Author Topic: பழமொழிகள்  (Read 17772 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #30 on: December 20, 2012, 01:38:05 AM »

326   குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்   
327   குப்பை உயரும் கோபுரம் தாழும்.   
328   குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?   
329   கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.   
330   குரங்கின் கைப் பூமாலை.   
331   குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.   
332   குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.   
333   குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.   
334   குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?   
335   குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?   
336   குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.   
337   குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்   
338   குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை   
339   குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.   
340   குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே   
341   குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி   
342   குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #31 on: December 20, 2012, 01:39:47 AM »
343   கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.   
344   கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?   
345   கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.   
346   கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.   
347   கெடுக்கினும் கல்வி கேடுபடாது   
348   கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது   
349   கெடுவான் கேடு நினைப்பான்   
350   கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
351   கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.   
352   கெட்டும் பட்டணம் சேர்   
353   கெண்டையைப் போட்டு வராலை இழு.   
354   கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #32 on: December 20, 2012, 01:40:28 AM »
355   கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.   
356   கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.   
357   கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?   
358   கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.   
359   கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.   
360   கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.   
361   கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா   
362   கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?   
363   கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்   
364   கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்   
365   கையிலே காசு வாயிலே தோசை   
366   கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.   
367   கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்   
368   கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #33 on: December 20, 2012, 01:41:32 AM »
369   கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?   
370   கொடிக்கு காய் கனமா?   
371   கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.   
372   கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.   
373   கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.   
374   கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?   
375   கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #34 on: December 20, 2012, 02:52:36 AM »

376   கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.   
377   கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.   
378   கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?   
379   கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?   
380   கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.   
381   கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்   
382   கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்   
383   கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்   
384   கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.   
385   கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.   
386   கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.   
387   கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.   
388   கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.   
389   கோபம் சண்டாளம்.   
390   கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?   
391   கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?   
392   கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #35 on: December 20, 2012, 02:53:17 AM »
393   சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி   
394   சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.   
395   சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?   
396   சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.   
397   சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்   
398   சருகைக் கண்டு தணலஞ்சுமா   
399   சர்க்கரை என்றால் தித்திக்குமா?   
400   சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

401   சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?   
402   சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.   
403   சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.   
404   சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.   
405   சாண் ஏற முழம் சறுக்கிறது.   
406   சாது மிரண்டால் காடு கொள்ளாது.   
407   சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.   
408   சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.   
409   சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #36 on: December 20, 2012, 02:53:40 AM »
410   சுக துக்கம் சுழல் சக்கரம்.   
411   சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.   
412   சுட்ட சட்டி அறியுமா சுவை.   
413   சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?   
414   சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.   
415   சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.   
416   சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.   
417   சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.   
418   சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.   
419   சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே   
420   சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?   
421   சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.   
422   சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.   
423   சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.   
424   செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?   
425   செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #37 on: December 20, 2012, 02:54:17 AM »

426   செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?   
427   செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.   
428   செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.   
429   சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.   
430   செயவன திருந்தச் செய்.   
431   செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.   
432   செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?   
433   செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.   
434   சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.   
435   சேற்றிலே செந்தாமரை போல.   
436   சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.   
437   சைகை அறியாதவன் சற்றும் அறியான்.   
438   சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.   
439   சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?   
440   சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.   
441   சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.   
442   சொல் அம்போ வில் அம்போ?   
443   சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.   
444   சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.   
445   சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.   
446   சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.   
447   சொல்வல்லவனை வெல்லல் அரிது.   
448   சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.   
449   சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..   
450   சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #38 on: December 20, 2012, 02:55:27 AM »
451   தங்கம் தரையிலே தவிடு பானையிலே.   
452   தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.   
453   தடி எடுத்தவன் தண்டல்காரனா ?   
454   தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.   
455   தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.   
456   தணிந்த வில்லுத்தான் தைக்கும்.   
457   தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.   
458   தண்ணீரையும் தாயையும் பழிக்காதே   
459   தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.   
460   தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.   
461   தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.   
462   தருமம் தலைகாக்கும்.   
463   தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.   
464   தலை இருக்க வால் ஆடலாமா ?   
465   தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?   
466   தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?   
467   தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது   
468   தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.   
469   தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.   
470   தவளை தன் வாயாற் கெடும்.   
471   தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.   
472   தாய் பாலுக்கு கணக்கு பார்த்தா தாலி மிஞ்சுமா   
473   திருநீறிட்டார் கெட்டார்; இடாதார் வாழ்ந்தார்
474   நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.   
475   நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #39 on: December 20, 2012, 02:55:58 AM »

476   நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.   
477   நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !   
478   நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.   
479   நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்   
480   நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.   
481   நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.   
482   நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?   
483   நயத்திலாகிறது பயத்திலாகாது.   
484   நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.   
485   நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.   
486   நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை   
487   நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.   
488   நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா?   
489   நல்லது செய்து நடுவழியே போனால்,   
490   நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.   
491   நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.   
492   நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.   
493   நா அசைய நாடு அசையும்.   
494   நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.   
495   நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?   
496   நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.   
497   நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.   
498   நாய் இருக்கிற சண்டை உண்டு.   
499   நாய் விற்ற காசு குரைக்குமா?   
500   நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #40 on: December 20, 2012, 02:56:19 AM »

501   நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.   
502   நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.   
503   நாலாறு கூடினால் பாலாறு.   
504   நாள் செய்வது நல்லார் செய்யார்.   
505   நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.   
506   நித்திய கண்டம் பூரண ஆயிசு   
507   நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?   
508   நித்திரை சுகம் அறியாது.   
509   நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.   
510   நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்   
511   நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.   
512   நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.   
513   நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.   
514   நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.   
515   நீர் மேல் எழுத்து போல்.   
516   நீலிக்குக் கண்ணீர் இமையிலே.   
517   நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.   
518   நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?   
519   நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.   
520   நூற்றைக் கொடுத்தது குறுணி.   
521   நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.   
522   நூல் கற்றவனே மேலவன்.   
523   நெய் முந்தியோ திரி முந்தியோ.   
524   நெருப்பில்லாது புகையாது   
525   நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #41 on: December 20, 2012, 02:57:09 AM »
551   பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.   
552   பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.   
553   பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.   
554   பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.   
555   பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?   
556   பணம் உண்டானால் மணம் உண்டு.   
557   பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.   
558   பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.   
559   பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்   
560   பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.   
561   பதறாத காரியம் சிதறாது.   
562   பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.   
563   பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.   
564   பந்திக்கு முந்து படைக்கு பிந்து!   
565   பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?   
566   பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.   
567   பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?   
568   பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.   
569   பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.   
570   பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.   
571   பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்   
572   பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.   
573   பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.   
574   பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.   
575   பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #42 on: December 20, 2012, 02:59:18 AM »
526   நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?   
527   நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?   
528   நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.   
529   நேற்று உள்ளார் இன்று இல்லை.   
530   நைடதம் புலவர்க்கு ஒளடதம்.   
531   நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.   
532   நொறுங்கத் தின்றால் நூறு வயது.   
533   நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.   
534   நோய் கொண்டார் பேய் கொண்டார்.   
535   நோய்க்கு இடம் கொடேல்.   
536   பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.   
537   பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.   
538   பகைவர் உறவு புகை எழு நெருப்பு.   
539   பக்கச் சொல் பதினாயிரம்.   
540   பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்   
541   பசியுள்ளவன் ருசி அறியான்.   
542   பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.   
543   பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?   
544   பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?   
545   படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.   
546   படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.   
547   படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.   
548   படையிருந்தால் அரணில்லை.   
549   பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.   
550   பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #43 on: December 20, 2012, 02:59:44 AM »
576   பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.   
577   பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.   
578   பழகப் பழகப் பாலும் புளிக்கும்.   
579   பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.   
580   பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.   
581   பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?   
582   புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.   
583   புத்திமான் பலவான்.   
584   புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.   
585   புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?   
586   பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது   
587   பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.   
588   பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.   
589   பூவிற்றகாசு மணக்குமா?   
590   பெண் என்றால் பேயும் இரங்கும்.   
591   பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.   
592   பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.   
593   பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.   
594   பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.   
595   பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.   
596   பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.   
597   பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.   
598   பேசப் பேச மாசு அறும்.   
599   பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.   
600   பேராசை பெருநட்டம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #44 on: December 20, 2012, 03:00:15 AM »
601   பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்   
602   பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.   
603   பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.   
604   பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.   
605   பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.   
606   பொறி வென்றவனே அறிவின் குருவாம்.   
607   பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.   
608   பொறுமை கடலினும் பெரிது.   
609   பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.   
610   பொல்லாதது போகிற வழியே போகிறது.   
611   போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.   
612   போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.   
613   போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?   
614   மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.   
615   மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.   
616   மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.   
617   மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?   
618   மண்டையுள்ள வரை சளி போகாது.   
619   மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.   
620   மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.   
621   மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.   
622   மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.   
623   மனமுண்டால் மார்க்கம் உண்டு   
624   மனமுரண்டிற்கு மருந்தில்லை.   
625   மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.