Author Topic: கேரட் கீர்  (Read 1069 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கேரட் கீர்
« on: July 31, 2011, 08:30:37 PM »
பண்டிகை காலங்களில் பாயசம் அல்லது கீர் செய்வது நம் இந்திய கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. செய்யும் பாயசத்தை ஆரோக்கியம் மிக்க காய்கறியோடு கலந்து செய்தோமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்....?

தேவையான பொருட்கள்:

நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கேரட் - 4
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 150 கிராம்
குங்குமப்பூ - 1/4 டீ ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

* அடி கனமான வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

* கேரட்டைப் பூத்துருவலாகத் துருவிக் கொண்டு அதனை சூடான நெய்யில் மிதமான தீயில் வதக்கவும்.

* கேரட் துருவல் பச்சை வாசனைபோக வதங்கியவுடன், காய்ச்சிய பாலை ஊற்றி நடுநடுவே கலந்து விட்டபடி கேரட் துருவலை வேக வைக்கவும்.

* கேரட் துருவல் வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கொதிவிட்டு, ஏலக்காய்த் தூள் தூவவும்.

* நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை தூவி அலங்கரித்து பரிமாறவும்,

குறிப்பு: கேரட் கீர்-ஐ வெயில் காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்னர் ஜில்லென்று பரிமாறலாம். குளிர் காலங்களில் 'சுடச்சுட' பரிமாறலாம். இரண்டுமே மிகவும் சுவையாக இருக்கும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்