Author Topic: சாஹி மஸ்ரூம்  (Read 447 times)

Offline kanmani

சாஹி மஸ்ரூம்
« on: December 20, 2012, 11:04:53 AM »
தேவையான பொருட்கள்:

 காளான் - 200 கிராம் வெங்காயம் - 4 (நறுக்கியது) தக்காளி - 5 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் ப்ரஷ் க்ரீம் - 1 கப் முந்திரி - 1/2 கப் (அரைத்தது) நெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது

 செய்முறை:

 முதலில் காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்தது, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, ஒரு பௌலில் போட்டுக் கொண்டு, குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இந்த பேஸ்ட் போட்டு, 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், முந்திரி பேஸ்ட், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் நறுக்கி வைத்துள்ள காளானை அந்த கிரேவியில் போட்டு, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

 காளான் வெந்ததும், அதில் ப்ரஷ் க்ரீமை சேர்த்து, 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான சாஹி மஸ்ரூம் ரெடி!!!

 இதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறலாம். அதிலும் இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.