Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 231573 times)

Offline Madhurangi

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 55
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கடல்...

கடலாக நன் இருந்தால் அலையாக  நீ வருவாய் பிரிவென்பதே நமக்கேதடா?
பூவாக நான் இருந்தால் மணமாக நீ உதிப்பாய் அழிவு கூட  ஒன்றாகவேயாடா?
கண நேர பிரிவு கூட யுகமென்பாய் நம் அன்புக்கு அழிவேதடா ?
நான் சிரிக்க நீ சொல்லும் பொய்கள் தரும் இன்பங்களுக்கு எல்லையேதடா?
கன்னம் சுருங்கும் வயதிலும் காதலுடன் கரம் பிடிக்கும் உன் அருகாமைக்கு ஈடேதடா?
உடலென்பது அழியுமென்றால் ,
நம் தீரா காதலின் நினைவுகளுக்கு முடிவேதடா ? 
பிரிவென்ற சொல்லை அகராதியில் நீக்க முறையிடுவோம் ஒன்றாகவேடா..

அடுத்த தலைப்பு - அகராதி