடித்த
உன்னை  நினைத்து வெறுப்பதா?

பேரன்பின் முழுமை என்பது
பிரியமானவரின் நலமும், நன்மையும்
விரும்புவதே...
என் பிரியமானவனே நீ எங்கிருந்தாலும்
நலமுடன் வாழ்க.......💔💔💔💔💔💔
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: SweeTie on November 09, 2022, 08:52:26 PM
தூரங்கள்  தெரியாது   அவன் கையேடு கைகோர்த்து 
காலங்கள்  கடக்க வேண்டுமென்று   வண்ணக்
கோலங்கள்  வரைந்தாள்   அவள்

நித்தமும் அவன் நினைவு  நெஞ்சினிலே   இனிக்க
வெட்கத்தில்  நாணிக்கோணி  நின்றாள்  முகம்  சிவக்க 
 அறுவடைக்கு காத்து நிற்கும் நெற் பயிர்போல்.

மின்வெட்டும் அவள்  சிரிப்பு  மொத்தமாய் வேண்டுமென
கண் வெட்ட மறந்து   காத்திருந்தான் ; அவள்
 நினைவுகளை நெஞ்சில் சுமந்து

கைத்தொலைபேசிகளின்    கிசுகிசுப்பின்    நெருடல்களும் 
ஒரு கோப்பை தேநீரை  மாறிமாறி சுவைக்கும்  காட்சிகளும்
மனத்திரையில்   தினமும்  குறும்படமாய்  ஓடும்
 
தினமும்   பரிமாறும்  சாப்பிட்டியா   எப்பிடி இருக்கிறாய்   எனும் கேள்விகள்
தூரத்தே  இருந்தாலும்    கைகோர்த்து  நடப்பதுபோல் 
பிரமையில்  வாழ்கின்ற  கைப்பொம்மை இவர்கள்

காத்து கிடக்கிறது  காலம்  என்றெண்ணும்போது   ‘
தாளமுடியாத  ஏக்கங்கள்   நெஞ்சினிலே அலைபாய 
காதல்   கனக்கிறது  என்றாலும்  அதிலும் ஒரு இனிமை!

சித்திரை வெயிலில்  பிசுபிசுக்கும்  வியர்வை  கொட்டிக்கிடக்க
அவள்  விரல்களின்   தழுவலில்   பாயும்  மின்சார  அதிர்வுகளை
தாக்குப்பிடிக்கமுடியாது  தவிக்கிறது அவன் உணர்வு     

பள்ளியில்  வந்த  மோதல்   காதலாகி  இன்று   மரமாகி   
கிள்ளியெறிய   முடியாது   என்றாகி  நின்றாலும்  அடிக்கடி வருகிறது
இது நிஜமா  இல்லை   நிழலா  என்னும் மனப்பிராந்தி

கைகோர்த்து   காலாற   நடந்த காதல்   அன்று;:  காலம்கடந்து 
கைத்தொலைபேசியில்  அடைக்கப்பட்டு    அல்லும் பகலும்
கைதியைப்போல்  சட்டைப்பைகளில் வாழ்கிறது இன்று 

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 299
Post by: Hirish on November 09, 2022, 09:06:12 PM
இந்த கவிதை என் இனியவளுக்கே

சுவாசமாய் என்னுள் வாழ்பவளே
உன் முகம் பார்த்த மொட்டுக்கள் பூவாக மலர்ந்திடுமே..
மலர் கூட ஒற்றைகக்காலில் நிற்கிறதே உன் கூந்தலில் உட்கார
வானத்து விண்மீன்கள் உன்னை பார்க்க விழித்திருக்கும்
உன் அழகில் கண்களே இமைக்க மறந்திடுமே
உன் பாதம் பட மண் கூட தவமிருக்கும்
உன்னை பார்த்தால் நிலவும் வெட்கத்தில் மறைந்திடுமே
உன் தீப்பொறி பார்வையால் பனிமலையும் உருகிடுமே
தரணியிலே உலா வரும் அழகிய சிற்பமே
பூமாதேவிக்கே நன்றி சொல்வேன் உன்னை என் கண் முன் காட்டியதற்காக
உன் நினைவில்லா நாட்களும் இல்லை
என்னவள் இன்றி இயக்கமும் இல்லை
மெழுகாய் உருகி மெதுவாய் கடக்கிறேன் உன் நினைவோடு
என் விழி உறங்கினாலும்
உன் கை கோர்க்கும் நொடியை எண்ணி என் இதயம் உறங்காது
என் இனியவளே….. இப்படிக்கு உன் இனியவன் கிருஷ்…..