FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 27, 2019, 10:15:24 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: Forum on May 27, 2019, 10:15:24 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 219
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team  சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/219.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: thamilan on May 27, 2019, 02:49:16 PM
மனிதன்
வண்ணங்களால் வாழ்கிறான்
வண்ணங்களுக்காகவே வாழ்கிறான்

மனிதர்கள் எல்லோருக்கும் கண்கள் மூக்கு வாய்
கைகள் கால்கள் எல்லாமே
ஒரே விதம் தான்
மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது
நிறம் தான்

அமெரிக்கனாய் இருந்தாலும்
ஆபிரிக்கனாய் இருந்தாலும்
ஆசியனாய் இருந்தாலும்
சதையும் இரத்தமும் ஒரே நிறம் தான்
உடலின் நிறத்தை வைத்து
பிரிவினை எதற்கு

இறைவனின் படைப்பில்
மிருகங்களைத் தவிர
மனிதர்கள் அனைவருக்குமே
ஆறறிவு தான்
அந்த அறிவை பயன்படுத்துகிறவன்
உயர்ந்தவன் ஆகிறான்
பயன்படுத்தாதவர்கள் தாழ்ந்தவன் ஆகிறான்

வெள்ளைக்காரர்களின் பிச்சைக்காரர்கள் இல்லையா
கறுப்பர்களின் கோடீஸ்வரர்கள் இல்லையா
அமெரிக்கன் மட்டுமா நிலவில் காலடி வைத்தான்
ஆசியனும் நிலவில் கால் வைத்தான்

தோலின் கருப்பை அசிங்கம் என்பான்
கருவிழி கருப்பை வைத்து
கவிதைகள் படைப்பான்
சிவப்பு என்றால் அபாயத்தின் அறிகுறி என்பான்
கன்னச்சிவப்பை காதல் என்பான்

சிலர் தங்கள் உண்மையான‌
வண்ணத்தை மறைத்துக்கொண்டு
உலகை ஏமாற்ற‌
வேறு வண்ணத்தை பூசிக்கொள்கிறார்கள்

சிலர் பச்சோந்திகள்
அடிக்கடி வண்ணம் மாறுவார்கள்
நிறம் என்னடா நிறம் நிறம்
மனம் தானடா நிரந்தரம் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: Poocha on May 27, 2019, 05:57:56 PM
மனிதனின் நிறம்
என்றும் தண்ணீரை போல

இருக்கும் இடத்திரிக்கேற்ப
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி
போல

சூழ்நிலைக்கேற்ப
தன் குணத்தை
மாற்றிக்கொள்வான்

தோலின் நிறம்
அவன் சுபாவத்தை
பிரதிபலிப்பதில்லை
இருந்தும்

வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்லமாட்டான்
என காலம் காலமாய்
நம்பி
பொய் பரப்பி வருகின்றனர்

கண் உள்வாங்கும்
ஒளியினூடே கடத்த படும்
நிறம்
சில நேரம் காட்சிப்பிழை
ஆகலாம்

மரபியல் சுழற்சியில்
பாரம்பரிய மாற்றத்தில்
உண்டாகும் நிறம்கொண்டு
எடைபோடாதே

பழக
தொடங்குகையில்
தோன்றும் நிறம்
பழகிய பின்
நிறமறியதாய் தோன்றலாம்

மனித
மனங்களுக்குள்
இருக்கும்
மிருகமும், மனிதமும்
அவனை
வெளிப்படுத்தும்
அகோரமாகவும்
அழகாகவும்

நிர்வாணமான
குழந்தையை
காணும் கண் கொண்டு
பார்க்க பழகி கொள்
அது உன்னில் கடத்துவது
சஞ்சலமற்ற
புன்னகை மட்டுமே

வெளி நிறம்
ஒரு மாயை
உள் நிறம் காண்
மகிழ்வாய்
வாழ்வாய்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: JeGaTisH on May 28, 2019, 07:14:54 PM
வர்ணங்களினால் ஆன பூமி இது
அதில் மனிதர்கள் மட்டும் எத்துணை வகை .

கருப்பு உழைப்போட வர்ணம்
அதை காரணம் காட்டி
விளக்கி வைப்பதுவும் தகுமோ !

பூமி சிரிக்க மழை பெய்யும் மேகம் கருப்பு
அந்தி வானம் அதில் காண்பதுவோ சிவப்பு !

வர்ணத்தில் ஒருவனின் உழைப்பை பார்க்காதே
அவன் திறமையின் உழைப்பை பார் !

வர்ணத்தில் உண்டானது இருள்
அதை ஒளிகொண்டு மாற்றிவிட்டான் மனிதன்  .

மண் அடியில் இருக்கும் மாணிக்கம் கூட
அதன் நிறம் கருப்பு என்பதே அதன் சிறப்பு !

ஓர் பெண்ணின் அழகில் ஆசைப்படுவான்
அவள் மனதின் கணவன் அவதில்லை !

அழகு என்பது சில வருடம் 
அதை அங்கே அங்கே இருக்கும்
மனிதர்களில் அழகை பார்க்காதே
ஒருவர் அன்பு காட்டுபவரா என பார் !


அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: சிற்பி on May 29, 2019, 04:16:58 PM
     நிற வெறி

அன்பு என்பது
ஒரு மனிதனின் முகவரி
ஆனால் இங்கே
மனிதர்களுக்குள் எத்தனை அடையாளம்

இனம் மதம் மொழி நிறம்
எத்தனை எத்தனை பிரிவுகள்
தன்னைபோல் மனிதனை
தன்னைவிட தாழ்ந்தவனாக
நினைக்கிறான்

கருப்பு வெள்ளை போராட்டங்கள்
இந்த பூமிக்கு ஒன்றும்
புதியதல்ல

வெள்ளை நிறத்தில் நீ இருந்தால்
என்ன மனிதா
உனதுள்ளம் இருளில் இருக்கிறது
கருப்பான மனிதனோ
வெளிச்சத்தில் வாழ்கிறான்

நிறவெறி பிடித்தவனே
உன் கண்களையே பார்
கருவிழி இல்லாமல்
உன்னால் பார்க்க முடியுமா

இரவும் பகலும்
சேர்ந்தால் தான் நாட்கள்
கருப்பும் வெண்மையும்
கலந்தது தான் வாழ்க்கை

வறலாற்றின் சோகம்
கருப்பு இன மக்களின்
விடுதலைக்காக
இருபத்தி ஏழு ஆண்டுகள்
சிறையில் இருந்தார்
நெல்சன் மண்டேலோ

தென்னாப்பிரிக்காவில்
காந்தியடிகள்
இரயிலில் இருந்து
இறக்கிவிடப்பட்டு
அவமானப்படுத்தப்பட்டார்

மனித சமுதாயம்
தோற்றுபோனதற்க்கு
இந்த காரணங்களே இருக்கிறது

இனம் மதம் நிறம்.....................
கடவுள் பூமியை
அனைவருக்கும் சமமாகதான்
படைத்திருக்கிறார்
மனிதர்கள் ஏனோ
இப்படி பிரிந்தே வாழ்கிறார்கள்...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: JasHaa on May 30, 2019, 06:52:06 PM
￰கனவுகளில் இல்லையடா  ஜாதி 
கவியுலகில் இல்லையடா பேதம் 
காசுலகில் தானடா  இந்த நிறமும்  குணமும்  !

தாயின்  கருவறையை நிந்திப்பதும் 
பிறப்புகளை  ஏளனமாய்  தூற்றுவதும்   
மனித மனங்களின் வக்கிரம் 

உச்சிமுடி முதல் உடுத்தும்  உடுப்பு  வரை 
கருமை  உங்களது  ஆடம்பரம்!
வணங்கிடும்  கடவுள்  முதல் வாகனம் வரை
கருமை உங்களது வாழ்வியல்  முறை  !
ஆயினும்  ,
உயிரும் உணர்வுடன்  வாழ்ந்திடும் கருமை
உனக்கு  வேண்டாமா  ?

உடலில்  ஓடும் குருதியின்  நிறம் அறிவாயோ ?
உணர்வுகளின்  பசி  அறியுமோ நிறமாற்றத்தை?
திருமண சந்தையில்  வெள்ளைநிற  மோகம்
கொண்ட  வக்கிரங்களுக்கு 
உடற்பசி  மோகத்தில்  கருமை
கண்ணில்  படுவதில்லையோ  ?

மழையில் நனைவதை  விட குருதியில்  நனைகிறதடா  இப்புவியில்  தளம் ...
குருதியில்  குளித்து  குளித்து வறண்டு  போனதடா
பூமகள்  அவள்  தாய்மடி ...

நேசமாய் நேர்த்தியாய்  செய்யப்பட்ட  ஆயுதம்
அழகாய்  வெட்டி  சாய்க்கிறதடா
நிறம் எனும் மானுடத்தை  !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: RishiKa on June 02, 2019, 10:06:12 PM


வெண்மையில் எத்தனை வண்ணங்கள்?
மனிதரில் எத்தனை நிறங்கள் ?
கருப்பும் வெளுப்பும் இங்கே ...
கதை சொல்லும் காலத்தை !

ஆதி மனிதன் நிறம் கருப்புதான் ..
பாதி காலம் கழிந்த பிறகே ...
வந்தது நிற வெறி !
மேலோர் ..கீழோர்  என வந்தது ஜாதி வெறி !

உயிர் துடிக்கும் வேளையிலும் ...
நிற ,ஜாதி வெறி பார்க்கும் மனிதா ...
ரத்தத்தை  தரம் தான் பிரிக்கும் ...அன்றி ..
நிறம் பார்த்து பிரிப்பதில்லை ..

கருப்பு நிறத்தால் விலகி ஓடும் மனிதா ...
உன் நிறம் ஒரு ஊனமல்ல ...
உன்  தாழ்வு எண்ணம் தான் ஊனம் ...
வாழ்வை வெல்ல நிறம் ஒரு தடை அல்ல ...

நிற வெறியாளர்களே ..
ஒருவேளை நீங்கள் திருந்தினால் ...
கல்லறையில் உங்கள் ரத்தத்தை தெளியுங்கள் ..
இறந்தவனும் உயிர்த்தெழுவான் ..
வேற்றுமையை வேள்வி  தீயில் போட்டு பொசுக்குவோம் .
மனிதத்தின் மகத்துவம்  மலரட்டும் !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219
Post by: Mr.BeaN on June 07, 2019, 05:44:11 PM
இருள் நிறைந்ந சூழலிலே ..
பிறப்பெடுக்கும் ஓர் இனம்தான்!

இமை திறக்கும் போதினிலே ..
தன் நிலையை தான் மறந்தான்!

விழி கொண்டு காண்கின்ற..,
திசையாவும் பல நிறம்தான்!

பிரித்தறியும் மனிதர்க்கு .,
அத்திறனும் ஓர் வரம்தான்!

நிறம் பிரிக்கும் கதிரவன்தான்!!
அத்தனைக்கும் ஆதியாம்..

நிறம் பிரித்தல் நியாயமில்லை..
அவன் சொல்லும் நீதியாம்!

சுற்றுகின்ற பூமியை.
உற்று நீயும் பார்த்திடு..

கற்று தேர்ந்த நல்லோரின்..
கருத்தை கொஞ்சம் கேட்டிடு..

படைப்புகள் பலவான போதும்..
ஓர் அடைப்புக்குள் யாவரும் சமமே..
என்று நீ உணர்நதிட்டால் போதும்..
உயர்ந்திடும் மனிதத்தின் குணமே!!!

அன்பர்களுக்காக கருப்பன் பீன்....

[/size][/color]