FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 17, 2022, 09:56:11 AM

Title: காலச்சக்கரம்
Post by: thamilan on November 17, 2022, 09:56:11 AM
ஆடைகள் இன்றி
இலைகுலையுடன் பாதி நிர்வாணமாக
திரிந்த மனிதன்
ஆடைகளை கண்டு பிடித்து
நாகரிகமாக மாறிய
அதே மனிதன்

நாகரிகம் என்ற பெயரில்
மறுபடியும்
அரைகுறை ஆடைகளுடன்
அலங்கோலமாக திரிகிறான்

மொழி இன்றி
வெறும் சத்தங்களாலும் சைகையாலும்
பேசித் திரிந்த மனிதன்
மொழிகளை கண்டுபிடித்து
புரியும் படி பேசித் திரிந்தான்
அதே மனிதன் இன்று
நாகரிகம் என்ற பெயரில்
மொழிகளை மென்று துப்பி
மொழிகளைக் கலந்து
பேசுவது புரியாமல் தெரிகிறான்

கற்கால மனிதர்களை
மதங்கள்
நற்குணங்களை போதித்து
நல்வழிப்படுத்தின
அதே மதங்கள் இன்று
அதே மனிதர்களை
மதங்களுக்காக சண்டையிடும்
கற்கால மனிதர்கள் ஆக்கின

கற்கால மனிதனை
நல்வழிப்படுத்திய நாகரிகம்
அதே மனிதனை மறுபடியும்
கற்காலத்துக்கே கொண்டு செல்கின்றன

காலச்சக்கரம்
முன்னோக்கி சுழல்கிறதா
இல்லை
பின்னோக்கி சுழல்கிறதா   

   
Title: Re: காலச்சக்கரம்
Post by: Ninja on November 18, 2022, 07:47:48 AM
அருமையான கவிதை தமிழன். காலத்தையும் மனிதர்களையும் predict பண்ணவே முடியாதே. இது முடிவிலி.