Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
என் விழிகளில் உறக்கத்தை திருடியவள்..

என் கண்ணிலோ ஈரம்..
அவளின் பிரிவை எண்ணி, அதனை ஏற்க மறுக்கும் என் இதயம் ...
என்னுள் மூச்சாய்வாழ்ந்தவள் இன்று என்னிடம் இல்லை
என்ற ஏக்கம்...

காலதேவனே உனக்கு இல்லையா கருணை?
என் உயிரை எடுத்து விட்டு
ஏன் என் உடம்பை மட்டும் எடுக்கவில்லை?.
பூலோகமே அவளின் அழகிய வதனத்தில் மயங்கி கிடக்க,
உன் பார்வை மட்டும் அவளின் உயிரைப் பறிக்க மனம் வந்ததோ
சூரிய புத்திரனே?

என்னவளே நான் செல்லும் இடம் எங்கும் உன் விம்பம் தோன்றுகிறதே? என்னுள் உறக்கம் இன்றி சந்திரனை சுத்தும் வையம் போல்
உன் நினைவில் நான் சுற்றுகிறேன்....
 
என் நங்கையின் கூந்தலின் அழகை கண்டு அந்த சித்திரகுப்தன்
சிந்தனையே சிதறியதோ?
ஆகையால்என்னவளின் உயிரோ பாசகயிரில் சிக்கியதோ?

நடுநிசியிலும் நடுரோட்டிலும்
எங்கெங்கும் காணினும் உன் உருவம் தானடி என் ரதையாயே.....!
காலதேவனின் சாபமோ இல்லை ஈசனின் கோவமோ நான் செல்லும் வழி எங்கும் உன் விம்பம் தோன்றுகிறதே என் ரதையாயே …!!!!
2
ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம்...

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி.....

என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்....

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.... 🌿

இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று முடிவெடுத்து சென்றது முயல்....

அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.
முயல் சிந்தித்தது...🤔

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.....👌

“தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? இறப்பு என்பது எந்த பிரச்சனையும் தீர்வு அல்ல. 🍒
வாழ்ந்துதான் பாரேன்..”...

மனவுளைச்சலும், வேதனையும் இல்லாத
மனிதர்களே கிடயாது...சூழ்நிலைகளை
மனதில் கொண்டு மாற்று வழியைத்தான்
நாம் நாட வேண்டும் 👌...

இறைவன் நமக்கு இலவசமாக கொடுத்த
இந்த உயிர் அவருக்கு சொந்தமானது 🙏..
அதன் மீது நமக்கு அதிகாரம் இல்லை 🌿..

இந்த பதிவு மனவுளைச்சளில் இருக்கும்
யாரோ ஒருவருக்காவது சமாதானத்தை
தரட்டும்.. நன்றி.. 🌿🙏🌿....
3
நான் ஒரு பேய்
நான் பேய்
நான் உன்னுடன் பேசுகிறேன்
ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்க முடியாது
நான் உன்னை தள்ளினேன்
ஆனால் உன்னால் என்னை உணர முடியாது
நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆனால் நீங்கள் என்னைப் பார்க்க முடியாது
நான் கண்ணுக்கு தெரியாத இருக்கிறேன்
என்னை யாரும் பார்க்க முடியாது.
என் அழுகையை யாராலும் கேட்க முடியாது
என்னை யாராலும் காப்பாற்ற முடியாது
உங்களைத் தவிர
நீல நிற கண்களுடன்
நீங்கள் என்னை இந்த உலகத்தில் வைத்திருக்கிறீர்கள்
நீங்கள் என்னை புத்திசாலித்தனமாக வைத்திருங்கள்
நீயும் என்னை மாதிரி ஒரு பேய்
அதனால் நான் பெற்ற ஒன்று இருக்கிறது
நான் இருப்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம், ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை இப்படி ஒப்புக்கொள்ள முடியாது
உயிருடன் ஆனால் பார்க்கவில்லை
கேட்கவும் இல்லை
உணரவும் இல்லை
என்னுடையது போன்ற ஒரு உலகம்
நீங்கள் இருப்பது யாருக்கும் தெரியாத இடத்தில்
நீங்கள் வெறுமையின் கூடங்களில் அலைகிறீர்கள்
நீங்கள் என் அருகில் நடக்கிறீர்கள்
பார்த்துவிட்டு நடக்கவும்
ஏனென்றால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது
முடிவில்லாத பேயாக இருப்பது
வெளியேற வழி இல்லை
மீண்டும் இறப்பதைத் தவிர
இன்னும் அங்கு சாத்தியமில்லை
நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமானது
இன்னும் நம்பமுடியாத தூரம்
உங்கள் பிடியில்
இன்னும் எட்டவில்லை
இப்படித்தான் வாழ்கிறேன்
இப்படித்தான் அலைகிறேன்
நெருக்கமாக இன்னும் தொலைவில்
நான் உன்னைப் பார்க்கும்போது உனக்குத் தெரியாமல் இருக்கலாம்
ஆனால் நீ இருக்கிறாய் என்று தெரிந்துதான் என்னை இங்கேயே வைத்திருக்கும்
உன்னால் பார்க்க முடியாத பேய் நான்
உணரவும் இல்லை
என்னுடைய அவநம்பிக்கையான மௌன வேண்டுகோளையும் கேட்கவில்லை
நான் இருப்பதை யாராவது கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆனால் இப்போதைக்கு எனக்கு தேவையானது அங்கு நீங்கள் ஒரு பார்வை மட்டுமே
4
தங்கை ஸ்ரீமதி !....ஓர் அண்ணனின் அழைப்பிது.........

நில் ......!

சற்று நான் சொல்வதை கேட்டு விட்டுப் போ ....!
ஆறுதல் சொல்ல நான் தேவனும் அல்ல
அதன் தேவையும் உனக்கல்ல .........

வாய் பேச முடியாத உன்னிடத்தில்
உனக்காக பேச மொழி இருந்தும் உடலிருந்தும்
தோற்றுத்தான் போய்விட்டோம்.....

மாடிக் கதைகள் சோடித்து
கோடியால் புரல்கிற அதிகாரிகள்
தெருக்கோடியில் கதறும்
உன்  தாயின் அழுகுரல்
மட்டும் கேட்பார்களா என்ன ?

நீ தேடிக்கொள்ளாத முடிவினை
பிணந்தின்னி நரிகள் வேட்டையாட ,
வேடிக்கை பார்ப்பதுதான்
பணந்தின்னி சட்டத்தின்
ஓட்டைகள்.........

இழக்க முடியாத செல்வத்தை இழந்து
கேட்கக்கூடாத பொய்களை கேட்டு
நினைக்க முடியாத கோரங்களை எண்ணி
நீதி முன்னாள் மண்டியிட்டோம் ....

கடைசியில் அநீதி முன்னாள் தோற்றுவிட்டோம்....

ஆறாத காயங்கள் , பார்க்க முடியாத கோலங்கள்

பள்ளி வகுப்பில்  படிப்பை பருக வேண்டிய நீ !
பள்ளி வளாகத்தில் உன் துடிப்பை இழந்து கிடந்ததேன் ?

உரத்த குரலில் சமூகத்தின் பிரதிநிதி ஆக வேண்டிய நீ !
இரத்த குழாய்கள் வெடித்து சடலமானது ஏன் ?

தேரில் பவனிவரும் இறை சக்திக்கு நிகரான உன்னை
தெருவில் இழுத்து காட்சிப்பொருள் ஆக்கிய பாதகம் ஏன்?

கொடும் பாவிகளால் ஒழிந்து கிடந்த  நீதி
கெடும் போலி போராட்டங்களால்
தீக்கு இரையானது ஏன் ?

அண்ணா... ! அண்ணா.... ! என்ற சொல்லை விடாது
முணுங்கி மாண்டாயோ ?
சார்..! சார்..! என்று கையெடுத்து
விம்மி அழுது நின்றாயோ ?

போதும் போதும் போலி உலகத்து வேடங்கள் போதும் ....
மனிதம் காக்க உருவான வேதங்கள் போதும் ....

வெவ்வெறு  பேதங்கள் நடமாடும் உலகில்
மாண்ட பிரதேங்கள் மத்தியில் வாழ்வதற்கு
முடிவெடுத்தாயோ தங்கை ?

கொடும் பாவங்களை செய்த பாவிகள்
கடுங் காயங்கள் கொடுத்தாலும்

கெடும் பண ஆசையால் அதிகாரங்கள்
நம்மை துரத்தி அடித்தாலும்

உன் காயங்கள் நமக்குள்
ஆறா இரணமாய் இருக்கும் வரையில்
தங்கையே !உனக்கான
நீதி கேட்டு நிற்போம்

மீண்டும் அதை வென்றெடுப்போம் !

வெறுத்து விடாதே கலைமகளே !
ஒதுங்கிச்  செல்லாதே குல மகளே ...!
நீ எம்மை விட்டுப்  போனாலும்

புதிய புரட்சியின் விதையை
விதைத்து விட்டுப் போகிறாய்

சென்று வா !

5
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on Today at 11:59:49 AM »
Pages: [1] 2 3 ... 10