Author Topic: கடக்கின்ற காலம்  (Read 1055 times)

Offline SweeTie

கடக்கின்ற காலம்
« on: November 24, 2022, 01:50:50 AM »
காலம் ஒருநாள் பதில் சொல்லும்  என்பது
காலத்தை  கடத்தி  செல்கிறதேயன்றி 
பதில்  கிடைப்பதில்லை என்பதுதான் நிஜம்
காலத்தை நாமே  தான் கடக்கின்றோம்  என்பது
பலருக்கு புரிவதில்லை.

சிறு பிராயத்தில் சந்தோஷமாக கடக்கும் காலம்
வளர்ந்தபின்  ஏன்  மாறிப்போகிறது  என்பதை
யாருமே சிந்தித்து பார்ப்பதில்லை. 

இன்றய பொழுது நலமாக கழியவேண்டும் என்பது
இன்றய சமுதாயத்தின்  எதிர்பார்ப்பு
நாளையபொழுது நமக்கில்லை  என்பதில்  அவர்கள் 
திடமாக இருக்கிறார்கள்.   

காலம் நம்மை கடந்து போகிறது... இல்லை
நாம் காலத்தைவிட்டு கடந்து போகிறோம் 
சந்தர்ப்பங்கள்   சதி செய்யும்போது 
காலம்தான்  பதில் சொல்லவேண்டும் என்கிறோம் 
ஆனால் காலம் பதில் சொல்வதில்லை .
நாம்தான்  காலத்தை  சரி பண்ணுகிறோம்.