தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

பிரபஞ்ச சக்தியும் மனித எண்ணங்களும்

(1/1)

DuskY:
பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் தொடர்புடையது
 நம் ஒவ்வொரு நபருக்கு நடக்கும் நன்மை தீமை எல்லாம்
சக்தி வடிவிலேயே நம்மை வந்தடையும்.
சூரியன் ஓர் பெரிய சக்தி அதனுடன் நாம் தொடர்பு பட்டிருக்கிறோம்
அதுபோல் அதைவிட பெரிய சக்தியுடன் சூரியன் தொடர்பு
பட்டிருக்கலாம். மனிதனுக்கும் அதற்கும் என்ன உறவு என
பலரது கேள்விகள் இங்கு எழலாம்.




நாம் நீண்ட நாள் முயன்று சில காரியங்களில் வெற்றி காண்போம். சிலருக்கு நொடிப்பொழுதில் வெற்றி கிடைக்கும். இதற்கு காரணம் நம் எண்ண அலைகள் எவற்றை நோக்கி இருக்கின்றதோ அவை சார்ந்த விஷயம் மட்டுமே நடக்கும். உதாரணமாக
நான் ஒரு பொருள் வேண்டும் என எண்ணினால் அவை சார்ந்தவற்றை
முதலில் தேடி எடுப்போம்.கல்வி, நற்காரியம் எல்லாம் இவ்வாறு தான்.
நம் எண்ண அலைகள் சில நேரங்களில் எதிராகச்செல்லும். நாம் இதில்
தோற்றால் என்ன நடக்கும் என்பதையே சிந்தித்து காரியங்களைச்
செய்தால் பிரபஞ்ச சக்தி அதையே தரும். எனவே தினமும் 10 -20முறையாவது
நமக்கு என்ன வேண்டுமோ அதை நடக்க வேண்டிய முறையிலேயே எண்ண
வேண்டும்.மன எண்ணங்களுக்கும் சக்தி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள்
மன எண்ணங்களைக் கவனித்து அவற்றை முறைப்படுத்தி வித்தியாசத்தை
உணர்ந்து வெற்றிப்பாதையில் செல்லுங்கள்.



இவை அனைத்தும் நான் கற்றுணர்ந்த அனுபவங்களே தவிர படித்து அறியவில்லை
                                                 இப்படிக்கு உங்கள் அரசி

Mercy:
Wowwwwww beshhh...  Really encouraging😍

எஸ்கே:
Semma arasi ...
Congrats 👍

Navigation

[0] Message Index

Go to full version