Author Topic: :கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்  (Read 1132 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
:கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்
« on: July 30, 2011, 03:08:12 PM »
பிஸ்கட்டில் எத்தனையோ வகையான பிஸ்கட்டெல்லாம் சாப்ட்ருப்பீங்க... கார்ன் ஓட்ஸ் பிஸ்கட் சாப்ட்ருக்கீங்களா... எளிதில் செய்யக்கூடிய மாலை நேர ஸ்நாக்ஸான இந்த பிஸ்கட்டை செஞ்சு சும்மா அசத்துங்க.......

தேவையான பொருட்கள்:

கார்ன் - 1 கப்
ஓட்ஸ் - 1/2 கப்
பிரெட் துண்டுகள் - 3
மசாலா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு = சிறிதிளவு
எண்ணைய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கார்னை தனியாக வெட்டிக் கொள்ளவும். (அல்லது Frozen கார்ன்கூட பயன்படுத்தலாம். (Fresh Corn என்றால் நல்லா இருக்கும்.)

* ஓட்ஸினை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் பிரெட் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* கார்னினை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த கார்ன், பொடித்த ஓட்ஸ், பிரெட் துண்டுகள், மசாலா தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையினை விரும்பிய வடிவத்தில் தட்டி ட்ரேயில் வைத்து கொள்ளவும்.

* அவனை 400 F-ல் மூற்சூடு செய்து கொள்ளவும்.

* பிஸ்கட்டுகளை அவனில் 400 F-ல் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

* பிறகு பிஸ்கட்டுகளை திருப்பிவிட்டு மேலும் 7-8 நிமிடங்கள் வேகவிடவும்.

* சுவையான எளிதில் செய்யக்கூடிய ஹெல்தியான பிஸ்கட் ரெடி.

குறிப்பு:

* கார்னில் நிறைய தண்­ணீர் இருப்பதால், தனியாக தண்­ணீர் சேர்க்க தேவையில்லை.

* Whole Grains Bread பயன்படுத்தினால் ரொம்ப நல்லது.

* அவரவர் விருப்பம் போல காரத்தினை சேர்த்து கொள்ளலாம்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்