Author Topic: :முட்டை பொடிமாஸ்  (Read 1417 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
:முட்டை பொடிமாஸ்
« on: July 30, 2011, 03:00:35 PM »
இன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமாஸை ட்ரை பண்ணி பார்க்கலாமே...!

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

* இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

* அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

* முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

* சூடான, சுவையான முட்டை கறி தயார்.

குறிப்பு: இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்