FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 07:08:07 PM

Title: கூகுள் வழங்கும் அடுத்த பிரம்மாண்டமான டேப்லட்?
Post by: Anu on October 28, 2012, 07:08:07 PM
 நியூ யார்கில் நடக்கவிருக்கும் கண்காட்சியில் கூகுள் நிறுவனம் தனது புதிய நெக்சஸ் டேப்லட்டினை அறிமுகம் செய்யும் என்று காற்று வழி செய்திகள் பல கசிந்து கொண்டிருக்கின்றது.
மேன்ட்டா என்ற பெயர் கொண்ட இந்த டேப்லட் 10 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும் என்று கூடுதல் தகவல்களும் கசிந்து வருகிறது. இந்த 10 இஞ்ச் டேப்லட், பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வழங்கப்பட இருக்கிறது. இதன் 10 இஞ்ச் திரை 2560 X 1600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்குவதாக இருக்கும்.
அதோடு இன்னும் கூடுதல் வசதிகளை வழங்க இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தின் உதவியினையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளம் கொடுப்பது போன்ற பல புதிய வசதிகளை, ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளமும் வழங்கும் என்று தகவல்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இது மட்டும் அல்லாமல் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம் கொண்ட புதிய கூகுள் நெக்சஸ் ஸ்மார்ட்போனும், எல்ஜி நெக்சஸ்-4 போன்ற புதிய எலக்ட்ரானிக் சாதனங்களும் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கூகுளின் இந்த புதிய டேப்லட் பற்றிய அதிகமான தொழில் நுட்ப விவரங்கள் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. நியூ யார்கில்
நடக்கவிருக்கும் கூகுள் கண்காட்சியில் புதிய எலக்ட்ரானிக் சாதனங்களின் தொழில் நுட்பம் பற்றிய தகவல்களை எளிதாக பெறலாம்.