Author Topic: ஹார்ட் டிஸ்க்கில் இடம் எவ்வளவு?  (Read 564 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக் கையில், திடீரென ""ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்துவிட்டது. பைல்களை நீக்குங்கள்” என ஒரு அபாய எச்சரிக்கை நமக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நம்மில் பலரும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ள தற்காலிக பைல்களை முதலில் நீக்குவோம். இதற்கு சி கிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவோம். அடுத்தபடியாக, நாம் அடிக்கடி பயன்படுத்தாமல், எதுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு வைத்திருக்கும் பழைய சாப்ட்வேர் புரோகிராம்கள், அதிக நாள் விளையாடாமல் இருக்கும் கேம்ஸ், அல்லது விளையாடி சலித்துப் போன கேம்ஸ் என காலி செய்வோம். இவை அனைத்தையும் மேற்கொண்ட பின்னரும், ஹார்ட் டிஸ்க்கில் 10%க்கும் குறைவாகவே காலி இடம் உள்ளது என்ற செய்தி கிடைத்தால், என்ன செய்வது என்ற தலைவலி தொடங்கும். டிஸ்க்கின் டைரக்டரியைப் பார்க்கையில், நாம் இதுவரை காணாத போல்டர்கள் இருப்பதனைக் காணலாம். இதற்கு ஒரே தீர்வு, அனைத்து பார்ட்டிஷன் ட்ரைவ்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்து, எவ்வளவு இடம், எதற்காக கொண்டிருக்கின்றன என்பதனைக் காண்பதே ஆகும். இதனால் நமக்கு ஒவ்வொரு ட்ரைவாகவும், போல்டராகவும் சென்று, டிஸ்க்கின் இடம் சோதனை செய்திடும் நேரம் மிச்சம் ஆகும்.
இதற்கு உதவிடும் வகையில் நமக்குப் பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் தன்மைகளையும் சிறப்புகளையும் இங்கு காணலாம்.

1. ட்ரீ சைஸ் ப்ரீ (TreeSize Free):

இது மிகவும் பிரபலமான ஒரு புரோகிராம். சில விநாடிகளில், ஹார்ட் டிஸ்க்கில் எந்த ட்ரைவில், எந்த போல்டரில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனக் காட்டும். பார் கிராபிக்ஸ் மூலம் ட்ரைவ்கள் எடுத்துள்ள இடம் காட்டப்படும். போல்டரில் கிளிக் செய்தால், அதே போன்ற வரைபடம் மூலம் இடம் காட்டப்படும். இடம் மட்டுமின்றி, பைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வரைபடம் காட்டும் படி மாற்றி அமைக்கலாம். இந்த வரை படத்தின் குறியீடுகளுக்கான வண்ணத்தினையும் மாற்றி அமைக்கலாம். இவற்றின் அடிப்படையில் எந்த போல்டரில் அல்லது ட்ரைவில் உள்ள பைல்களை நீக்குவது என்ற முடிவை எடுக்கலாம். இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற, http://www.jamsoftware.com/treesize_free என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு மூன்று விதமான புரோகிராம்கள் தரப்படுகின்றன. இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது ஒன்று. யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கில் பதிந்து இயக்க; இன்னொன்று வேறு வகை மெமரியில் வைத்து எடுத்துச் செல்ல.

2. ஸ்பேஸ் ஸ்நிப்பர் (SpaceSniffer):

இதுவும் மிக வேகமாக இயங்கி, எந்த பைல் அல்லது போல்டர் அதிக இடம் பிடித்துள்ளது என்று காட்டும். இதனை ஒரு மேப் போல காட்டுவதால், மேலே சொல்லப்பட்ட ட்ரீ சைஸ் புரோகிராம் காட்டும், வரைபடத்தைக் காட்டிலும், வேகமாக நாம் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ற வகையில், ஒவ்வொரு ட்ரைவ் மற்றும் போல்டருக்கான பெட்டிகள் காட்டப்படுகின்றன. அதே போல், ஒவ்வொரு வகையான பைலுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பெட்டிகள் உள்ளன. மஞ்சள் வண்ணம் சிஸ்டம் பைல்களுக்கு, நீல வண்ணம் ஆர்க்கிவ் மற்றும் டிஸ்க் இமேஜ் பைல்களுக்கு என உள்ளன. நாமும் நமக்கு தெளிவாகத் தெரியும் வண்ணத்திற்கு இந்த கட்டங்களின் வண்ணத்தினை மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினைப் பெறhttp://www.uderzo.it/main_products/space_sniffer/ என்ற முகவரிக்குச் செல்லவும். இந்த புரோகிராமினை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி முதல் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகிறது.

3.ரிட் நேக்ஸ் (RidNacs):

இது ட்ரீ சைஸ் புரோகிராமின் சிக்கலற்ற எளிய, புரோகிராமாக இயங்குகிறது. டிஸ்க் ட்ரைவ் அல்லது போல்டர் எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ப கட்டக் கோடுகளை எண்ணிக்கையில் காட்டுகிறது. எந்த ட்ரைவினைச் சோதனை செய்திட விரும்புகிறோமோ, அதற்கான பட்டனில் கிளிக் செய்தவுடன் நமக்கு முடிவுகள் காட்டப்படுகின்றன. முடிவுகளை HTML/XML or CSV இகுங ஆகிய பார்மட்டில் சேவ் செய்து வைக்கலாம். இதனை http://www. splashsoft.de/Freeware/ridnacsdiskspaceusageanalyzer.html என்ற இணையதளத்தில் காணலாம். இதனை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாது. மேலும் இது ஜெர்மன் மொழியில் உள்ளது. இருப்பினும் டவுண்லோட் செய்து பயன்படுத்துவதில் எந்த பிழையும் ஏற்படவில்லை.

4. ஸினார்பிஸ் (Xinorbis):

உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எடுத்துக் கொண்டுள்ள இடம் குறித்து பலவகைத் தகவல்கள் வேண்டும் என விரும்பினால், ஸினார்பிஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். பைல் வகை, துணைப் பெயர், பைல் உருவான வரலாறு, அளவு எனப் பலவகைகளில் பைல்கள் கொண்டுள்ள இடத்தினைக் காட்டுகிறது. இவற்றுடன் ஒரு ட்ரைவ் அல்லது பைலில் உள்ள மிகப் பெரிய பைல், போல்டர்களில் எது அதிக இடத்தைக் கொண்டுள்ளது போன்ற விபரங்களும் காட்டப்படுகின்றன. இன்ஸ்டால் செய்து பயன்படுத்தக் கூடியது மற்றும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடியது என இருவகைகளில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதனைப் பெறhttp://www.xinorbis.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

5. விண்டிர்சாட் (WinDirStat):

ட்ரைவ் குறித்த அருமையான ட்ரீ தோற்றத்தை இந்த புரோகிராம் அளிக்கிறது. ஒவ்வொரு பைல் எடுத்துக் கொள்ளும் இடத்திற்கேற்ப, பெட்டிகளை அமைத்துக் காட்டுகிறது. பைல்கள் மற்றும் ட்ரைவ்கள், வண்ணங்களில் காட்டப்படுவது, தகவல்களைக் காட்சித் தோற்றமாகக் காட்டுவதாக அமைகிறது. இந்த வண்ணங்களையும் நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இதனை http://windirstat.info/download.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் எடுத்துச் சென்றுபயன்படுத்தும் வகையிலான புரோகிராம் இல்லை என்றாலும், PortableApps.com என்ற தளம் இதற்கான போர்ட்டபிள் புரோகிராம் ஒன்றைத் தருகிறது.
இணையத்தில் இன்னும் பல புரோகிராம்கள் இந்த செயல்பாட்டிற்கென கிடைத்தாலும், மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களிடையே மிகவும் பிரபலமானவை. நாம் எதிர்பார்க்கும் வகையில் இயங்கும் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.