FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 07:10:36 PM

Title: சாம்சங் வழங்கும் மிகப் பெரிய டிவி
Post by: Anu on October 28, 2012, 07:10:36 PM
சாம்சங் நிறுவனம் ஒரு மிகப் பெரிய டிவியைக் களமிறக்கிறது. அதாவது 75 இன்ச் அளவில் வரும் இந்த புதிய டிவிக்கு இஎஸ்9000 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தியவில் களம் இறங்கி இருக்கும் இந்த டிவி ரூ.7,50,000க்கு விற்கப்படுகிறது. இந்த டிவி சாம்சங்கின் மினிஸ்கியூல் 7.9எம்எம் மற்றும் கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் இன்டராக்சன்  என்ற இயற்கை செய்கைகள் கொண்ட இன்டராக்சன் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் ஸ்மார்ட் இவலூசன் என்ற சிறப்பு தொழில் நுட்பத்தையும் இந்த டிவி கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிவியில் சவுண்ட் ஷேர் என்ற ஒரு தொழில் நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்த டிவியை வயர்லஸ் மூலம் 6 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் வயர்லஸ் டோக் சிஸ்டத்தில் இணைக்க முடியும்.
இந்த டிவியில் மேம்பட்ட யுஐ உள்ளது. மேலும் இந்த டிவி டூவல் கோர் ப்ராசஸரில் இயங்குகிறது. இந்த டிவியில் சாம்சங்கின் மைக்ரோ டிம்மிங் அல்டிமேட் மற்றும் பிரிசிஷன் டெக்னாலஜி உள்ளதால் இதில் படங்கள் மிகத் தெளிவாக இருக்கும்.
மேலும் சாம்சங் இந்த டிவியில் ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற அப்ளிகேசனையும் இணைத்திருக்கிறது. சாம்சங்கின் அப் ஸ்டோரில் இந்த அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேசன் இஎஸ்7500, இஎஸ்8000 எல்இடி, இஎஸ்9000 போன்ற எல்இடி டிவிகளிலும் மற்றும் இ8000 ப்ளாஸ்மா டிவிகளிலும் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சாம்சங் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய தீபாவளி பரிசையும் வழங்க இருக்கிறது. அதாவது 46 இன்ச் அல்லது அதைவிட பெரிய எல்இடி அல்லது ப்ளாஸ்மா டிவியை வாங்குபவருக்கு கேலக்ஸி டேப் 7 மற்றும் 11 மாதத்திற்கான நிதித் திட்டத்தையும் வழங்குகிறது.