Author Topic: பாக்கியம் பெற்ற ஆலிவ்!  (Read 1462 times)

Offline Yousuf

ஆலிவ் எழுபது வகையான நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவமுடையது; அவற்றில் தொழுநோயும் ஒன்று என்று தெரிவிக்கிறார்.

"ஆலிவின் ஒவ்வொரு பகுதியும் பயன் மிக்கது. இதன் எண்ணை விளக்கேற்றவும் சமைக்கவும்,சருமத்தின் சொரசொரப்பை நீக்கி இயல்பான நிலையில் வைக்கவும் பயன்படுத்தப் படுகிறது.இதன் விறகுகள் பாலைவன வெளியில்   நெருப்பூட்டவும், இதன் சாம்பல் பட்டுத் துணியைக் கழுவவும் பயன் படுத்தப் படுகிறன.

(பாலைவனங்களில் காற்றுடன் புழுதியும் கலந்து வீசுவதால் சாதாரண மரக்கட்டைகள் எரிக்கப்படும் போது எளிதில் அணைந்து விடும். ஆனால் ஆலிவ் விறகால் எரிக்கப்படும் நெருப்பு இவற்றை எதிர்கொண்டு நீண்ட நேரம் அணையாமல் இருக்கும்)

ஆலிவ் மரங்களின் ஆயுட்காலம் மற்ற மரங்களின் ஆயுட்காலத்தை விட அதிகம். இவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன் தருவன. மரமாகி நாற்பது ஆண்டுகள் கழித்தே ஆலிவ் காய்க்கத் தொடங்கும். இதன் பல்வேறு வகையான பலன்கள் 'திப்' எனும் மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய மருத்துவக் குணங்களையுடைய பசுமையான ஆலிவ் எண்ணை (Virgin Olive Oil) இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று ஐரோப்பாவின் Annals of Internal Medicine என்னும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வறிக்கையின் படி ஆலிவ் எண்ணையிலுள்ள நச்சு-எதிர்ப்புக் கலவை (Antioxidant Plant Compound), இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கிறது. இதிலுள்ள பாலிபினால்ஸ் (Poliphenols) மற்ற எண்ணைகளை விட ஆலிவ் எண்ணையில் மிகுந்துள்ளது. இதயப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.

Virgin olive oil is the only vegetable oil that's rich in polyphenols, Dr. Maria-Isabel Covas, the study's lead researcher, told Reuters Health.

All vegetable oils other than virgin olive oil are submitted to a (refining) process in which polyphenols are practically lost," explained Covas, a researcher at the Municipal Institute for Medical Research in Barcelona, Spain.


அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) இரு தேக்கரண்டி (23 கிராம்) ஆலிவ் எண்ணையை தினமும் உட்கொண்டால் இதயம் சம்பந்தமான நோய்கள் எளிதில் அண்டாது என்ற மருத்துவக் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.

Olive oil contains monounsaturated fat, which can lower total cholesterol and low-density lipoprotein (LDL, or "bad") cholesterol in your blood. According to the FDA, you get the most of these benefits by substituting olive oil for saturated fats, such as in butter, rather than just adding more olive oil to your diet.

படைத்தவனால் 'பாக்கியம் பெற்ற எண்ணை' என்று புகழாரம் சூட்டப்பட்ட ஆலிவின் அரும் மருத்துவக் குணங்களையும் சிறப்புக் கூறுகளையும் கருத்தில் கொண்டால்,  ஆலிவ் எண்ணை உண்மையில் பாக்கியம் பெற்ற எண்ணை என்பதில் மிகையில்லை.

படைத்தவனுக்கே புகழனைத்தும்!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாக்கியம் பெற்ற ஆலிவ்!
« Reply #1 on: July 26, 2011, 12:25:44 AM »
inga ellam oliv oil than athikam use panuvanga.. nalla     pthivu ;)