Last week ITல யாரால எனக்கு ப்ளேஸ் கிடைக்கலையோ அவங்களுக்கு இந்த வாரம் கிடைக்காது
(https://i.postimg.cc/6QnKwjFR/Screenshot-20220421-001451-2.png) (https://postimages.org/)
Tinu sis as usual RJ super, ரொம்ப நாள் கழிச்சு இசைதென்றல் கேட்டேன் and இந்த வாரம் இடமும் கிடைச்சதுல மகிழ்ச்சி
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்,
பாடல் : மன்னவனே என் மன்னவனே
திரைப்படம்: இரண்டாம் உலகம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: சக்திஸ்ரீ, கோபால், சத்யன்
என்னதான் ஹாரிஸ் பாடல்களை காப்பி அது இதுன்னு நாம கிண்டல் பண்ணினாலும், நம் இரவுகளையும் பகல்களையும் நிறைக்கும் பல பாடல்களை தந்த இசை உலகின் சேவாக் ஹாரிஸ் அப்படின்னு சொன்னா மிகையாகாது. ஹாரிஸ் ஜெயராஜோட ஸ்பெஷலே தெளிந்த நீரோடை போன்ற அவரின் மெலடி பாடல்கள் தான். இந்த படத்துல அமைந்த பாடலுகளுமே அப்படியானதொரு ஹார்மெல்டிங் சோல்புல் மெலடி பாடல்கள் தான்.
ஒரு பாடலோட இரண்டு முக்கியமான ஆஸ்பெக்ட்டே richness and freshness தான். இந்த பாடலும் அப்படியானதொரு பாடல் தான்
வைரமுத்துவோட கவித்துவமான பாடல் வரிகளை பற்றி சொல்லவா வேணும். பாட்டை அப்படியே படிச்சு பார்த்தோம்னா ஒரு கவிதையை படிக்கிற மாதிரி தானே இருக்கும், ஒரு பெண்ணுடைய காதல் பிரிவின் துயரை ஒரு பெண்ணே உணர்ந்து எழுதினது போல இருக்கும்,
எனக்கு பிடித்த வரிகள்,
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
அப்புறம்,
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
கவிதை வரிகளை படிக்கிற மாதிரியே இருக்குல்ல
இந்த பாடலை இசை ரசிகர்கள் எல்லாருக்கும் dedicate பண்றேன்
ரொம்ப நாள் கழிச்சு place கிடைச்ச ஆர்வத்துல ரொம்ப எழுதிட்டோமோ. எழுதுவோம் என்னா பண்ணிட போறாய்ங்க