Author Topic: எக் பாஸ்தா  (Read 1102 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
எக் பாஸ்தா
« on: July 31, 2011, 08:38:35 PM »
உலகம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு. எதிலயும் இப்ப ஃபாஸ்ட் அண்ட் டேஸ்ட் தான். துரித உணவுகளுக்குள்ள கிரேஸ் என்னவோ கூடிக்கிட்டேத்தான் இருக்கு. உங்க வீட்ல கூட பாஸ்தா செய்யணும்னு ஆசையா? கண்டபடி ஃபாஸ்ட் புட்ஸ்ல பாஸ்தா வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்லயே நிறையா காய்கறி சேர்த்து எக் பாஸ்தா செய்து ஹெல்த்தியா சாப்பிடுங்க..!

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1/4 பாகம்
முட்டை - 2
குடைமிளகாய் - 1/4 பாகம்
சீரகத்தூள் - அரை டீ ஸ்பூன்
கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
 
செய்முறை:

* வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 
* பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
 
* கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.
 
* அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும்.
 
* நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும். முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும்.
 
* தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.
 
* சுவையான எக் பாஸ்தா ரெடி.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்