காரணம்
எச் ஐ வி -1 இன் ஒளி நுண்ணொளி எலக்ட்ரான் நுண் வரைபடம், பச்சை நிறத்துடன் ,வளர்க்கப்பட்ட நிண அணுவில் இருந்து வெளிப்படுகிறது.அழிக்கப்பட்ட உடன் செல்வழி நோயெதிர்ப்பு ஒழிக்கப்படுகிறது. இரத்தத்தில் மீதமிருக்கும் CD4+ T செல்களின் அளவைப்பொருத்தும், மேலே குறிப்பிட்டதைப் போல ஏனைய தொற்றுக்களினைப்பொருத்தும் தீவிர எச் ஐ வி தொற்று நாளடைவில் நோய் உட்புதை எச் ஐ வி தொற்றாகவும் அதன்பின்னர் ஆரம்ப அறிகுறிகளுடைய எச் ஐ வி தொடராகவும் இறுதியாக எயிட்ஸாகவும் முன்னேறுகிறது.
ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி எயிட்ஸாக முன்னேறுவதற்காகும் கால இடைநிலை 9 முதல் 10 வருடங்களாகவும், எயிட்ஸ் உருவான பின்னர் உயிர்வாழும் காலத்தின் இடைநிலை 9.2 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது.எனினும் மருத்துவ குணாதிசயங்களுடனான வியாதியாக முன்னேறும் வேகம் மனிதர்களுக்கிடையே இரு வாரங்கள் முதல் இருபது வருடஙகள் வரையிலான மாறுபட்ட காலஅளவை உடையதாய் காணப்படுகிறது.
நோய் வளர்ச்சியின் வேகத்தை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.இதில் நோயாளியின் நோயெதிர்ப்புசக்தி எனும் எச் ஐ வி யிலிருந்து உடலைப் பாதுகாக்கும் காரணிகளும் அடங்கும்.வயதானவர்கள் பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளதால் அத்தகையோர் நோய் முற்றல் மிக விரைவாக நடக்கும் ஆபத்தைப் பெற்றிருக்கின்றனர்.
மருத்துவவசதியின்மை மற்றும் காசநோய் போன்ற சகத்தொற்று நோய்கள் ஆகியன விரைவான நோய் முற்றுதலுக்கு வழிவகுக்கின்றன. நோய்த்தாக்கிய மனிதனின் மரபணு பாரம்பரியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே சிலர் குறிப்பிட்ட சில வகை எச் ஐ வி கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாயிருக்கின்றனர். டுத்துக்காட்டாக ஒத்த மரபு நிலை CCR5-Δ32 மாறுபாடு உடையவர்கள், சில எச் ஐ வி வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உடையவர்களாய் இருக்கின்றனர். எச் ஐ வி மரபியல் மாறுபாடுகள் உடையதாக இருப்பதால் பல்வேறு வகைகளாக தோன்றி நோயமுற்றலில் வேறுபட்ட வேகத்தை கொண்டனவாய் இருக்கிறது
உடலுறவின் வாயிலாக பரவுதல் ஒருவரின் உடல் திரவங்களோடு இன்னொருவரின் ஆசனவாய், பிறப்புறுப்பு அல்லது வாயின் உட்பகுதியில் உள்ள படர்ஜவ்வுப்படலம் தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்றுகொள்ளுபவர்களுக்கு, செருகச் செய்பவர்களை விட ஆபத்து அதிகமாயும், பாதுகாப்பற்ற ஆசனவாய் வழி உடலுறவு மேற்கொள்ளுபவர்களுக்கு, பிறப்புறுப்பு வழி மற்றும் வாய் வழியேயான உடலுறுவு மேற்கொள்பவர்களை விட நோய்த் தொற்றும் ஆபத்து அதிகமாயும் காணப்படுகிறது.
எனினும் செருகச் செய்பவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து சம அளவில் இருப்பதால், வாய்வழி உறவும் பதுகாப்பானதென்று கூறுவதற்கில்லை[39],[40]. பலவந்தபடுத்தி உடலுறவு கொள்ளுதல் ஆணுறை பயன்படுத்தாமலேயே கொள்ளப்படுவதாலும், யோனிக்குழாய்க்கு அதிக சேதம் விளைவிப்பதாலும் எச் ஐ வி பரவுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது[.
ஏனைய பாலியல் நோய்த்தொற்றுக்கள் (STI) genital ulcerபிறப்புறுப்புகளில் நுண்ணிய அரிமான புண்களை ஏற்படுத்தி தோல் மேலணியை சேதப்படுத்துவதன் மூலமும், விந்து மற்றும் யோனி மட கசிவுகளில் சிறுக சிறுக சேர்ந்துகொண்டிருக்கும் எச் ஐ வி தொற்றிய அல்லது தொற்றுக்காளாகும் நிணத்திசுக்கள் மற்றும் மேக்ரோபேஜ்களின் மூலமும் எச் ஐ வி யின் கடத்துதலையும் நோய்த்தொற்றுதலையும் அதிகரிக்கச்செய்கிறது. சப்-சகாரன் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நோய்ப்பரவல் குறித்த ஆய்வுகள் பால்வினை நோய்களான சிபிலிஸ், கேன்க்ராய்ட் முதலியவைகளால் உருவாக்கப்படும் பிறப்புறுப்பு அரிமானப் புண்கள், எச் ஐ வி நோய்த்தொற்றை நான்கு மடங்குகள் அதிகரிக்கச் செய்வதாய் கூறுகின்றன. நிண அணுக்கள் மற்றும் மேக்ரோபேஜ்களின் கூட்டணியை தன்னைச் சார்ந்த பகுதிகளில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் கோனோரியா, கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பால்வினை நோய்கள் நோய்தொற்றும் அபாயத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்கச் செய்வதாய் இருக்கின்றன.
எச் ஐ வி யின் நோய்பரப்புதல், அதன் நோய்த்தொற்று திறனின் அடையாளக் குறியீட்டைப் பொறுத்தும் நோயில்லாதவரின் நோயத்தொற்றுக்காளாகும் அபாயத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நோயின் நிலையைப் பொறுத்து நோய்த்தொற்றுதிறன் மாறுபடுவதாயும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானதாயும் இருக்கிறது. இரத்தத்தில் நச்சுயிரிசுமை கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தாலும் விந்து மற்றும் பிறப்புறுப்புக் கசிவுகள் நச்சுயிரியற்று உள்ளன எனச் சொல்வதற்கில்லை.
எனினும் இரத்தத்தில் ஏற்படும் ஒவ்வொரு பத்து மடங்கு எச் ஐ வி அதிகரிப்பும் நோய்த்தொற்றை 81 % அதிகரிக்கும்[42][43]. ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்ணுறுப்பின் நுண்ணுயிரிச் சூழலாலும், உடல் இயக்கு இயலினாலும், பெண்கள் எச் ஐ வி நோயத்தொற்றுக்காளாகும் வாய்ப்பையும் பால்வினை நோய்களுக்காளாகும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர்[44],[45]
எச் ஐ வி யின் ஒரு மாதிரியால் தொற்றப்பட்டவர்கள் பிற்காலங்களில் வேறு ஆபத்தான மாதிரிகளால் தொற்றக்கூடும்.
ஒரே முறை உடலுறவினால் நோய்த்தொற்றுவது கடினம். பலருடன் வைத்திருக்கும் நீண்ட கால பாலியல் தொடர்பு களின் போக்குடன், அதிவேகமான நோய்த்தொற்று பரவல் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை இந்நச்சுயிரி நோயற்ற துணைக்குப் பரவி அவரிடமிருந்து பிறருக்கு பரவ வழிவகுக்கிறது.ஒருவர் ஒரு காலகட்டத்தில் இன்னொருவருடன் மற்றுமே உறவு வைத்திருப்பது அல்லது எப்போதாவது நிகழும் உடலுறவுகள் குறைந்த நோய்த்தொற்று வேகத்தைக் கொண்டிருக்கிறது[46].
ஆணோடு பெண் வைத்திருக்கும் உறவின் மூலம் எச் ஐ வி பரவுவது வேற்றிடங்களை விட ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவுகிறது. இதற்கான காரணம் 50 % ஆப்பிரிக்க பெண்களின் யோனியின் படர் சவ்வினை சிதைக்கும் ஸ்சிஸ்டோஸோமியாசிஸ் எனும் ஒட்டுண்ணி வியாதியாகும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன