FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: எஸ்கே on May 21, 2021, 10:25:26 AM

Title: பாவ புண்ணியம் (இந்து மதம்)
Post by: எஸ்கே on May 21, 2021, 10:25:26 AM

பாவ புண்ணியம் (அரிச்சந்திர புராணம்)

யாரை சொர்க்கத்துக்கு அனுப்புவது? யாரை நரகத்துக்கு அனுப்புவது? பாவம் என்பது என்ன? புண்ணியம் என்பது என்ன...? எனக்கு விளக்க வேண்டும் சாமி’ என்று வேண்டினான்.

'வீரஜாம்புகா... பாவம் என்பது... நடக்கிற வழியிலே நடைபாதை கட்டாதவனும், போகிற வழியிலே முள்ளை போட்டவனும், கோதானம் கொடுக்காதவனும், அன்னதானம் கொடுக்காதவனும், விதைக்கிற விதையிலே பதறு கலந்தவனும், எல்லையைப் புரட்டியவனும், கொல்லையைப் புரட்டியவனும், வரப்பை வெட்டியவனும்... உழுகிற மாட்டை நுகத்தடியால் அடித்தவனும், தாயை அடித்தவனும், தாய்ப்பால் நோக அடித்தவனும், கர்ப்பிணியை காலால் உதைத்தவனும், வாத்தியார் கூலி, வண்ணாங் கூலி, அம்பட்டன் கூலி. பறையாங் கூலி, செக்கிலிக் கூலி கொடுக்காதவனும்... இவங்களுக்கெல்லாம் பாம்பு குழி, பல்லி குழி, அரணை குழி, அறாக்குழி தான் கிடைக்கும். இவர்களைளெல்லாம் நரகத்துக்குப் போவார்கள்’ என்றான்.

'சரி சாமி... புண்ணியம் என்பது என்ன?’ என்று கேட்டான்.

'நடக்கிற வழியிலே நடைபாதை கட்டியவனும், போகிறவழியிலே முள்ளைப் போடாதவனும், கோதானம் கொடுத்தவனும், அன்னதானம் கொடுத்தவனும், விதைக்கிற விதையிலே பதறு கலக்காதவனும், எல்லையைப் புரட்டாதவனும், கொல்லையைப் புரட்டாதவனும், வரப்பை வெட்டாதவனும், உழுகிற மாட்டை நுகத்தடியால் அடிக்காதவனும், தாயை அடிக்காதவனும், தாய்ப்பால் நோக அடிக்காதவனும், கர்ப்பிணியை காலால் உதைக்காதவனும், வாத்தியார் கூலி, வண்ணாங் கூலி, அம்பட்டன் கூலி, பறையங் கூலி, செக்கிலி கூலி, எல்லார் கூலியையும் கொடுத்தவனும்... இவர்களெல்லாரும் சொர்க்கத்தில் போய் சேமமாய் இருப்பார்கள்’ என்றான்