FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on June 12, 2016, 12:10:55 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: MysteRy on June 12, 2016, 12:10:55 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 106
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Swarangal ( Purple Wave ) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/106.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: பவித்ரா on June 12, 2016, 12:42:40 AM
அல்ல அல்ல  குறையாத அன்பு வேண்டாம்
நான் உனக்கு திகட்டாமல்  இருந்தாலே போதும்
என்னை அழாமல் பார்த்து கொள்ள வேண்டாம்
நான் அழுவதற்கு நீ காரணமாய் இல்லாமல் இருந்தாலே போதும் ...!

காலம் முழுதும் சாய்ந்து கிடக்க உன் நெஞ்சம் வேண்டாம்
என் சோகத்தில் சாய்ந்து கொள்ள  உன் தோள் கொடுத்தாலே போதும்
என்னை எப்பொழதும் உள்ளங்கையில் வைத்து நீ தாங்க வேண்டாம்
என் உறவுகளை இனிய முகத்துடன் வரவேற்றாலே போதும் ....!

கண்மூடி தனமாய் என் மேல் நம்பிக்கை வேண்டாம்
என் மேல் சந்தேக விதை விதைக்காமல் இருந்தாலே  போதும்
என்னை உன் சரிபாதியாய் நீ நடத்த வேண்டாம்
 என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலே போதும் .....!

மெய் சேர்ந்து ஒரு நாளும் பிரியாது இருக்க வேண்டாம்
என் மனதை விட்டு பிரியாது  நினைவுகளோடு வாழ்ந்தாலே  போதும்
கை கோர்த்து வானத்தில் காதலில் மிதந்திட வேண்டாம்
தனித்தனியே பிரிந்து நடக்காமல் இருந்தாலே   போதும் ....!

ஈருடல் ஒருயிராய் வாழ வேண்டாம்
ஒருமித்த கருத்தோடு வாழ்ந்தாலே போதும்
ஏழேழு ஜென்மத்துக்கு நம் காதல் தொடர வேண்டாம்
இந்த ஜென்மத்தில் நல்ல காதலராக வாழ்ந்தாலே போதும் ...!

வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்ய வேண்டாம்
யார் மனமும் கோணாமல் திருமணம் நடந்தாலே போதும்
ஊரை கூட்டி அறுபது சுவை படைத்திட வேண்டாம்
எளிமையாய் திருமணம் முடித்து இல்லறம் அமைத்தாலே போதும் ...!

ஐந்து ஆறு பெற்று அவதி படவேண்டாம்
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று போதும்
அவர்களுக்காக உடலை வருத்தி சொத்து சேர்க்க வேண்டாம்
நல்ல கல்வி கொடுத்து பண்போடு வளர்த்தாலே போதும் ...!

கண்ணுக்குள் வைத்து வளர்த்திட வேண்டாம்
வளர விட்டு வாழ வைத்து பார்த்தாலே போதும்
சுற்றமும் நட்பும் பகைத்து வாழ வேண்டாம்
ஊரார் மெச்சும்படி வாழ்ந்தாலே போதும் ...!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: SuBa on June 13, 2016, 11:32:25 PM
நல்லதொரு  குடும்பம் பல்கலைக்கழகம்
ஒரு குடும்பம் அன்பாலும் புரிதலாலும் உண்டாவது
மணமகிழ்வால் ஒன்று சேர்ந்து
மனமகிழ்வால் ஒன்றிணைவதே
குடும்பம் ஆகும்

குடும்ப வாழ்வில் ஒவ்வொரு  நாளும்
அன்பை அதிகப்படுத்தும்
விலை மதிக்க முடியா
நினைவுச் சின்னங்கள் ஆகும்

சிலரது வாழ்வில்
குடும்பம் என்பது விரும்புவது போல அமைவதில்லை
நல்ல துணை அமைவதும்
இறைவனின் செயலாகும்
நல்ல துணை அமைத்துவிட்டால்
அந்தக் குடும்பம் ஒரு கோவிலாக மாறும்

உண்மைப் புரிதலுடன்
நம்மை ஊக்குவித்து
நமக்கு தோழனாக தோழியாக
தோல் கொடுக்கும் தோள்
நல்லதுணை அமைந்துவிட்டால்
சொர்கமே பூமியில் வந்திறங்கும்

மன்னிக்கத் தெரிந்த மனமும்
மனதில் உண்மையான அன்பும்
அன்புக்கு அடிபணியும் ஆற்றலும்
அமைந்தவர்கள் குடும்பங்கள்
இறைவனால் அருளப்பட்ட குடும்பம் ஆகும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: ரித்திகா on June 14, 2016, 10:41:57 AM
;) ;)!!! மீண்டும் ஒரு சிறு முயற்சியில் !!! ~
       ~ !!! என் சிறு கிறுக்கல் !!! ~

    ~ !!! இமைகளை மூடினேன்... !!! ~
        ~ !!! விழி முன் ஒரு கனவு  !!! ~ :) :)

 '' ~ !!! இமைகளை மலர்ந்தேன் !!! ~
      ~ !!! என் கன்னங்கள் உன் இரு  !!! ~
  ~ !!! கரங்களால் எந்தப்பட்டு இருக்க !!! ~
   ~ !!! என் நெற்றியில் உன் இதழ் முத்தம் !!! ~
 ~ !!! நீ எனகாகாக  பிறந்தவள் ... !!! ~
     ~ !!! என் மரியாதைகுறியவள் என்றது !!! ~
 
  ~ !!! உன் கரம்  பிடித்து அக்னியை சுற்றிவர !!! ~
     ~ !!! என் வாழ்க்கை உன்னுடன் நிச்சியம்மானது  !!! ~
 ~ !!! என் கலுற்றில் நீ போட்ட  !!! ~
   ~ !!! மூன்று முடிச்சி நான் இனி 
               உன்னுடையவள் என்று பரிசாற்றியது  !!! ~
   ~ !!! கைகள் மருதாணியால் சிவந்திருக்க ... !!! ~
 ~ !!! என் கன்னங்கள் நாணத்தால் சிவந்திருந்தது !!! ~
 
   ~ !!! நான் நீ நாமாக மாறியது  ... !!! ~
 ~ !!! உன் குடும்பம்  என் குடும்பம் !!! ~
      ~ !!! நம் குடும்பம் ஆனது !!! ~
    ~ !!! உன்னுள் நான் என்னுள் நீ !!! ~
  ~ !!! என்று வாழ தொடங்கினோம் !!! ~
 
   ~ !!! இன்பத்தையும் துன்பத்தையும் !!! ~
 ~ !!! இருவரும் சேர்ந்தே பகிர்ந்தோம் !!! ~
   ~ !!! உன் மனபாரங்களைக் இறக்க
               என்  மடியினில் சாய்ந்து கோள் !!! ~
  ~ !!! என் கவலைகளை மறக்க
               உன் தோளினில் சாய்கிறேன் !!! ~

      ~ !!! நாம் இருவரும் வாழ்ந்த
           வாழ்க்கைக்கு மற்றும்
              காதலுக்கு   பரிசாகே 
                  நம் பிள்ளை .... !!! ~
   ~ !!! ஊரார் போற்ற நம் பிள்ளை வளரே !!! ~
          ~ !!!  பெருமையும் மகிழ்ச்சியும்
     குடிகொண்டது நம் மனதில்  !!! ~

    ~ !!! உன்னுடன் உலகம் போற்ற
             வாழ விரும்ப வில்லை !!! ~
  ~ !!! இறுதிவரை உன் இதயத்திற்கு
          சொந்தமானவலாக  வாழ விரும்புகிறேன் !!! ~
   ~ !!! உன்னுடன் நான் கொண்ட என்
            வாழ்க்கை  பயணம்   ...... !!! ~
       ~ !!! உன் ஆயுள்  முடியுமுன்
       என் ஆயுள் முடிய வேண்டும் .... !!! ~
  ~ !!! அதுவரை   உன் மார்பில்
         சாய்ந்து கொள்ள வேண்டும்  !!! ~
   ~ !!! என் வாழ்வின் இறுதி நொடியில்
             உன்  மடியினில் விழி மூட  வேண்டும் ... !!! ~ "
 
    ~ !!! விழி திறந்தேன் .......... !!! ~
        ~ !!! கண்டது கனவு என்று
     ~ !!! தெரிய சிரித்து கொண்டேன் .... !!! ~
 
   ~ !!! கனவில் உன்னுடன் வாழ்ந்தாலும்
              என் மனதில் என்றும்
         அழியா சுவடுகளாக உன் நினைவுகள் .... !!! ~[/size]

 
 
~ !!! நன்றி !!! ~ ~ !!! ரி தி கா !!! ~
[/i]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: BreeZe on June 15, 2016, 06:53:11 AM
அன்பான துணை
அருமையான குழந்தைகள்
அமைந்தவர் வாழ்வு
பூமியில் சொர்க்கம் ஆகும்
வழிப்போக்கனுக்கு நல்ல
வழிகாட்டி போல
நல்ல குடும்பம் அமைய
நல்ல துணை வேண்டும்

கைபிடித்து அக்கினிவலம் வந்து
ஆயிரம் வேதங்கள் ஓதி
நூறு சம்பிரதாயங்கள்ளுடன் ஒன்றினையும் தம்பதியர்
என்ன மந்திரம் சொல்லி என்னபயன்
அன்பெனும் தாரக மந்திரம் தெரியாவிடின்
குடும்பம் உருக்குலைந்து விடும்

மந்திரங்களும் வேதங்களும்
வெறும் சம்பிரதாயங்களே
அவை வெறும் நூல்கயிரே
புரிதலும் விட்டுக்கொடுத்தலும்
நம்பிக்கையும் உண்மையான அன்பும்
அறுக்க முடியாத பாசக் கயிராகும்
அந்த உறவு காலம்தொட்டு வாழும்

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி இல்லா குடும்பங்கள் பல
அரைவயிறு சாப்பிட்டாலும்
ஆனந்தமாக வாழும் குடும்பங்கள் இன்னும்பல

மனிதன் வாழ பணம் தேவை
ஒரு குடும்பம் நிலைத்து வாழ
நிம்மதியாய் வாழ
அன்பே தேவை
அன்பு மற்ற எல்லா குறைகளையும்
நிவர்த்தி செய்யும்


பதிப்புரிமை
BreeZe
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: JEE on June 15, 2016, 08:51:47 PM
அதிகாலை  துவங்கி இரவு வரை
அவசரகதியில் இறக்கை கட்டி
பறந்தாற் போல் பறக்கும் 

அலுவலகத்திவ் இருவரும் ஓய்வின்றி
அலுவல்களை  பார்க்கின்றனர்
வேலை வேலை வேலை .............

கணவனும் மனைவியும் பேச நேரமில்லை
குழந்தைகள் கூட கொஞ்ச நேரம் இல்லை
வேலை வேலை வேலை.............

குழந்தைகளை காப்பகத்தில் விட்ட  பெற்றோர்
இயந்திர வாழ்க்கைக்கு  அடிமையானோர்
வேலை வேலை வேலை .............


ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக  நேரம் ஒதுக்கி
பீச் பார்க் மிருககாட்சிசாலை என்று
எங்காவது சென்று பொழுதுபோக்குவது
மனதுக்கு உற்சாகமளிக்கத்தான் செய்யும்


முப்பது வயது வரை முட்டி முட்டி படித்து 
முப்பது வயதில் பணத்தை எண்ணவும்
முப்பது வயதில் இல்லறம் அமைத்து
முப்பத்து ஐந்துக்குள் இரணடு பெற்று

அவ்விரண்டும் முப்பது ஐந்தில் பேரனை
ஈன்று தரும் கணக்கினை பாரடா மனிதா .....

மனிதன் குறுகிய கால பயிர் கண்டான்
விரைவில் மகசூல் கண்டான்
மனிதன் ஆயுசு குறுகியதனை உணர்ந்து
விரைவில் மகசூல் காண வழி வகை தேடடா மனிதா..........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: StasH on June 16, 2016, 03:25:39 AM
ஒரு கை தட்டினால்
ஓசை வராது
என்றவன் கன்னத்தில்
ஓங்கி அறைந்து
ஓசை வந்ததா
என கேட்டவன் இவன் !

சாஸ்திர கட்டு போட்டு
சம்பிரதாய முடிச்சு இட
செவ்வாய் கிழமை சந்தைகளில்
துண்டு போர்த்திய கரங்களின் சில்மிஷத்தில்
விலைபோகும் காளையில்லை
என சொல்லியவன் இவன்

அப்பா,
வானின் நீளம் அளக்கும்
ஒரு பறவையின் பறத்தலை
போன்றது என் இருத்தல் !

அம்மா,
கன மழையின் ஓய்வில்
ஒரு தாமரை இலை-நீரினை
போன்றது என் இயல்பு !

என கூறியவன் இவன் !!

-------------------------------------

ஸ்ஸ்ஸ்ஸ் !!!

நிகழ்காலத்திற்கு எனை
மீட்டெடுத்து வந்தது
என் தோளில் நீ அளித்த
தேநீர் கோப்பையின்
பக்கவாட்டு சூடு !

மழைச்சாரலுக்கு வழிவிட
ஒரு ஜன்னல்
நாம் அடுக்கடுக்காய் அமர
ஒரு இருக்கை
குளிர் காய வெங்காய பஜ்ஜி !

காற்றில் குப்பைகளை
கூட்டி பெருக்கி
மழைத்துளிகளை தெளித்து
வானவில் கோலம் போட்ட சாலையில்
உன்னுடன் ஒரு பொடிநடை !

அளவான வீடு
அளவில்லா பேச்சு
சாப்பிட ஒரு தட்டு
ஊட்டிவிட இரு கரங்கள்
உப்பில்லா உணவு
தொட்டுக்கொள்ள அலுவலக கதை !

கண்ணை உறுத்தும் நிலவு
போர்த்திகொள்ள மேகம்
அதிகாலை ஒன்பது மணியின்
விழிப்பில்
கன்னத்தில் அறையும்
உன் கூந்தல் !

உன்னை தட்டி கேட்க ஒரு பையன்
எனக்கு வாதாட ஒரு பொண்ணு

அது போதும் நமக்கு… !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: SweeTie on June 16, 2016, 07:35:35 AM
அப்பனைப் போல்  பிள்ளை
தப்பாமல் பிறந்திருக்கு 
தங்கம் போல்  பொண்ணும்
சீராட  வந்திருக்கு 

கொஞ்சம் சும்மா இருங்களேன்
சில்மிஷம் செய்யும் கணவன்
ஒரு புறம்
அம்மா பசிக்குது  சீக்ரம் வா
பசியில்  பையன்
தட்டில் தாளம்

அம்மா  தலையை பின்னிவிடு
நேரமாச்சு பள்ளிக்கு
இரு  இரு இதோ வந்துட்டேன் 
மணிக்கூட்டின்  முட்கள்
ஜம  வேகத்தில் பறந்தன

செல்லகுட்டி  சாப்பாடு தயாரா
இடையைக் கிள்ளும்   ஆசைக் கணவன்
கொஞ்சுறதுக்கு  இதுவா நேரம்
எல்லாம் முடிஞ்சுது
சீக்ரம் கெளம்புங்கோ

அப்பப்பா
என்ன ரகளை என்ன ரகளை
ஒரு கப்  தேனீருடன்  அமர்கிறேன் 
மூச்சு விடும் நேரம்
இதுதான் எனக்கு

பம்பரம் போல்
சுழன்று  சுற்றும்  வாழ்க்கை
இன்பம்  துன்பம்
இரண்டும் கலந்தது
அரவணைக்கும் கணவன்
அன்பான குழந்தைகள்
இதைவிட என்ன வேண்டும் எனக்கு?


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 106
Post by: சக்திராகவா on June 16, 2016, 12:24:54 PM
தாரமில்லை நீ எனக்கு
தாயாய் மாறியதும்!
தலை துவட்டுமுன் சேலை
தலையணையாய் உன்மார்பு

முதல்பிள்ளை நானானாலும்
முத்தம் என்தன் மகனுக்கா?
மூழ்கவேண்டும் நானும்
முத்தத்தின் எச்சில் துளியில்!

உன் மீது என் மகனும்
என் மீது உன் மகளும்
உறங்காத இரவுண்டா
இதற்க்கு உலகில் நிகறுண்டா!

நித்திரை போக
நெற்றியில் தருவாய்
காலைகள் விடிவதுன்
காதல் முகத்தோடு

பரிமாறும் நேரத்தில்
பச்சிளம் பிள்ளை நான்
ஊட்டிவிடுவதால்
ருசியும் கூட்டிவிடுமோ?

அன்னையாய் உன்னை காண
என்னையே மாற்றிக்கொண்டேன்
சின்ன குறும்புகள் செய்து சிரிக்க நான்
பொருத்துக்கொள்ளடி
என் செல்ல அம்மணி!

விட்டில் ஒளி போதும்
நீ இருளில் சிரிக்க
நிலவின் நிழல் போதும்
நம் காலம் கடக்க

நீ ஏங்கி நான் ஏங்கி
எட்டாத ஆனந்தம்
நம் பிள்ளை கண்விழித்தால்
கையில் இருக்கும்

இன்னும் என்ன
இது மட்டும் போதும்
வாழ்ந்தேனடி உன்னோடு நான்
கனவல்ல நீ என்னோடு வா

கைதட்டி வாழ்த்த
கடவுள் வரவேண்டும்
கைகோர்த்து செல்ல
கண்கள் படவேண்டும்!


..சக்தி