Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 12645 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
இன்று ஒரு தகவல்
« on: May 17, 2021, 11:27:12 PM »
வால் துண்டாகி விட்டாலும் பல்லிகள் சுறுசுறுப்பாய் ஓடுகிறதே எப்படி?


ஆபத்து காலத்தில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவே , இந்த வால் துண்டாதல் (டெயில் பிரேக்கிங்) சிஸ்டத்தை பல்லிகள் வைத்து இருக்கின்றன. துண்டாகி போன வால், பட பட என துடிப்பதையே எதிரி பார்த்து கொண்டு இருக்க , அந்த இடைவேளையில் பல்லி தப்பித்து ஓடி விடும். இதற்கு வசதியாக பல்லியின் வால் எலும்புகள் மிக மென்மையாக இருக்கும், அது தவிர மேல் தோலில் இருக்கும் செதில்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. கதவு இடுகிலோ அல்லது வேறு பெரிய பூச்சியின் வாயிலோ சிக்கி வால் துண்டானதும் துண்டான இடத்தில் இருக்கும் சுறுங்கு தசை உடனே இருகி, இரத்தம் வெளியேற விடாமல் அந்த இடத்திற்கு சீல் வைத்து விடும்.
« Last Edit: June 11, 2021, 04:39:02 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 02
« Reply #1 on: June 11, 2021, 04:37:24 PM »
எல்லா குதிரைகளையும் ரேஸ் குதிரைகளாகப்  பழக்கி ஓட வைக்க முடியுமா?

முடியாது! ரேஸில் ஓடுவதற்கு என்றே ஒரு வகை குதிரைகள் உள்ளன.அதற்கு 'தரோ பிரட்' என்று பெயர். உலகம் முழுவதும், கோடிக் கணக்கில் பணம் புரளும் ரேஸ் கோர்சில் இந்த  'தரோ பிரட்' வகை குதிரைகள் மட்டுமே ஓட முடியும்.
அதாவது உடல் திடகாத்திரதிற்கு பெயர் போன துருக்கிய குதிரை, உடல் கட்டமைப்பில் நேர்த்தியான அரேபிய குதிரை, வேகத்திற்கு பெயர் போன இங்கிலாந்து குதிரை ஆகிய மூன்றின் கலப்பே இந்த  'தரோ பிரட்' .

இதன் வம்சாவளியை சேர்ந்த குதிரைகள் தாம் உலகம் முழுவதும் ரேஸ் குதிரைகளக ஓடி கொண்டு இருக்கின்றன. பந்தய குதிரைகள் எந்த மாதத்தில் பிறந்தாலும், ஜனவரி முதல் தேதியில் பிறந்ததாகவே வயது கணக்கிடப்படும். ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே ரேஸில் ஓடும். பிறகு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு விடும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 03
« Reply #2 on: June 11, 2021, 04:44:07 PM »
பறவைகளில் கழுகின் பார்வை மட்டும் கூர்மையாய் இருப்பது ஏன்?


உயரப் பறப்பதிலும், உற்று நோக்குவதிலும்
கழுகுக்கு நிகர் கழுகு தான். கழுகின் கண்களில் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் நுண்ணுக்கமான திசுக்கள் அமைந்து இருப்பது தான் இவைகளின் பார்வை கூர்மைக்கு காரணம்.1500 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அனாயசமாய் கழுகு வட்டம் அடித்து கொண்டு இருக்கும்போது,அதன் பார்வை வியுகத்தில் சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பு அதன் பார்வையில் இருக்கும்.அதே நேரத்தில்,எந்த அளவிற்கு தன்னால் இரையை தூக்கி கொண்டு பறக்க முடியும் என்பதையும் கழுகு துல்லியமாய் கணித்து வைத்து இருக்கின்றன.


கழுகின் கண்களின் இரண்டு அம்சங்கள் அத்தகைய கூர்மையான பார்வையைத் தருகின்றன. ஒன்று விழித்திரை, மற்றொன்று ஃபோவா. கழுகின் இவை இரண்டும் பார்வைத் துறையில் சிறந்த விவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெரிதாக்கும் திறனை ஒன்றாகக் கொடுக்கின்றது.



கூடுதல் தகவல்:
மனிதர்களின்  கண்களை கழுகின் கண்களாக மாற்றிக்கொண்டால், 10 மாடி கட்டிடத்தின் கூரையிலிருந்து தரையில் ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காணலாம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -04
« Reply #3 on: June 11, 2021, 04:45:23 PM »
உலகத்தில் தண்ணீர் உயிரினங்கள் ஏதாவது உண்டா?

உண்டே! குறிப்பாக பல்லிகளும்,பாம்புகளும், மற்ற பிற ஊர்வன வகைகளும் தண்ணீர் இருக்கும் பக்கம் எட்டி கூட பார்ப்பது இல்லை. காரணம், அந்தப் பிராணிகள் வெறும் மாமிச உணவை மட்டும் நம்பி வாழ்வதால்,அவைகளுக்கு விழுங்கும் ஜீவராசிகளின் உடல் திரவங்கள் போதுமானதாகும். ஈரப்பதம் அற்ற மற்றும் குறைவான தாவர உணவுகளை உட்கொள்ளும் பிராணிகளுக்கு தான் தண்ணீர் தாகம் வருகிறது.

வட அமெரிக்காவில் வாழும் கங்காருஎலி தன் வாழ்நாளில் தண்ணீரை முற்றிலும் தவிர்த்து விடுகிறது.அதே போல் சஹாரா பாலைவனத்தில் வாழும் 'ஆடக்ஸ்' என்னும் ஒரு வகை மான்,அங்கே விளையும் கள்ளிசெடிகளை மட்டுமே சாப்பிட்டு ஆயுசுக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல்  தன் வாழ் நாட்களை கழித்து விடுகிறது
.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 05
« Reply #4 on: June 11, 2021, 04:46:31 PM »
பூனைக்குத் தெரியுமா பால்கோவாவின் டேஸ்ட்?

பூனைக்கு பால்கோவா மட்டுமல்ல, இனிப்பான எந்த உணவின் சுவையும் தெரியாது. மனிதர்களால் 5(அல்லது அதற்கு மேற்பட்ட) சுவைகளை உணரமுடியும். ஆனால், பூனைகளால் இனிப்புச்சுவையை மட்டும் உணர முடியாது. வீட்டுப்பூனை மட்டுமல்ல, காடுகளில் வசிக்கும் பூனைக்குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 06
« Reply #5 on: June 11, 2021, 04:47:50 PM »
உப்பு நீரும் டால்பின்களும்?


கடலிலேயே வாழ்ந்தாலும் டால்பின்கள் கடல் நீரைப் பருகுவதில்லை. கடலின் உப்பு நீரை அருந்தினால் டால்பின்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு அவை இறக்க நேரிடும். தங்களுக்குத் தேவையான நீரை அவை உண்ணும் உணவிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 07
« Reply #6 on: June 11, 2021, 04:48:47 PM »
வெளுத்ததெல்லாம் பனிக்கரடி அல்ல?


அண்டார்டிகாவிலிருக்கும் பனியின் நிறத்தோடு போட்டிபோட்டு வாழும் வெள்ளைவெளேர் பனிக்கரடியின் நிறம் உண்மையில் வெள்ளையில்லை என்பது தெரியுமா? அவற்றின் உடலிலிருக்கும் முடிகள்(Fur) நிறமற்றவை. அவை வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாலேயே நம் கண்களுக்கு வெள்ளை நிறமாகத் தெரிகின்றன. உண்மையில் பனிக்கரடியின் தோல் கருப்பு நிறம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 08
« Reply #7 on: June 11, 2021, 04:50:12 PM »
ஒரு கூட்டத்துக்கு ஒரு தலைவி தான்யா?

Clown Fish (நம்ம நீமோ மீன் தான்) என்றழைக்கப்படும் ஒரு வகை மீன்கள், எப்பொழுதும் கூட்டமாகவே வாழக்கூடியவை. ஒரு கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மீன் தான் இருக்கும். அந்தப்பெண் மீனின் தலைமையில் மற்ற மீன்கள் இயங்குகின்றன. இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அந்தப்பெண் மீனும், பிறக்கும் போது ஆணாகவே பிறக்கிறது. வளர்ந்த பின், அதிக திறமையுடைய, ஆளுமைத்திறன் உடைய ஆண் மீன், பெண்ணாக மாறி  தலைமைப் பொறுப்பை ஏற்கிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -09
« Reply #8 on: June 11, 2021, 04:51:06 PM »

சிலந்தி வலை?



சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் நாளங்கள்தான் வலை பின்னத்தேவையான பசை போன்ற இழைகளைத் தருகின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கும். ப்ரோட்டீன் நிறைந்திருக்கும் அந்த இழைகள் சிலந்திகளின் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட உடனே கெட்டியாகி நூல் போல் மாறி விடுகிறது. Golden Spider (“தங்கச் சிலந்தி” என்று அழைக்கலாமா? 😊 ) என்ற ஒருவகை சிலந்தியின் இழைகள், அதே தடிமனுள்ள இரும்பு இழையை விட பலமானது. அதே போல் மடகாஸ்கரில் இருக்கும் Darwin Bark Spiders வகை சிலந்திகள் 82 அடி நீள இழைகளை உருவாக்கும் திறன் பெற்றவை. இவை உருவாக்கும் வலைகள் 30 சதுர அடிகள் வரை இருக்கும்.

ஒன்று தெரியுமா??? சிலந்திகள் தங்கள் வலைகளை ஓரங்களில்தான் முதலில் பின்னத்தொடங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதியை நோக்கி பின்னிக்கொண்டே வந்து முடிக்கின்றன.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -10
« Reply #9 on: June 11, 2021, 04:53:28 PM »
ராணி தேனீ?

ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ தான் இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு தேன் கூட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீக்கள் இருந்தால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும். இப்படி சண்டைக்கு அழைப்பதற்கென்றே ராணி தேனீக்களுக்கு ஸ்பெஷல் ரீங்காரமெல்லாம் இருக்கிறது. சண்டையில் ஒரு தேனீ மற்றொன்றைக் கொன்று ராணியாக வெற்றிவாகை சூடுகிறது. பெரும்பாலும், ஒரு தேன் கூட்டில் இருக்கும் தேனீக்கள், அக்கூட்டின் ராணி தேனீயின் குழந்தைகளாக இருக்கின்றன. ஒரு ராணி தேனீ உருவாகும்போது, அதற்கென்று அக்கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்கள் புரதம் நிறைந்த உணவைக் கொடுக்கின்றன. மற்ற தேனீக்களுக்கும் இவ்வுணவு கொடுக்கப்பட்டாலும், வளரும் ராணி தேனீக்கு ஸ்பெஷல் கவனிப்பு நிச்சயம்.

ஒரு புது ராணி தேனீ உருவாகும்போது, 15 நாட்களுக்கு தேன்கூட்டிலிருக்கும் துளையொன்றில் மற்ற தேனீக்களால் அடைத்து வைக்கப்படுகிறது. முற்றிலும் வளர்ந்து, இனப்பெருக்கத்திற்குத் தயாராகி 15 நாட்கள் கழித்து துளையிலிருந்து வெளிவரும் புது ராணீ தேனீ, முதல் காரியமாகச் செய்வது தேன் கூட்டிலிருக்கும் பிற ராணி தேனீக்களை சண்டையிட்டு வெளியேற்றுவது அல்லது கொல்வது.

தேன்கூட்டிலிருக்கும் மற்ற தேனீக்களின் முக்கிய வேலையே, ராணி தேனீக்கு பணிவிடை செய்வதும், அதற்குத் தேவையான உணவைக்கொண்டுவருவதும் தான். ராணி தேனீக்கு என்னதான் வேலை என்கின்றீர்களா? தொடர்ந்து முட்டையிட்டு தன் சந்ததியை வளர்ப்பது தான்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 11
« Reply #10 on: June 11, 2021, 04:54:18 PM »
Larry Twitter Bird?


சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருக்கும்  சிறிய நீல வண்ண பறவைக்கு(ம்) (செல்லப்)பெயர் இருக்கிறது. அதற்கு வைக்கப்பட்ட முதல் பெயர் “Larry Bird”. அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்தாட்ட அணிகளில் ஒன்றான Boston Celtics அணியில் விளையாடிய Larry Bird என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது இப்பெயர்.

ட்விட்டர் வலைதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான Biz Stone அவர்களின் ஊர் தான் Celtics அணியின் சொந்த ஊர். இப்போது புரிகிறதா பெயர்க்காரணம்?



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -12
« Reply #11 on: June 11, 2021, 04:55:10 PM »


100 கிராம் பறவை?

உலகில் உள்ள மொத்த பறவையினங்களில் 19% பறவைகள் மட்டுமே தட்பவெப்ப நிலை காரணமாகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம்பெயர்கின்றன(migration). அதிகபட்சமாக 44,000 மைல்கள் இடம் பெயர்கின்றன. அப்படி 44,000 மைல்கள் இடம் பெயரும் பறவையின் பெயர்  Arctic Tern . பெயரை விடுங்கள்..அதன் எடை என்ன தெரியுமா? ஜஸ்ட் 100 கிராம்.


இப்பறவைகள் அதிகபட்சமாக 35 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 1.5 மில்லியன் மைல்கள் பயணம் செய்கின்றன. கிரீன்லாந்தில் பயணத்தைத் தொடங்கி அண்டார்டிகாவின் கடற்கரை வழியாகப் பறந்து மீண்டும் கிரீன்லாந்தை வந்தடைகின்றன இப்பறவைகள். பயணத்தின் போது வட அட்லாண்டிக் கடலில் உணவிற்காக ப்ரேக் எடுத்துக் கொள்கின்றன. நீர்வாழ் பறவையான ஆர்டிக் டெர்ன் அதிகம் விரும்பி உண்பது மீன் வகைகளையே.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 13
« Reply #12 on: June 11, 2021, 04:56:13 PM »



 பைன்(Pine) பறவைகள்?

Clark’s Nutcracker எனப்படும் ஒரு வகை பறவையினம், பைன் மரங்களின் விதைகளை விரும்பி உண்ணக்கூடியவை. வாழ்நாள் முழுவதும் இவை சாப்பிடக்கூடிய ஒரே உணவு பைன் மரத்தின் விதைகள் மட்டும் தான். இந்தப்
பைன் விதைகளை எடுத்துச் செல்வதற்காக அவற்றின் வாயில் ஒரு ஸ்பெஷல் பை கூட இருக்கிறது. இப்பறவைகள் ஒவ்வொன்றும் தன் குளிர்காலத்தேவைக்காக ஆண்டுதோரும் கிட்டத்தட்ட 30,000 பைன் மர விதைகளை சேமிக்கின்றன.  அத்தனை விதைகளும் ஒரே இடத்தில் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பறவையும் 6,000 வெவ்வேறு இடங்களில் தத்தம் பைன் விதைகளைச் சேமிக்கின்றன.


இப்பறவைகளுக்கு ஞாபக சக்தி மிக அதிகம். எந்த அளவுக்கு என்றால், தான் உணவு சேமித்து வைத்திருக்கும் 6000க்கும் அதிகமான இடங்களை கரெக்ட்டாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு. தேவையான நேரத்தில் சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று உணவை எடுத்துவருகின்றன. அந்த இடம் பனியில் புதைந்து இருந்தால் கூட இவற்றால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும். பெண் பறவைகள் உணவை எடுத்துவரச் செல்லும் நேரங்களில் ஆண் பறவைகள் முட்டைகளை அடைகாக்கின்றன. காகங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப்பறவைகள் அதிகபட்சமாக 17 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -14
« Reply #13 on: June 11, 2021, 04:56:52 PM »


45 லிட்டர் தண்ணீரும் அரைமணிநேரத் தூக்கமும்?


ஒட்டகத்தைவிட அதிக நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாழக்கூடிய உயிரினம் ஒட்டகச்சிவிங்கி. ஓரிரு வாரங்களுக்கு ஒரு முறைதான் இவை நீர் அருந்துகின்றன. கால்களின் அதிக உயரம் மற்றும் குட்டையான(!!) கழுத்தின் காரணமாக, மற்ற விலங்குகளைப்போல் நின்றுகொண்டே நீரைப்பருக இவற்றால் முடியாது. தண்ணீர் வேண்டுமென்றால் முன்னிரு கால்களை அகட்டி வைத்தோ, மண்டியிட்டோ தான் பருக வேண்டும். இதனாலேயே இவை அடிக்கடி தண்ணீரைத் தேடுவதில்லை. மாறாக இவற்றின் உணவுகளிலிருந்தே தேவையான நீரை எடுத்துக்கொள்கின்றன. ஆனால், தண்ணீர் தேவை என்று வந்துவிட்டால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 லிட்டர்  தண்ணீரைக் குடிக்கின்றன.


ஒட்டகச்சிவிங்கிகளைத் தூங்கும்போது பிடிப்பது மிகக்கடினம் ஏனென்றால், ஒரு நாளில் இவை தூங்கும் நேரம் மொத்தமாக 30 நிமிடங்கள் தான். இவற்றின் கால்கள்(கால்களின் உயரம் மட்டுமே) சராசரியாக ஆறடி உயரம் கொண்டவை. ஒரு மரத்திலிருந்து உணவு உட்கொள்ளும்போது ஆணும் பெண்ணும் சாப்பாட்டுக்கு போட்டி வந்துவிடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு பகுதிகளைத் தேர்வுசெய்கின்றன. ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு 4 வயிறுகள் உள்ளன. கூட்டமாக வசித்தாலும், தலைவன்/தலைவி என்று யாரும் கிடையாது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் 15
« Reply #14 on: June 11, 2021, 04:57:30 PM »



பறக்கும் மீன்கள்?


Exocoetidae என்ற விலங்கியல் பெயருடைய இம்மீன்களின் முன்துடுப்புகள் மீக நீண்டதாக பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் இவை, எளிதாக காற்றில் படபடத்து தாவுகின்றன. இம்மீன்கள், கடல் அமைதியாக இருக்கும்போது கடலின் மேல்மட்டத்துக்கு வருவதில்லை; மாறாக கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது தண்ணீருக்கு வெளியில் வந்து குதித்து, காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்று விளையாடுகின்றன. இந்த மீன்கள் பறக்கும் மீன்கள் என்று பெயர் பெற்றது இப்படித்தான். அதிக பட்சமாக 6 மீ உயரத்துக்குத் தாவுவதும் சுமார் 50 வினாடிகளில் 70கி.மீ வேகத்துக்கு பறப்பதும் இவற்றின் சிறப்பு. வேகமாக பறக்கும் போது இவை 160அடி தூரம் வரை பறப்பதாக தெரிய வந்துள்ளது.

கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள்தான் இதன் விருப்ப உணவாகும். பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும் டால்பின்கள் மற்றும் சில வகை மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன. மீன்பிடிப்போர் டார்ச் லைட்டுகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்து பிடிக்கின்றனர். இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாகவும் இருப்பதால் இவற்றைப் பிடிப்பதில் பல காலமாகவே உலக நாடுகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. பார்படாஸ் நாட்டின் தேசிய சின்னமாகவும், தேசிய மீனாகவும் திகழும் இந்த பறக்கும் மீன்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்