Author Topic: மாம்பழப் பாயசம்  (Read 1083 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
மாம்பழப் பாயசம்
« on: July 31, 2011, 08:27:53 PM »
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் முக்கனியின் முதல் கனி மாம்பழம். பார்த்த உடன் சாப்பிடத் தூண்டும் மாம்பழ சீசன் ஆரம்பிச்சாச்சு... இனி என்ன சுவையான மாம்பழ ரெசிபியா சமைச்சு அசத்துங்க...!

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

* பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.

* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்