Author Topic: மின்னியல் மின்னணுவியல்  (Read 5505 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #15 on: March 15, 2012, 04:27:50 AM »
NAND GATE - இல்-உம்மை வாயில்

NAVIGATIONAL AID (=NAVAID) - வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி

NEAR-FIELD REGION - அருகுபுல மண்டலம்

NETWORK - பிணையம்

NETWORK ANALYSIS - பிணையப் பகுப்பாய்வு

NEUTRON - நொதுமின்னி

NIBBLE - நாலெண்

NICKEL - வன்வெள்ளி

NO LOAD CHARECTERISTIC - சுமையில் சிறப்பியல்பு

NO LOAD CURRENT - சுமையிலோட்டம்

NODE - கணு

NOISE - இரைச்சல்

NOISE FIGURE, NOISE FACTOR - இரைச்சல் அளவெண், இரைச்சல் காரணி - ஒரு செயல்படு சாதனத்தின் வெப்ப இரைச்சல் அளிப்பு தனது வெளியீட்டில் குறிப்பிடும் அளவு; உண்மை மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல்/கருதியல் மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல் என்ற விகிதம், dB அளவில்

NOISE RESISTANCE - இரைச்சல் மின்தடை

NOISE SUPPRESSION - இரைச்சல் நீக்கம்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #16 on: March 15, 2012, 04:32:27 AM »
OBJECTIVE LENS - பொருள்நோக்கு வில்லை

OBSERVER - நோக்காளன்

OBLIQUE - சாய்வான

OCTET (= BYTE) - எண்ணெண்

OMNIDIRECTIONAL ANTENNA - சமதிசை அலைக்கம்பம் - எல்லா திசைகளிலும் சமமாக மின்காந்த ஆற்றலை கதிர்வீசும் கருதியல் அலைக்கம்பம்

OPEN CIRCUIT - திறந்த மின்சுற்று, திறந்த மின்பாதை

OPEN LOOP GAIN - திறந்த வளையப் பெருக்கம்

OPERATING RANGE - இயக்க நெடுக்கம்

OPERATIONAL AMPLIFIER (OP-AMP) - செயல்படு மிகைப்பி (செய்மிகைப்பி)

OR GATE - அல்லது வாயில்

ORBIT - சுற்றுப்பாதை

ORIENTATION - திசையமைவு

OSCILLATION - அலைவு

OSCILLOSCOPE - அலை(வு)நோக்கி

OVERFLOW - வழிவு

OVERSHOOT - மேல்பாய்வு

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #17 on: March 15, 2012, 04:50:22 AM »
PANAROMIC - அகலப் பரப்பு

PARABOLIC REFLECTOR - பரவளைய எதிரொலிப்பி

PARALLAX - இடமாறு தோற்றம்

PARALLEL CONNCETION - பக்க இணைப்பு

PARALLELLOGRAM - இணைகரம்

PARA-MAGNET - இணைக்காந்தம்

PARAMETER - கூறளவு

PARASITIC ANTENNA - போலி அலைக்கம்பம்

PARASITIC CAPACITANCE - போலி மின்தேக்கம், போலி மின்கொண்மம்

PARASITIC INDUCTANCE - போலி மின்தூண்டம்

PARASITIC IMPEDENCE - போலி மின் மறுப்பு

PARITY BIT - சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை, பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின், அவைகளை நீக்கவும் இயல்கின்றன

PARITY CHECK - சமநிலை சரிபார்ப்பு

PASS BAND - கடத்துப் பட்டை

PASSIVE LOAD - உயிர்ப்பில் சுமை, உயிர்பற்றச் சுமை

PATCH CORD - எளிதிணைப்பு வடம்

PEER - ஒப்பி

PEER-PEER TRANSFER - ஒப்பி-ஒப்பி பரிமாற்றம்

PENTODE - ஐம்முனையம்

PERIODIC TABLE - தனிம அட்டவணை

PERIPHERAL COMPONENT INTERCONNECT (PCI) - புறக்கருவி இணைமுகம்

PERMEABILITY - காந்த உட்புகு திறன்

PERMITTIVITY - மின் தற்கோள் திறன்

PERMUTATION, PERMUTATION GROUP - வரிசைமாற்றம், வரிசைமாற்றக் குலம்

PHASE (ANGULAR) - கட்டம்

PHASE (EG. 3-PHASE CIRCUIT) - தறுவாய்

PHASED ARRAY RADAR - கட்டஅணி கதிரலைக் கும்பா

PHASE LOCKED LOOP (PLL) - கட்டமடைவு வளையம்

PHASE SHIFT KEYING (PSK) - கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு அலைக்கட்டங்களாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை

PHOSPHOROUS - தீமுறி, பிரகாசிதம்

PHOTON - ஒளித்துகள்

PHOTOSPHERE - ஒளிமண்டலம்

PICTURE TUBE - படக் குழாய்

PICK-UP - அலையெடுப்பி

PIEZO-ELECTRIC CRYSTAL - அமுக்கமின் பளிங்கு

PLACE AND ROUTE - இடவமைவு-திசைவு

PLACEMENT - இடவமைவு

PLANE POLARIZED WAVE - தள முனைவாக்கப்பட்ட அலை

PLASMA - மின்மம்

PLATINUM - வெண்தங்கம்

PLOTTER - வரைவி

PLUG - செருகி

PLUTONIUM - அயலாம்

POLE (NORTH/SOUTH) - முனை

POLE (OF A TRANSFER FUNCTION) - முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்

POLAR AXES - துருவ அச்சுக்கள், முனையச்சுக்கள்

POLAR COORDINATES - துருவ ஆயங்கள், முனை ஆயங்கள்

POLARIMETER - முனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம்

POLARITY (POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) - கதிர்வு

POLARIZER, POLAROID - முனைவாக்கி - முனைவாக்கமற்ற ஒளி அல்லது மின்காந்த அலையை முனைவாக்கப்பட்ட ஒளி அல்லது மின்காந்த அலையாக மாற்றும் கண்ணாடி உட்பொருள்


POWER PLANE - திறன் தளம்

POWER SPECTRUM - திறனிறமாலை

POWER SPECTRAL DENSITY - திறனிறமாலை அடர்வு - ஒரு குறிகையின் திறன் பரவல், அலைவெண்ணின் சார்பாக; இதன் மதிப்பு அக்குறிகையின் தன்னொட்டுறவின் ஃபுரியர் உருமாற்ற வீச்சளவின் இருபடியாகும் (square of magnitude of auto-correlation)

PROBE - தேட்டி

PRISM - அரியம், பட்டகம்

PROBABILITY - நிகழ்தகவு

PROBABILITY DENSITY FUNCTION - நிகழ்தகவு அடர்சார்பு

PROGRAMMER - நிரலி (DEVICE), நிரலர் (PERSON)

PROGRAMMABLE LOGIC DEVICE - நிரல்படு தருக்கக் கருவி

PROPOGATION - பரப்புகை

PROTON - நேர்முன்னி

PULSE AMPLIFIER - துடிப்பு மிகைப்பி

PULSE CODE MODULATION - துடிப்பு சங்கேத பண்பேற்றம் - நிகழ்நேர (real-time) தரவுகளை இணைநிலை இலக்கமாக்கி (parallelized digital) செலுத்துதல்

PULSE COUNTER - துடிப்பு எண்ணி

PULSE GENERATOR - துடிப்பாக்கி

PULSE SHAPER - துடிப்பு உருமாற்றி

PULSE TRANSFORMER - துடிப்பு மின்மாற்றி

PUMP - எக்கி

PYRAMID - கூம்பகம்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #18 on: March 15, 2012, 04:53:32 AM »
Q (QUALITY) FACTOR - தரக் காரணி

QUADRATURE PHASE SHIFT KEYING (QPSK) - பரப்புக்காண் கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சு மற்றும் அலைக்கட்டம் சேர்வாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை

QUADRILATERAL - நாற்கரம்

QUANTIZATION - சொட்டாக்கம் - தொடர்ச்சியுள்ள அளவுக் கணத்தை தனித்த அளவுக் கணமாக தோராயப்படுத்தி மாற்றுத்துதல்ல்; உதாரணமாக ஒரு ஒப்புமைக் குறிகையை ஒரு குறிப்பிட்ட படிநிலைகளில் இலக்கப்படுத்துதல்

QUANTIZATION LEVEL - சொட்டாக்க படிநிலை

QUANTIZER - சொட்டாக்கி

QUANTUM - துளிமம்

QUARTER WAVE ANTENNA - கால் அலைக்கம்பம்

QUARTZ - பளிங்கு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #19 on: March 15, 2012, 05:03:10 AM »
RADAR - கதிரலைக் கும்பா

RADIAN - ஆரகம்

RADIATION PATTERN - கதிர்வீச்சு உருபடிவம்

RADIATOR - கதிர்வீசி

RADIO ACTIVITY - கதிரியக்கம்

RADIO BEACON - வழிக்காணலை - விமானம் வழிகாணலுக்கான தரையமைந்த செலுத்தி எல்லா திசைகளிலும் கதிர்வீசும் வானலை

RADIO BEACON (TRANSMITTER) - வழிகாணலை செலுத்தி

RADIO CHANNEL - வானலைத் அலைவரிசை

RADIUM - கருகன் - உற்பத்தியாகுபோது வெள்ளி நிறமாகவும், காற்றில் பட்டதும் உடனே கருக்கும் கதிரியக்க உலோகம்

RADIUS - ஆரம்

RADON - ஆரகன்

RANDOM VARIABLE - சமவாய்ப்பு மாறி

RATING - செயல்வரம்பு

REACTANCE - எதிர்வினைப்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் எதிர்க்கும் தன்மை; மின்தூண்டியில் jwL மற்றும் மின்தேக்கியில் 1/jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது

REACTIVE COMPONENT - எதிர்வினை உறுப்பு

RECIPROCAL, RECIPROCITY - ஏற்றெதிர், ஏற்றெதிர்மை

RECONFIGURATION - மீள்உள்ளமைவு

RECTIFIER - (மின்)திருத்தி

RECEIVER - பெறுவி

REFLEX KLYSTRON OSCILLATOR - எதிர்வினை மின் கற்றையலைவி/கற்றையலைப்பி

REFRACT - திரிபுறு

REFRACTION - ஒளித்திரிபு

REFRACTIVE INDEX - ஒளித்திரிபுக் கெழு

REFLECTION (LIGHT, IMAGES) - எதிரொளி

REFLECTION (ELECTRIC SIGNALS) - எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்

RELATIVE MOTION - சார்பியக்கம்

RELATIVITY THEORY - சார்பியல் கோட்பாடு

RELAY - அஞ்சல் சுருள்

RESET - மீளமை, மீளமைவு

RESISTANCE - தடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது

RESOLUTION - பிரித்திறண்

RESONANCE - ஒத்திசை

RESONATOR - ஒத்திசைவி

RETRACE - மீள்வரைவு - ஒரு பரவல் காட்சியில் (rastor display) மின்னி கற்றை திரையின் விளிம்பை எட்டியதும் விரைவாக அதன் துவங்கிடத்திற்கு வரைவாக பின் செல்லுதல்; கிடை மீள்வரைவு (horizontal retrace), நெடு மீள்வரைவு (vertical retrace) என வகைப்படுகிறது

REVERSE BIAS - பின்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) குறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை நிறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் தடையம் ஏற்படும்

REVOLUTION - சுற்று

RF (RADIO FREQUENCY) - வானொலி அலை, வானலை

RF ENGINEERING - வானலையியல்

RF FREQUENCY - வானலைவெண்

RF GROUND - வானலை நிலம்

RHEOSTAT - தடைமாற்றி

RHOMBUS - சாய்வுசதுரம்

RIPPLE - குறுவலை - மாறுதிசையை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றும்போது, திகழும் மாறுதிசையோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகள்

RISE TIME - எழுநேரம்

RISING EDGE - எழுவிளிம்பு

ROTATION - சுழற்சி

ROTOR - சுற்றகம்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #20 on: March 15, 2012, 05:22:39 AM »
SAMPLE - மாதிரி

SAMPLING - மாதிரி எடுத்தல்

SAMPLING RATE, SAMPLING FREQUENCY - மாதிரி வீதம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாதிரியெடுப்பின் எண்ணிக்கை

SAMPLING THEOREM - மாதிரி எடுப்புத் தேற்றம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிகையின் (கருதியலான) இழப்பின்றி மறுமீட்பிற்கு குறைந்தபட்ச மாதிரி வீதம் அக்குறிகையின் அதிக அலைவெண்ணின் இருபடியாவது இருத்தல் வேண்டிய நிபந்தனை

SANDPAPER - மண்காகிதம்

SATURATION - தெவிட்டு நிலை

SATELLITE - செயற்கைக் கோள்

SCANNER - வருடி

SCATTERING PARAMETERS (S-PARAMETERS) - சிதறல் பண்பளவுகள் - ஒரு பலதுறை பிணையத்திற்கு (multi-port network) வழங்கும் அளிப்பு திறனின் எதிரொளிப்பு/பரப்புகை பண்புகளை (reflected/transmission charecteristics of power applied) விவரிக்கும் பண்பளவுகள்; இது அணியாக (matrix) வகைக்குறிக்கப்படுகிறது

SCRAMBLING - கலரீடு

SENSOR - உணரி

SERDES - இயைப்பி

SERIES CONNECTION - தொடர்நிலை இணைப்பு

SERVER - வழங்கி

SET - கணம்

SET TOP BOX - மேலமர்வுப் பெட்டி - மறையிடப்பட்ட வடம் அல்லது செயற்கைக்கோள் குறிகைகளை தொலைக்காட்சியில் பெற இயலும் சாதனம்

SHORT CIRCUIT - குறுக்கு மின்பாதை, குறுக்கிணைப்பு

SHORT CIRCUIT (FAULT, ACCIDENT) - மின்கசிவு

SHOT NOISE - மாது இரைச்சல் - ஒரு முடிவுறு எண்ணிக்கை துகள், எ.டு. கடத்திகளில் மின்னிகள், அல்லது ஒளியின் துளிமங்கள் ஆற்றலை ஏற்றிச்செல்லும்போது ஏற்படும் இரைச்சல்; இது அளவையில் புள்ளியியல் ஏற்றிறக்கங்களை அளிக்கிறது.

SIDE BAND - பக்கப்பட்டை - ஒரு சுமைப்பி குறிகையின் பண்பேற்றத்தால் சுமைப்பியின் அலைவெண்ணிற்கு இருபுறமும் உருவாகும் அலைவெண் பட்டைகள்--இவைகளில் ஒன்று

SIGNAL - குறிகை

SIGNAL INTEGRITY - குறிகை மெய்மை

SILICON - மண்ணியம்

SIMULATION - பாவனை

SIMULATOR - பாவிப்பி

SINGLE PHASE - ஒற்றைத் தறுவாய்


SINGLE SIDE BAND (SSB) MODULATION - ஒருபக்கப்பட்டைப் பண்பேற்றம் - வீச்சுப் பண்பேற்றத்தில் இரண்டில் ஒரு பக்கப்பட்டை நீக்கப்பட்ட வீச்சு பண்பேற்றம்; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது

SINGLE-STUB (IMPEDENCE) MATCHING - ஒருமுளை (மின் மறுப்பு) பொறுத்தம்

SKEW - இடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு

SKIN EFFECT - பரிதி விளைவு - உயர் மாறுதிசை அலைவெண்களில், மின்னோட்டம் ஒரு கடத்தியின் மேல்பரப்பில் மட்டும் கட்டுப்படுதல்

SKYSCRAPER - வானளாவி

SKYWAVE - விண்ணலை

SOCKET - பொறுந்துவாய்

SODIUM - உவர்மம்

SOLID ANGLE - திண்மக் கோணம்

SOLDER FLUX - சூட்டிணை மெழுகு

SOLDER IRON - சூட்டிணைக் கோல்

SOLDER LEAD - சூட்டிணை உருகுகம்பி

SONAR - ஊடொலிக் கும்பா

SOUND CARD - ஒலி அட்டை

SOURCE CODE - மூலக் குறியீடு

SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி

SPECTROMETER - நிறமாலைமானி

SPECTRUM ANALYZER - நிறமாலைப் பகுப்பி

SPHERE - கோளம்

SPREAD SPECTRUM - பரவல் நிறமாலை

SPREADSHEET - விரிவுத்தாள்

STABILITY - நிலைப்புத்தன்மை

STABILITY CONDITION - நிலைப்பு நிபந்தனை - ஒரு முறைமையின் நிலைப்பை உறுதிபடுத்த அதன் மாற்றுச்சார்பின் கதிர்களின் (poles) இருப்பிடத்தை (குறிப்பாக s-தளத்தின் வலது பாதியில் அமைவது) நிர்ணயிக்கும் நிபந்தனை

STANDING WAVE - நிலையலை

STANDING WAVE RATIO (SWR)- நிலையலை (மின்னழுத்த) விகிதம்; காண்க VOLTAGE STANDING WAVE RATIO

STATIC ELECTRICITY - நிலைமின்சாரம் - ஒரு மின்காக்கும் பொருளில் சேரக்ரிக்கப்படும் மின்னூட்டம்

STOP BAND - தடைப் பட்டை

STRAIN - திரிபு, விகாரம்

STREAM (OF BITS, DATA ETC.) - தாரை

STRESS - தகைவு

STRIPLINE - கீற்றுத்தடம் - மின்சுற்றுப் பலகைகளில் உள்ளடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள்

STUB - முளை - ஒரு குறிப்பிட்ட நீளத்திலுள்ள திறந்த அல்லது குறுக்கிணைந்த (short-circuited) பரப்புத் தடம்

SUBSYSTEM - துணைமுறைமை, துணையமைப்பு

SUPERPOSITION THEOREM - மேல்படி தேற்றம் - ஒரு நேரியல் அமைப்பில் பல உள்ளீடுகளின் உடன்பாடாக ஏற்படும் வெளியீடு, அவைகளின் தனித்தனியாக ஏற்படும் வெளியீடுகளின் கூட்டுத்தொகைக்கு சமம்

SUPPLY VOLTAGE - வழங்கல் மின்னழுத்தம்

SURGE - எழுச்சி

SURFACE MOUNT COMPONENT - மேல்பரப்பு உறுப்பு - மின்சுற்றுப் பலகைகளில் மேல்புறத்தில் பிணைக்கப்பட்ட உறுப்பு

SUSCEPTANCE - ஏற்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மின்தூண்டியில் 1/jwL மற்றும் மின்தேக்கியில் jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது

SWITCH, SWITCHING - நிலைமாற்றி, நிலைமாற்றம்

SWITCHER, SWITCHING REGULATOR - நிலைமாற்றுச் சீர்ப்படுத்தி

SYNCHRONIZATION - ஒத்தியக்கம்

SYNCH CHARECTER - இசைவு உரு - ஒரு அமைப்பு மற்றொன்றுடன் ஒத்தியங்க செலுத்தப்படும் (இணை அல்லது தொடர்வரிசை) தரவு உருபடிவம் (data pattern)

SYNCHRONOUS - ஒத்தியங்கு

SYNTHESIS - இணைபடுத்தல்

SYNTHESIZER - இணைபடுத்தி


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #21 on: March 15, 2012, 05:37:09 AM »
TACHOMETER - சுழற்சிமானி, சுழற்சி அளவி

TANGENT - தொடுகோடு

TANK CIRCUIT - தொட்டிச் சுற்று

TANTALLUM - இஞ்சாயம்

TAPE RECORDER - நாடாப் பதிவி

TARGET (IN A BUS ETC.) - இலக்கு

TELESCOPE - தொலைநோக்கி

TENSION - இழுவிசை

TERMINATE (TRANSMISSION LINES) - முடித்துவிடு - எதிரலைகளை கட்டுப்படுத்த மின்தடையங்களை பரப்புத் தடங்களில் சேர்த்தல்

TERMINATION RESISTOR, TERMINATION RESISTANCE - முடிப்பு மின்தடை, முடிப்பு மின்தடையம் - எதிரலைகள் ஏற்படுதலை தடுக்க மின் தடங்களின் சேர்க்கப்படும் அல்லது தற்செயலாக திகழும் மின்தடையம்

TERRESTRIAL, TERRESTRIALLY - புவிப்பரவு, புவிப்பரவாக

TEST BENCH - சோதனை மேடை

TETRODE - நான்முனையம்

THERMISTOR - வெப்பத்தடையம்

THERMAL NOISE - வெப்ப இரைச்சல் - ஒரு கடத்தியில் மின்னிகளின் துள்ளலால் ஏற்படும் இரைச்சல்

THERMOCOUPLE - வெப்ப இரட்டை

THERMODYNAMICS - வெப்ப இயக்கியல்

THICK FILM - தடிபடலம்

THICK LENS - தடிவில்லை

THIN FILM - மென்படலம்

THIN LENS - மென்வில்லை

THORIUM - இடியம்

THROUGH-HOLE COMPONENT - துளைப்புகு உறுப்பு - மின் சுற்றுப்ப்லகைகளில் துளை வழிமங்கள் (through-hole vias) மூலம் பிணைக்கப்பட்ட உறுப்புக்கள்

THROUGH-HOLE VIA - துளை வழிமம் - ஒரு சுற்றுப்பலகையின் இரு முகங்களையும் எட்டும் வழிமம்

THROUGHPUT - செய்வீதம்

THYRATRON - வளிமும்முனையம்

TIMEBASE - காலவடி

TITANIUM - வெண்வெள்ளி

TONE - தொனி

TOROID(AL COIL) - நங்கூரச்சுருள்

TRANSPONDER - செலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன

TRANSFER FUNCTION - மாற்றச் சார்பு

TRANSFORM - உருமாற்று, உருமாற்றம்

TRANSCEIVER - செலுத்துப்பெறுவி

TRANSIENT - மாறுநிலை

TRANSMISSION LINE - பரப்புத் தடம், செலுத்துத் தடம்

TRANSMITTER - செலுத்தி

TRAVELLING WAVE TUBE (TWT) - இயங்குஅலைக் குழல் - நுண்ணலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்

TRIAC (TRIODE FOR AC) - மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம்

TRIODE - மும்முனையம்

TRIGGER(ING) - குதிரை(யிடல்)

TRIPPLER - மும்மடங்காக்கி

TROPOSHERE - அடிவளிமண்டலம்

TRUTH TABLE - மெய் அட்டவணை

TUNER - இசைப்பி

TUNED - ஒத்தியைந்த, சுரம்கூட்டிய

TUNED AMPLIFIER - இசைப்புறு மிகைப்பி

TUNNEL DIODE - சுரங் இருமுனையம், சுரங்கி

TUNGSTEN - மெல்லிழையம்

TURBINE - சுழலி

TWEETER - மேல்சுர ஒலிபெருக்கி

TWINAX CABLE - ஈரச்சு வடம்


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #22 on: March 15, 2012, 05:40:00 AM »

ULTRAVIOLET - புறஊத

ULTRA HIGH FREQUENCY (UHF) - அதிஉயர் அலைவெண்

ULTRASONIC - கேளாஒலி

ULTRASOUND - ஊடொலி

UNDERFLOW - குறைப்பாய்வு

UNDERSHOOT - கீழ்பாய்வு

UNIFORM QUANTIZATION - சீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை

URANIUM - அடரியம் - அதிகளவு அடர்த்தியான கதிரியக்க உலோகம்; வெள்ளி நிறமானது

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #23 on: March 15, 2012, 05:50:24 AM »
VANADIUM - பழீயம்

VARIANCE - மாறுபாட்டெண்

VECTOR QUANTIZATION - நெறிமச் சொட்டாக்கம் - நெறிமங்களை வகைக்குறிக்கும் சொட்டாக முறை; உள்ளீடு குறிகையை ஒரு நெறிம வெளியை (vector space) சேர்ந்ததாக கருதினால், அதை குறைந்த நெறிமங்களில் தோராயப்படுத்தும் சொட்டாக்க முறை

VELOCITY - திசைவேகம்

VERTICALLY POLARIZED WAVE - செங்குத்து/நெடு முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் நெடுதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை

VESTIGIAL SIDE-BAND MODULATION - எச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம் - ஒரு வகையான வீச்சு பண்பேற்றம்; இதில் ஒரு பக்கப் பட்டையின் ஒரு பகுதியும் மற்றது முழுமையாகவும் செலுத்தப்படுகிறது; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது

VIA - வழிமம் - ஒரு பன்னடுக்கு மின் சுற்றுப்பலகையில், மின் தடம் ஒரு அடுக்கிலிருந்து மற்ற அடுக்கிற்கு கடப்பதற்கு அமைக்கபடும் சிறுதுளை

VIDEO - ஒளிதோற்றம்

VIDEO RECORDER - ஒளிதோற்றப் பதிவி

VOLTAGE REGULATOR - மின்னழுத்தச் சீர்ப்பி

VOLTAGE STABILIZER - மின்னழுத்த நிலைப்பி

VOLTAGE STANDING WAVE RATIO (VSWR) - நிலையலை (மின்னழுத்த) விகிதம் - எதிரலையின் வலுமையை குறிப்படும் அளவு; இது 1 அருகில் இருப்பதே சிறந்தது; அதிக அளவு என்பது முனைப்படுத்தல் மின்தடையத்தின் பொறுந்தாநிலை; நிலையலையின் அதிகபட்ச-குறந்தபட்ச மின்னழுத்த விகிதம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #24 on: March 15, 2012, 06:01:43 AM »
WAFER - சீவல்

WAVE FRONT - அலை முகப்பு

WAVE PROPAGATION- அலைப் பரவுதல்

WAVEGUIDE - அலையடை, அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி

WAVEFORM - அலைவடிவம், அலைப்படம்

WAYPOINT - பாதைப்புள்ளி - கடல், தரை அல்லது வான வழிக்காட்டலுக்கு மேற்கோள்ளாக பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட புவி இருப்பிடம்; இது உலக இடம் காட்டும் அமைப்பில் (GPS) பயனாகிறது

WEATHER RADAR - வானிலை கதிரலைக் கும்பா

WHITE NOISE - வெண்ணிறைச்சல்

WIRELESS FIDELITY (WI-FI) - கம்பியில்லா மெய்நிலை

WOOFER - அடிச்சுர ஒலிபெருக்கி

WORD (= DOUBLE-BYTE) - ஈரெண்ணெண்


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #25 on: March 15, 2012, 06:02:36 AM »
X-RAY - ஊடுக்கதிர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #26 on: March 15, 2012, 06:03:08 AM »
YOKE - நுகம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மின்னியல் மின்னணுவியல்
« Reply #27 on: March 15, 2012, 06:03:42 AM »
ZERO (OF A TRANSFER FUNCTION) - சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்